27 Jun 2023

இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருவது சந்தேகம்? ஐசிசி விளக்கம்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அணியை அனுப்புவது இன்னும் ஊசலாட்டமாகவே உள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலினையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவக்கம் 

தமிழ்நாடு மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு அவர்கள் இன்று(ஜூன்.,27) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பஞ்சாப், கேரளா புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

பஞ்சாப் விளையாட்டு அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் மற்றும் கேரள எம்பி ஷஷி தரூர் ஆகியோர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் மொஹாலி மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களை சேர்க்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆஷஸ் 2023 : போட்டிக்கு ஒரு நாள் முன்னதாகவே விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து

ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூன் 28) தொடங்க உள்ள நிலையில், ஒரு நாள் முன்னதாக விளையாடும் லெவன் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.

கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை - தமிழக அரசு திட்டம் 

வெளிமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் தமிழ்நாடு மாநிலத்தில் தக்காளியின் விலை உயர்வானது மிகப்பெரும் உச்சத்தினை தொட்டுள்ளது.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையினை திறந்து கரும்பு அரவையை துவங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்டவற்றை கரும்பு விவசாயிகள் ஏற்கனவே செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரர் மற்றும் சகோதரி ஒரே நாளில் மரணம் 

இயக்குனர் மற்றும் நடிகருமான போஸ் வெங்கட் பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நாடகங்களில் நடித்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பருவமழையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சேப்பாக்கம் மைதானம்

இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டது.

விலைவாசி உயர்வு: துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க மத்திய அரசு முடிவு

இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்புகள் இந்திய சந்தைக்கு வந்து சேரும் வரை தேசிய தானியக் களஞ்சியத்தில் இருக்கும் துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் இன்று(ஜூன் 27) தெரிவித்துள்ளது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் நாள் போட்டிகளில் அபார வெற்றி

ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) இந்திய கபடி அணி 76-13 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை நடத்தும் தென் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு சிறப்பு வசதியை ஏற்படுத்தியுள்ள ஐசிசி

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிடப்பட்ட நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதலின் தேதி மற்றும் இடம் குறித்து அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது.

ஏழாம் அறிவு படத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வசனம் - உதயநிதி ஸ்டாலின் வருத்தம் 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்து, கடந்த 2011ம் ஆண்டில் வெளியான படம் தான் 'ஏழாம் அறிவு'.

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

நடிகை அசினின் திருமண வாழ்க்கையில் விரிசலா? இணையத்தில் கசிந்த புதுத்தகவல் 

'எம்.குமரன்' படத்தின் மூலமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை அசின்.

'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக

பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் திமுக, "முதலில் இந்துக்களுக்கு பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். அனைத்து சாதியினரையும் முதலில் கோவிலுக்குள் பிராத்திக்க அனுமதிக்க வேண்டும்." என்று கூறியுள்ளது.

விராட் கோலிக்காக இந்தியா ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் : வீரேந்திர சேவாக்

அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி மற்றும் பிசிசிஐ இறுதியாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) அறிவித்தன.

ஆகஸ்ட் மாதம் 5-டோர் தாரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மஹிந்திரா

இந்த மாதத் தொடக்கத்தில் தங்களுடைய புதிய ஆஃப்ரோடு எஸ்யூவியான 5-டோர் ஜிம்னியை இந்தியாவில் வெளியிட்டது மாருதி சுஸூகி.

30,000 கேரன்ஸ் மாடல் கார்களை திரும்பப்பெறும் கியா

தென் கொரியாவைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவில் தங்களது கேரன்ஸ் மாடலை திரும்பப்பெறுகிறது.

கேரளா ஸ்டோரி: OTT தளத்தில் வெளியிடுவதில் சிக்கல் 

கடந்த மே மாதத்தின் துவக்கத்தில் வெளியான திரைப்படம், 'தி கேரளா ஸ்டோரி'.

பலாத்காரம் செய்தவரின் வீட்டை புல்டோசர் வைத்து இடித்த நகராட்சி நிர்வாகம்

உத்தரபிரதேசத்தில் 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் வீட்டை அந்நகரின் நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது.

ஜூலை-1ம் தேதி எச்டிஎஃசி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனங்களின் இணைப்பு முடிவுக்கு வரும் 

இந்தியாவின் பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கடன் சேனை வழங்கி வரும் நிறுவனமான எச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் இணைப்பு ஜூலை 1-ம் தேதி முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறார் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் தலைவர், தீபக் பரேக்.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்திய அணியின் போட்டிகள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டது.

24GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி

ஸ்மார்ட்போன்களின் ப்ராசஸிங் பயன்பாடு மேம்படுவதற்கு ஏற்ப, அதில் பயன்படுத்தப்படும் ரேமின் (RAM) அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு 

முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும், பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி இன்று(ஜூன் 27) வலியுறுத்தினார்.

இந்தியாவில் ஒரே நாளில் 33 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 26) 47ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 33ஆக குறைந்துள்ளது.

மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள் 

தமிழ்நாடு மாநிலத்தில் கொலை, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்து கைதான குற்றவாளிகள் பலர் சிறையில் தங்கள் தண்டனை காலத்தினை அனுபவிக்கிறார்கள்.

மீண்டும் RX பெயரில் புதிய பைக்கை உருவாக்கத் திட்டமிடும் யமஹா

உலகளவில் பைக் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பைக்காக இருந்தது யமஹாவின் RX100 மாடல் பைக். ஆனால், தொழில்நுட்ப வளர வளர டூ ஸ்ட்ரோக் இன்ஜின்கள் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டு, அதன் இடத்தை ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின.

"ரிஷப் பந்த் ரீயூனியன்" : இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு ஜாலி சந்திப்பு

பெங்களூரிவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் உள்ள ரிஷப் பந்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.

பொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் கோடை கால விடுமுறை முடிந்து கடந்த 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை எட்டிய கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் மொத்த கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன்களின் நிலுவைத் தொகையானது ரூ.2 லட்சம் கோடி எட்டியிருக்கிறது. இது கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 29.7% அதிகமாகும்.

தனியாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமா? உங்களுக்காக சில பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் 

தனியாக சுற்றுலா செல்வது என்பது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சி தரும் அனுபவம் தான். இது ஒரு இனம்புரியாத சுதந்திர உணர்வையும், தன்நம்பிக்கையையும் தரும் என்பதில் ஐயமில்லை.

பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நெருக்கடி: வெள்ளை மாளிகை கண்டனம்

அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த போது, பிரதமர் மோடியிடம் முஸ்லீம்கள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை இணையவாசிகள் அதிகமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது

நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் தரையில் மலம் கழித்ததற்காக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவித்தது நியூயார்க்

நியூயார்க் நகரில் தீபாவளிக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் போட்டி அட்டவணையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மூலதன முதலீட்டு நிதியில் தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு 

இந்தியா நாட்டில் உள்ள மாநில அரசுகளுக்கு மூலதன செலவினங்களுக்கு ஊக்குவிக்க, மூலதன முதலீட்டிற்கென "மாநிலங்களுக்கு சிறப்பு உதவி புரியும் திட்டம்" என்னும் புதிய திட்டமானது 2023-24ம் ஆண்டின் நிதிநிலை திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

1,20,000 அடி உயரத்தில் ஒருநாள் உலகக்கோப்பை டிராபியை அறிமுகம் செய்தது ஐசிசி

இந்தியாவில் அக்டோபர் - நவம்பர் மாதம் நடக்க உள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், இதற்கான கோப்பையை யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்ட முறையில் திங்கட்கிழமை (ஜூன் 26) வெளியிட்டுள்ளது.

ஆருத்ரா வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

தங்களுடைய தளத்தில் கேமிங் வசதியை சோதனை செய்து வரும் யூடியூப்

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தை தொடந்து, யூடியூப் நிறுவனமும் கேமிங் வசதியை விரைவில் வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி சர்ச்சை குறித்து சால்ட் பே விளக்கம்

இணையத்தில் சால்ட் பே என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற சமையல்காரரான நஸ்ரெட் கோக்சே, கத்தாரில் நடந்த பிபா உலக கோப்பை 2022 இறுதிப் போட்டியின் போது, பிரான்ஸுக்கு எதிரான அர்ஜென்டினாவின் வெற்றியைத் தொடர்ந்து களத்தில் படம்பிடித்தபோது சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பட்ஜெட் மொபைல்களுக்கான புதிய சிப்செட்டை அறிமுகப்படுத்தும் குவால்காம்

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான 'ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2' என்ற புதிய சிப்செட்டை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது குவால்காம் நிறுவனம். மேலும், 4 சீரிஸின் முதல் 4nm சிப்பாக, இந்த சிப்செட் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை 

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 21ம் பட்டமளிப்பு விழா நாளை(ஜூன்.,28)நடைப்பெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 27

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை உயர்ந்து வருவதையடுத்து, இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

இராணுவத்தை செயல்படவிடாமல் தடுக்கும் மணிப்பூர் பெண்கள் 

மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள் வேண்டுமென்றே பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளில் தலையிடுவதாக இந்திய இராணுவம் நேற்று(ஜூன் 26) மாலை ட்வீட் செய்திருக்கிறது.

பதிவுகளை எழுத AI கருவி, புதிய வசதியை சோதனை செய்யும் LinkedIn

உலகின் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுடைய சேவையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.

உலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி - 7ம் இடத்தினை பிடித்த அதிமுக 

உலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் முதல் 15 கட்சிகளின் பட்டியலினை வேர்ல்டு அப்டேட்ஸ் என்னும் அமைப்பானது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தங்கள் மீது விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கும் கூகுள்

உலகின் பல நாடுகளில் இயங்குதள சந்தையில் பெரும்பான்மையான சந்தைப் பங்குகளைக் கொண்டு கோலோச்சி வருகின்றன கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள்.

பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

LeT, JuD போன்ற பயங்கரவாத குழுக்களையும், அவற்றின் பல்வேறு முன்னணி அமைப்புகளையும் நிரந்தரமாக கலைக்கும் முயற்சிகளை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரிசர்வ் வங்கியானது, கடந்த மே 19-ம் தேதி புழக்கத்திலிருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்: தமிழக அரசு அரசாணை 

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, புதிய மேம்பாலம் கட்டுவதற்காக, 195 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

'சல்மான் கானை கண்டிப்பாக கொல்வோம்': கனடாவை சேர்ந்த ரவுடி மிரட்டல் 

கனடாவைச் சேர்ந்த தப்பியோடிய குற்றவாளியும் ரவுடியுமான கோல்டி பிரார் மீண்டும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார்

இன்று மின்னணு சாதனங்கள் முதல் மின்சார வாகனங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தும் லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டிற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் குட்டெனௌ தன்னுடைய 100-வது வயதில் நேற்று முன் தினம் காலாமானார்.

26 Jun 2023

எம்சிசி உலக கிரிக்கெட் கவுன்சிலில் இணைந்தார் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமி லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியில் இணைந்துள்ளதாக கிளப் திங்களன்று (ஜூன் 26) தெரிவித்துள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியிலிருந்து குஜராத்துக்கு மாறிய ரவி பிஷ்னோய்

இந்தியாவில் வரவிருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக, லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் தனது அணியை மாற்றியுள்ளார்.

பல மகத்தான சாதனைகளை கல்வித்துறையில் செய்து வருகிறோம் - தமிழக முதல்வர் 

சென்னை காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த நடத்திய சிற்பித்திட்டத்தின் நிறைவுவிழா இன்று(ஜூன்.,26)நடந்தது.

ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, குணமடைந்து வருவது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பாகிஸ்தானின் சாதனையை முறியடித்த ஜிம்பாப்வே

திங்களன்று (ஜூன் 26) அமெரிக்காவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் சீன் வில்லியம்ஸ் தலைமையிலான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக வாடகை தாய் மூலம் கன்றினை ஈன்ற பசு 

நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

வாக்னர் கிளர்ச்சியின் எதிரொலி: புதிய மசோதாவை முன்மொழிய இருக்கிறது ரஷ்யா

ரஷ்ய பாராளுமன்றம் தனியார் இராணுவ நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் 

வட இலங்கை கடற்கரை பகுதியினை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதி

தமிழ்நாடு அணி தனது வரலாற்றில் இரண்டாவது முறையாக சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அபார வெற்றி

ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட மகளிர் ஆஷஸ் 2023 தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 17ம் தேதி திருமஞ்சன திருவிழா துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கிறது.

'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர் 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(POK) இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து PoK தங்களுடையது என்று கூறினாலும் எதையும் சாதிக்க முடியாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம்

சமீபத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் இந்தியாவின் முன்னணி கல்வித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸின் மீது தற்போது புதிய குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

டைட்டன் நீர்மூழ்கி: ரூபிக்ஸ் கியூபுடன் கடலுக்குள் சென்ற இளைஞனின் கதை

அமெரிக்காவின் டைட்டன் நீர்மூழ்கி விபத்தில் உயிரிழந்த சுலேமான் தாவூத் என்ற 19 வயது இளைஞன், கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ரூபிக்ஸ் கியூபை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாயார் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

'பிங்க் நிற வாட்ஸ்அப் செயலி' மூலம் தகவல்களை திருடும் புதிய மோசடி 

'பிங்க்' நிறத்தில் புதிய வாட்ஸ்அப் வெர்ஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் வாட்ஸ்அப் செயலியில் இருப்பதை விட பல்வேறு புதிய வசதிகள் இருப்பதாகவும் கூறி பதிவிறக்கம் செய்யக்கூடிய லிங்குடன் குறுஞ்செய்தி ஒன்று வாட்ஸ்அப் தளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள் 

2023-2024ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்விற்கான மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் இன்று(ஜூன்.,26)வெளியானது.

சிறப்பு ஒலிம்பிக்கில் 202 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

ஜெர்மனியில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு 2023 போட்டியில் இந்தியா 202 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது.

'அப்பாச்சி RTX' என்ற புதிய பெயரை டிரேட்மார்க் செய்த டிவிஎஸ் நிறுவனம்

தற்போது அப்பாச்சி பிராண்டிங்கின் கீழ் இந்தியாவில் ஆறு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ் நிறுவனம்.

விஜய் உடன் கை கோர்க்கும் வெற்றிமாறன்; உற்சாகத்தில் ரசிகர்கள் 

கோலிவுட்டில் அனைத்து நடிகர்களும், இவரின் இயக்கத்தில் ஒருமுறையேனும் நடித்துவிட வேண்டும் என ஏங்கும் ஒரு முக்கிய இயக்குனர், வெற்றிமாறன்.

புதிய 15 சீரிஸ் ஐபோன்கள், M3 சிப் மேக்புக்குகளை வெளியிடவிருக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் இந்த மாதத் தொடக்கத்தில் தான் தங்களது வருடாந்திர நிகழ்வான WWDC 2023 நிகழ்வை நடத்தி முடித்தது. இந்த நிகழ்வில் தான், தங்களுடைய முதல் AR/VR ஹெட்செட்டான ஆப்பிள் விஷன் ப்ரோவை வெளியிட்டது அந்நிறுவனம்.

தோனி கேண்டி கிரஷ் விளையாடுவாரா! வைரலாகும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்

டி20, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த ஒரே கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனி தான்.

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு 

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க பாம்பே உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் அனுமதி மறுத்துள்ளது.

இரவு முழுவதும் பார்ட்டிக்கு போய்விட்டு போட்டியில் 250 ரன்கள் குவித்த விராட் கோலி

இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்தின் பல்வேறு கட்டங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க டெல்லி அரசின் புதிய திட்டம்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் குறைப்பதற்கு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகமாக ஊக்குவிக்கிறது அம்மாநில அரசு. புதிதாக எலெக்ட்ரிக் வானங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் ரேஞ்சே முக்கியமான தடைக்கல்லாக இருக்கிறது.

பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்: 'வந்தே மாதரம்' இசையமைப்பாளர் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள்

இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றிய பெருமையைப் பெற்ற பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்யின் பிறந்தநாள் இன்று.

இந்தியாவில் ஒரே நாளில் 47 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 25) 80ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 47ஆக குறைந்துள்ளது.

ராணுவ வீரர் என்னும் பெயரில் க்யூஆர் கோடு மூலம் நூதன மோசடி - விழிப்புணர்வு வீடியோ 

சைபர் கிரைம் குற்றங்களில் தற்போது ஒரு புதுவித மோசடி நடந்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

'வேலை நேரம் முடிந்துவிட்டது': 350 பயணிகளை பாதியிலேயே விட்டுச் சென்ற விமானிகள்

வானிலை காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா(ஏ-112) விமானத்தின் விமானிகள் திடீரென்று அந்த விமானத்தை ஓட்ட மறுத்ததால், அது 5 மணி நேரம் தாமதமானது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இயான் போத்தம் - இயான் சேப்பல் மோதல்

இயான் போத்தம் மற்றும் இயான் சேப்பல் ஆகியோர் கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் இணைத்து பேசப்பட்ட வீரர்கள் ஆவர்.

கோவையில் பைக் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - இன்று முதல் அமல் 

தற்போதைய காலக்கட்டத்தில் விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் காரணத்தினால் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

வேலை வாய்ப்புக்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள்

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கி வரும் டிசிஎஸ் நிறுவனத்தில், பணியமர்த்தலுக்காக லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி 

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மற்றும் குலுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(ஜூன் 25) மாலை நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, குறைந்தது 15 கி.மீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய உணவகங்கள்

உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு வகையான சமையல் முறைகளின் மூலம், பல்வேறு வகையான சுவைகளில், உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்களுக்கு சிகிச்சை - காவேரி மருத்துவமனை 

சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில், தமிழ்நாடு மாநில அமைச்சர் செந்தில் பாலாஜியினை கடந்த ஜூன் 14ம் தேதி அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்திய அணியை 'Chockers' என கிண்டலடிப்பதை நிராகரிக்கும் ரவி சாஸ்திரி

10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வருவதால், சோக்கர்ஸ்(chockers) என கிண்டலாக இந்திய அணியை குறிப்பிடுவதை முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கண்டித்துள்ளார்.

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100யை தாண்டியது - பொதுமக்கள் அதிர்ச்சி 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு 1200 டன் தக்காளிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 700 டன் வரை மட்டுமே வியாபாரிகள் தக்காளியினை கொள்முதல் செய்து வருகிறார்கள்.

ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் மகளுக்கு திருமணமா?

கோலிவுட்டின் 'ஆக்ஷன் கிங்' என்றால் அது அர்ஜுன் தான். இவரின் மகள் ஐஸ்வர்யா, 'பட்டத்து யானை' என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன்

கர்நாடகா மாநிலத்தில், தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்டு, தன் நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த நபரின் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஒன்று, இந்திய ராணுவம் மற்றும் IIT, NIT போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தி வருவதாக எச்சரித்திருக்கின்றனர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.

போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் போதை பொருள் இல்லை என்னும் நிலையினை கொண்டுவர மாநில அரசு மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

விண்வெளி வீரர்களின் சிறுநீரை 98% மறுசுழற்சி செய்து புதிய சாதனை படைத்த நாசா

விண்வெளியில் உயிர் பிழைத்திருப்பதற்கான உபகரணங்களுள் மிக முக்கியமான ஒன்று தண்ணீர். பூமியிலிருந்து கொண்டு செல்லும் நீரை மட்டுமே சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி செய்து வரும் விண்வெளி வீரர்களால், விண்வெளியில் பயன்படுத்த முடியும்.

சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் அவரது உடற்தகுதிதான், பிசிசிஐ அதிகாரி விளக்கம்

ரஞ்சி கோப்பையில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வந்தபோதிலும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சர்ஃபராஸ் கான் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் 

கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது துவங்கியுள்ள நிலையில், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 26

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல் 

சமீபத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

இரண்டு நாட்களில் ரஷ்யாவை அதிர வைத்த இராணுவ கிளர்ச்சி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நீண்ட கால ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த வாக்னர் ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, ரஷ்யாவில் ஒரு பயங்கரமான அமைதி நிலவி வருகிறது.

ஐபோனில் 'மியூட் பட்டனு'க்குப் பதிலாக 'ஆக்ஷன் பட்டனை'க் கொண்டு வரும் ஆப்பிள்

ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய ஐபோன் மாடலை ஆப்பிள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'ஐபோன் 15' சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு vs ஐஓஎஸ், எளிய பயன்பாட்டைக் கொண்ட இயங்குதளம் எது?

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் எளிதான பயன்பாட்டைக் கொண்ட இயங்குதளம் எது என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது க்ரீன் ஸ்மார்ட்போன்ஸ்.

'6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக்-ஒபாமாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 26-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

படப்பிடிப்பின்போது நடிகர் பிரித்விராஜிற்கு காயம்; இன்று அறுவை சிகிச்சை என தகவல் 

மலையாள படவுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ்.

டெல்லியில் தரையிறங்கினார் பிரதமர் மோடி: பாஜக தலைவர்கள் வரவேற்பு 

அமெரிக்கா மற்றும் எகிப்து பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று(ஜூன் 25) நள்ளிரவு டெல்லியில் வந்து தரையிறங்கினார்.

இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது 

2023 -24 கல்வியாண்டுக்கான பொறியியல் இளநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.