40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இயான் போத்தம் - இயான் சேப்பல் மோதல்
இயான் போத்தம் மற்றும் இயான் சேப்பல் ஆகியோர் கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் இணைத்து பேசப்பட்ட வீரர்கள் ஆவர். இதற்கு காரணம் கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாது, வர்ணனை பெட்டி உட்பட பல இடங்களிலும் வாக்குவாதத்தை தொடர்ந்து வந்ததுதான். 1977 இல் மெல்போர்னில் உள்ள ஒரு பாரில் இருவரும் மோதலில் ஈடுபட்டபோதுதான் இது முதன்முதலில் தொடங்கியது. அப்போது இயான் போத்தம், தன்னை உடைந்த கண்ணாடியால் அடிக்க முயன்றதாக இயான் சேப்பல் கூறினார். இந்த சம்பவத்தை போத்தம் மறுத்தாலும், இது இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. இப்போது 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்த பிறகு, இருவரும் சேனல் 9 ஆவணப்படமான 'தி லாங்கஸ்ட் ஃபியூட்'-இற்காக பேசுகையில், இதை ஒரு பயங்கரமான சம்பவம் என்று இயான் சேப்பல் தெரிவித்துளளார்.
இயான் போத்தமுடனான மோதல் குறித்து இயான் சேப்பல் கூறியதன் முழு விபரம்
ஹில்டன் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த இயான் சேப்பல், "அவர் என் முகத்தில் பீர் கிளாஸை வைத்து, உனது காதுகளை வெட்டுவேன் என்று சொன்னதற்கு அடுத்த நாள், நாங்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும் போட்டி இருந்தது. "எனவே நான், இப்போது நீங்கள் என்னை ஒரு பீர் கிளாஸால் வெட்டினால், நீங்கள் கோழை என்பது உறுதி ஆகிவிடும். அதுவே, நாளை கிரிக்கெட் பந்தால் என்னை வீழ்த்தினால் அது தான் சரியான செயல்." என்று கூறியதாக தெரிவித்துள்ளார். தங்களுடைய முதல் பெயர் பொதுவானதாக இருந்தாலும், தங்களுக்கு இடையே எப்போதும் ஒத்துப்போனதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் தான் பார்த்த நீண்ட கால வர்ணனையாளர்களில், இயான் போத்தமின் வர்ணனை தான் மிக மோசமானது என நினைப்பதாக தெரிவித்துள்ளார்.