தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
சிட்னி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தவறான தகவலை பகிர்ந்த எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ (Grok AI) ஆனது தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
விதிமுறைகளை கடுமையாக்கும் மத்திய அரசு; இந்தியாவில் சவாலை எதிர்கொள்கிறது வாட்ஸ்அப்
மெட்டாவின் பிரபலமான மெஸேஜிங் தளமான வாட்ஸ்அப், இந்தியாவில் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது.
எலான் மஸ்க் புல்டோசர் போன்றவர்: மைக்ரோசாஃப்ட் ஏஐ சிஇஓ முஸ்தபா சுலேமான் கருத்து
மைக்ரோசாஃப்ட் ஏஐயின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) முஸ்தபா சுலேமான் சமீபத்திய நேர்காணலில், செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) புரட்சியை வடிவமைக்கும் முக்கிய ஆளுமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து ஏஐ துறையில் உலகின் மூன்றாவது போட்டித்தன்மை மிகுந்த நாடாக மாறியது இந்தியா
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகிலேயே மூன்றாவது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இனி ஹெட்போன் இருந்தால் போதும்; எந்த மொழியையும் புரிந்துகொள்ளலாம்! கூகுளில் புதிய அம்சம் அறிமுகம்
கூகுள் நிறுவனம் அதன் 'கூகுள் டிரான்ஸ்லேட்' (Google Translate) செயலியில் ஒரு முக்கியப் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
இந்திய வானில் ஒளிரும் அற்புதம்: கண்கவர் ஜெமினிட் விண்கல் மழையை எப்போது, எங்கு பார்ப்பது?
இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்களுக்கு இந்த வாரம் ஓர் அற்புதமான விருந்து காத்திருக்கிறது.
புதைபடிவ எரிபொருளால் ஒவ்வொரு மணி நேரமும் உலகிற்கு $5 பில்லியன் இழப்பு; ஐநா அதிர்ச்சித் தகவல்
நிலையான உணவு உற்பத்தி முறைகள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் தொடர்ச்சியான பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக, உலகம் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்து வருவதாக ஐநா சபை எச்சரித்துள்ளது.
வாட்ஸ்அப்பில் விடுமுறைக் கால முக்கிய அப்டேட்: மிஸ்டு கால் மெசேஜ்கள், மேம்பட்ட ஏஐ படக் கருவிகள் அறிமுகம்
வாட்ஸ்அப் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், உலகளாவிய பயனர்களை இலக்காகக் கொண்டு, அழைப்புகள், அரட்டைகள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் மற்றும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை மேம்படுத்தும் ஒரு புதிய அப்டேட் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதிவேகமாக மூழ்குவது ஏன்? வெனிஸை விட மோசமான அபாயம்!
இந்தோனேசியாவின் மிகப் பெரிய நகரமும், தலைநகரமுமான ஜகார்த்தா அபாயகரமான வேகத்தில் நிலத்தில் புதைந்து வருவதாகப் புதிய அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
கூகுள் ஜெமினி 3க்கு போட்டியாக ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடி 5.2 அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?
சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓபன்ஏஐ நிறுவனம், கூகுளின் ஜெமினி 3 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களுக்குப் போட்டியாக, அதன் மேம்படுத்தப்பட்ட புதிய ஏஐ மாடலான சாட்ஜிபிடி 5.2யை வெளியிட்டுள்ளது.
'5201314': 2025ஆம் ஆண்டில் இந்தியர்கள் இந்த எண்ணை தான் கூகிளில் அதிகம் தேடினார்களாம்
2025ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான கூகிள் தேடல் ஆண்டு அறிக்கை சில ஆச்சரியமான போக்குகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது அவசர சேவைகளுடன் live வீடியோவை பகிரலாம்
கூகிள் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அவசர live வீடியோ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச ஐபோன் செயலி ChatGPT ஆகும்
ஆப்பிளின் வருடாந்திர அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச ஐபோன் செயலியாக OpenAI இன் ChatGPT முடிசூட்டப்பட்டுள்ளது.
இனி Spotify'இல் உங்கள் உணர்வுக்கேற்ற பாடல்கள் கேட்கலாம்! ஏஐ மூலம் புதிய அம்சம் அறிமுகம்
இசை ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாடிஃபை (Spotify), பயனர்களின் இசைத் தேடல் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயக்கப்படும் புதிய அம்சமான 'Prompted Playlists'யை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
வகை அடிப்படையிலான சந்தா திட்டங்களை அறிமுகம் செய்கிறது YouTube டிவி
கூகிளுக்கு சொந்தமான பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவையான யூடியூப் டிவி, 2026 ஆம் ஆண்டிற்கான ஒரு பெரிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது.
Android சாதனங்களிலும் AirPods அம்சம்; குருகிராம் சிறுவன் கண்டுபிடித்த செயலியால் சாத்தியம்
குருகிராமை சேர்ந்த 15 வயது மாணவரான கவிஷ் தேவர், LibrePods என்ற செயலியை உருவாக்கியுள்ளார்.
கூகிளின் Doppl AI செயலி மூலம் உங்களுக்கு பிடித்த உடையை virtual-ஆக ட்ரை செய்யலாம்
கூகிள், தனது சோதனை செயற்கை நுண்ணறிவு (AI) ஃபேஷன் செயலியான Doppl-இல் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எலான் மஸ்கின் Grok 4.20 ஏஐ மாடல்; சாட்ஜிபிடி, ஜெமினியை விஞ்சும் என தகவல்
எலான் மஸ்கின் xAI நிறுவனத்தின் அடுத்த பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான Grok 4.20, இன்னும் 3 முதல் 4 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
150 நாடுகளில் அரசு ஆதரவு ஹேக்கர்களின் சைபர் தாக்குதல்கள்: ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் உலகளாவிய எச்சரிக்கை
அரசுகளின் ஆதரவு பெற்ற ஹேக்கிங் குழுக்கள் தனிநபர் சாதனங்களைத் தாக்க முயற்சிப்பதாக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தங்களது பயனர்களுக்குப் புதிய அச்சுறுத்தல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
சாட்ஜிபிடி போலவே எழுதவும் பேசவும் தொடங்கிவிட்ட மனிதர்கள்; புதிய ஆய்வில் வெளியான தகவல்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் இணையத்தை ரோபோட்டிக் எழுத்துக்களால் நிரப்பிவிடும் என்று நீண்ட காலமாக இருந்த கவலைக்கு மத்தியில், ஒரு புதிய ஆய்வு மக்கள் தாங்களாகவே சாட்ஜிபிடி போன்றே பேசவும் எழுதவும் தொடங்கியுள்ளனர் என்ற ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
ஸ்டார்லிங்கின் இந்திய விலை நிர்ணயம் வெளியாகியுள்ளது: இதன் விலை எவ்வளவு?
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணைய சேவையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது, மாத சந்தா கட்டணம் ₹8,600.
இஸ்ரோவின் சந்திரயான் 3 தரையிறங்கிய நிலவின் தென் துருவத்திற்கு அதிநவீன கருவிகளை அனுப்புகிறது நாசா
நாசாவின் ஆர்டெமிஸ் IV திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலவின் தென் துருவப் பகுதிக்கு இரண்டு அதிநவீன அறிவியல் கருவிகளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
இனி கோடிங் படிப்பவர்களுக்கு வேலை இருக்குமா? ஏஐ நிபுணர் சொல்வதைக் கேளுங்க
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால், கோடிங் திறன் விரைவில் மதிப்பிழக்கும் என்ற கருத்து தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வருகிறது.
உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டிருக்கா இல்லையா? உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்
இந்தியாவில் அதிகப் பயன்படுத்தப்படும் செய்திப் பரிமாற்றச் செயலியான வாட்ஸ்அப்பில் ஒரு சிறிய பாதுகாப்பு மீறல்கூட உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் பணத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
விண்வெளியில் இருந்து பூமியில் விழுவது போன்ற மர்மமான ஒளித் தூண்கள் வேற்றுக்கிரக விண்கலமா? உண்மை இதுதான்
விண்வெளியில் இருந்து பூமியை நோக்கிச் செங்குத்தாக விழும் பிரகாசமான சிவப்பு ஒளித் தூண்கள், வேற்றுக்கிரகவாசிகளுடைய விண்கலம் அல்ல, மாறாக ஸ்பிரைட்ஸ் (Sprites) என்று அழைக்கப்படும் அரிய வகை உயரமான மின்னல் நிகழ்வுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஏஐ விரைவில் 80% வேலைகளை அழிக்கும்: தலைமைச் செயல் அதிகாரிகள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லையாம்! நிபுணர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னோடியான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஏஐ'யின் தாக்கம் குறித்துப் பேசியபோது, விரைவில் உலகில் உள்ள வேலைகளில் 80% க்கும் அதிகமானவை நீக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
மார்ச் 2026க்குள் 7 விண்வெளி பயணங்களை மேற்கொள்ள இஸ்ரோ திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), மார்ச் 2026க்குள் ஏழு விண்வெளி பயணங்களை நடத்துவதற்கான ஒரு பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது.
டிகிரி அப்புறம்தான்; இந்தத் திறமைதான் ஏஐ உலகில் உங்களை மதிப்புமிக்கவராக்கும்: மைக்ரோசாஃப்ட் சிஇஓ அறிவுரை
பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா, இன்று நிலையில் மிகவும் முக்கியமான திறன் 'உணர்ச்சி நுண்ணறிவு' (Emotional Intelligence) தான் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் அச்சுறுத்தலை தடுக்க வந்துவிட்டது தென் கொரியாவின் புதிய செயலி
தென் கொரிய அரசாங்கம், பாலியல் அச்சுறுத்தல் இருப்பவர்கள், தங்களை துன்புறுத்துபவர்களின் நிகழ்நேர இருப்பிடத்தை கண்காணிக்க அனுமதிக்கும் ஒரு மொபைல் செயலியை உருவாக்கி வருகிறது.
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச்சில் புதிய அம்சம் அறிமுகம்; உயர் இரத்த அழுத்தம் குறித்த அறிவிப்புகளை பெறலாம்
இந்தியாவில் உள்ள ஆப்பிள் வாட்ச் பயனர்களுக்காக ஆப்பிள் உயர் இரத்த அழுத்த அறிவிப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி தட்கல் முன்பதிவுக்கு OTP கட்டாயம்; தரகர்களைத் தடுக்க இந்திய ரயில்வே புதிய விதி
இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட்டுகளைச் சரிசெய்து தரகர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, நேரடி முன்பதிவு மையங்களில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கதிர்வீச்சு எழுச்சியை சூரிய புயல் தூண்டுகிறது
இங்கிலாந்தில் உள்ள சர்ரே விண்வெளி மையம் (SSC) நடத்திய சமீபத்திய ஆய்வில், சூரிய புயல் காரணமாக கதிர்வீச்சு அளவுகளில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கூகுள் புகைப்படங்கள் 2025 ரீகேப் வெளியீடு: உங்களின் இந்த ஆண்டை ஒரு ஹைலைட் ரீலாகக் காணும் வசதி
கூகுள் போட்டோஸ் (Google Photos) அதன் 2025 ஆம் ஆண்டிற்கான ரீகேப் (Recap) அம்சத்தை உலகளவில் வெளியிட்டுள்ளது.
ஆதித்யா-எல்1 செயற்கைகோள் அடுத்த ஆண்டு 'solar-maximum' குறித்து ஆய்வு நடத்தும்: இதன் அர்த்தம் என்ன?
இந்தியாவின் முதல் பிரத்யேக சூரிய ஆய்வு செயற்கைக்கோளான ஆதித்யா-L1, 2026 ஆம் ஆண்டில் அதன் அடுத்த உச்சக்கட்ட செயல்பாட்டின் போது சூரியனை கண்காணிக்கத் தயாராகி வருகிறது.
பெண் விண்வெளி வீரர்கள் விரைவில் விண்வெளியில் மாதவிடாய் கோப்பைகளை பயன்படுத்தலாம்
ஒரு பெரிய திருப்புமுனையாக, விஞ்ஞானிகள் விண்வெளி பயண நிலைமைகளில் மாதவிடாய் கோப்பைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளனர்.
"தனியுரிமையில் சமரசம் இல்லை": கட்டாயமாக்கப்பட்ட 'சஞ்சார் சாத்தி' செயலி உத்தரவை எதிர்க்கும் ஆப்பிள்
இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் (ஐபோன் உட்பட) 'சஞ்சார் சாத்தி' என்ற அரசால் இயக்கப்படும் சைபர் பாதுகாப்புச் செயலியை முன்கூட்டியே நிறுவும்படி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ஆப்பிள் நிறுவனம் எதிர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகிளின் ஜெமினி முன்னேறுவது குறித்து ChatGPT-க்கு 'Code Red' அறிவித்தார் சாம் ஆல்ட்மேன்
OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT-ஐ மேம்படுத்த "குறியீட்டு சிவப்பு" முயற்சியை அறிவித்துள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பார்த்த ஒரு உள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம்: மத்திய அரசின் புதிய உத்தரவு
தொலைத்தொடர்பு துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களில் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயம் என மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.
இனி அனைத்து மொபைல்களிலும் இந்த ஆப் கட்டாயம்; மத்திய அரசு அதிரடி உத்தரவு
இந்தியாவில் சைபர் பாதுகாப்பு மற்றும் ஐஎம்இஐ (IMEI) திருட்டு போன்ற மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், புதிதாக விற்பனைக்கு வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாதி (Sanchar Saathi) என்ற அரசு செயலியை முன் கூட்டியே நிறுவுமாறு (Pre-install) மொபைல் உற்பத்தியாளர்களுக்குத் தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.
இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம்
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தினசரி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி விளையாட்டு நிகழ்வுகளை மொபைல் போன்களில் பார்க்கிறார்கள்.
ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தைக் குறைக்க பழைய லேண்ட்லைன் வடிவில் போன்; அறிமுகமான 3 நாட்களில் ₹1 கோடி வருமானம்
சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால் அதிகரித்துவரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர், பழைய கால லேண்ட்லைன் தொலைபேசி போன்ற வடிவமைப்பைக் கொண்ட ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
இனி வாட்ஸ்அப் பயன்படுத்த இது கட்டாயம்; அமலுக்கு வரும் மத்திய அரசின் புதிய விதி
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற பிரபலமான செய்திப் பரிமாற்ற செயலிகளைப் (Messaging Apps) பயன்படுத்த, இனிமேல் செயலில் உள்ள சிம் கார்டு (Active SIM Card) கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
பணியில் இருப்பவர்களுக்காக ஏஐ தலைமையியல் ஆன்லைன் படிப்பு ஐஐடி மும்பையில் அறிமுகம்; யாரெல்லாம் சேரலாம்?
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மும்பை, அதன் ஷைலேஷ் ஜே.மேத்தா மேலாண்மைக் கல்விப் பிரிவும் (SJMSOM) கிரேட் லேர்னிங் (Great Learning) தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும் இணைந்து, நடுத்தர மற்றும் மூத்த நிலை நிர்வாகிகளுக்கான 'ஏஐ தலைமையியல்' (Leadership with AI) என்ற நான்கு மாத ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பலே கண்டுபிடிப்பா இருக்கே! பசியைக் கண்டறிந்து தானாக உணவு ஆர்டர் செய்யும் செயற்கை நுண்ணறிவு சாதனம்
மங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டரான சோஹன் எம். ராய், ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
முழு இமயமலையையும் அதிக நில அதிர்வு அபாய மண்டலத்தில் இருப்பதாக காட்டும் புதிய மேப்
இந்தியா தனது தேசிய நில அதிர்வு மண்டல வரைபடத்தில் ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
பூமிக்கு அச்சுறுத்தும் விண்கற்கள்: இன்டர்ஸ்டெல்லார் விண் பொருட்களின் ஆபத்து குறித்த புதிய ஆய்வில் தெரிய வந்தது என்ன?
அண்மைக் காலமாக ஊமுவாமுவா (Oumuamua), 2I/போரிசோவ் (Borisov), 3I/அட்லஸ் (Atlas) போன்ற விண்மீன் மண்டலங்களுக்கு இடையே பயணிக்கும் பொருட்கள் (Interstellar Objects) நமது சூரியக் குடும்பத்தைக் கடந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
குவாண்டம் கம்ப்யூட்டிங் முன்னேற்றத்தின் விளிம்பில் உள்ளது: சுந்தர் பிச்சை
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை நுண்ணறிவு (AI) அனுபவித்ததைப் போலவே, குவாண்டம் கம்ப்யூட்டிங் ஒரு பெரிய திருப்புமுனையின் விளிம்பில் இருப்பதாக கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
JioSaavn 500 மில்லியன் டவுன்லோட்களை எட்டிய முதல் இந்திய இசை App-பாக மாறியுள்ளது
இந்தியாவின் முன்னணி இசை ஸ்ட்ரீமிங் சேவையான JioSaavn, கூகிள் பிளே ஸ்டோரில் 500 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கடந்து ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கூகிள் மேப்ஸின் புதிய அம்சம் பல மணிநேர பேட்டரி பவரை மிச்சப்படுத்தும்
கூகிள் மேப்ஸில் பிரத்யேக மின் சேமிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு பெரிய மேம்படுத்தல் பெறுகிறது.
இந்தியாவின் புதிய டேட்டா பாதுகாப்பு விதிகள் குறித்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கவலை
இந்தியாவின் புதிதாக அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகள் குறித்து இந்தியாவின் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.