நிகழ் நேர நேரடி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட AI வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஜூம்
செய்தி முன்னோட்டம்
வீடியோ கான்பரன்சிங் சேவை தளமான ஜூம் (Zoom), தனது பயனர்களுக்காக நிகழ் நேர வாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன் (Real-time voice translation) மற்றும் 'டீப்ஃபேக் டிடெக்ஷன்' (Deepfake detection) உள்ளிட்ட அதிரடியான புதிய செயற்கை நுண்ணறிவு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நேரடி மொழி பெயர்ப்பு வசதியின் மூலம், வீடியோ காலில் இருப்பவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசலாம். ஆனால், மறுமுனையில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான மொழியில் அதனை உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்யப்படும். தற்போது இந்த வசதி 5 மொழிகளில் கிடைக்கிறது, விரைவில் கூடுதல் மொழிகள் சேர்க்கப்பட உள்ளன.
AI
AI மோசடிகளைத் தடுக்க
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்கள் அல்லது ஆடியோக்களை (Deepfakes) கண்டறியும் வசதியை ஜூம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆன்லைன் மோசடிகள் மற்றும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' போன்ற மோசடிகளில் பயனர்களைப் பாதுகாக்க உதவும். இது தவிர, பயனர்கள் தங்களைப் போலவே தோற்றமளிக்கும் 'AI அவதாரங்களை' (AI Avatars) உருவாக்கி, மீட்டிங்குகளில் தங்களுக்குப் பதிலாகப் பங்கேற்கச் செய்யலாம். மேலும், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்குப் போட்டியாக 'AI Docs', 'Slides' மற்றும் 'Sheets' போன்ற புதிய அலுவலக செயலிகளையும் ஜூம் அறிமுகம் செய்துள்ளது. ஜூம் நிறுவனத்தின் இந்த மாற்றங்கள், அது வெறும் வீடியோ கால் தளமாக மட்டுமல்லாமல், ஒரு முழுமையான AI சார்ந்த பணித்தளமாக உருவெடுப்பதைக் காட்டுகின்றன.