விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ஐபிஎல் 2025: எம்எஸ் தோனி உட்பட ஐந்து டாப் வீரர்களை தக்க வைத்துக்கொண்ட சிஎஸ்கே

2028 ஒலிம்பிக்ஸ்: கிரிக்கெட் மட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படலாம்

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுள் கிரிக்கெட் போட்டிகள் மட்டும் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைக்கு மாற்றப்படலாம்.

யு23 மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர்; சிராக் சிக்கரா சாதனை

சிராக் சிக்கரா யு23 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு; கேப்டனாக சல்மா டெட்டே நியமனம்

நவம்பர் 11-20 வரை பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெறும் மகளிர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி 2024க்கான இந்திய ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா திங்களன்று (அக்டோபர் 28) அறிவித்தது.

சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து கிரிக்கெட் கற்ற வீரர்; ரஞ்சி கோப்பையில் சதம் அடித்து அசத்தல்

சச்சின் டெண்டுல்கர் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை உயர்த்தியதை பார்த்த ஒரு தந்தையின் ஆர்வம், அவரது மகனை தற்போது ரஞ்சி கோப்பையில் சதமடிக்க வைத்துள்ளது.

ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட எம்எஸ் தோனி முடிவு எனத் தகவல்

முன்னாள் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி, ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுவார் என தகவல்

டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியுடன் பயிற்சியாளர்களும் செல்ல உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடமில்லை; இன்ஸ்டாகிராமில் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய முகமது ஷமி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது ஏமாற்றத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 92 ஆண்டுகால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

தொடர் தோல்விகளால் பின்னடைவு; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன?

புனேவில் நடந்து முடிந்த இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது.

INDvsNZ 2வது டெஸ்ட்; 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; இந்திய அணியின் 12 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து

புனே எம்சிஏ மைதானத்தில் நடந்த இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

INDvsNZ 2வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக 11 விக்கெட்டுகள்; சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்த வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

INDvsNZ 2வது டெஸ்ட்: 359 ரன்கள் வெற்றி இலக்கு; நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு படைக்குமா இந்தியா?

புனேயில் நடைபெற்று வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய டி20 அணி அறிவிப்பு; மூன்று அன்கேப்ட் வீரர்களுக்கு வாய்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) அறிவித்தது.

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் விராட் கோலி; தரவுகள் சொல்வது இதுதான்

புனேயில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

INDvsNZ 2வது டெஸ்ட்: 12 வருட சாதனையை முறியடிக்கப் போவது இந்தியாவா? நியூசிலாந்தா?

சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 வருடங்கள் யாராலும் வெல்ல முடியாத அணியாக வலம் வந்த இந்திய கிரிக்கெட் அணி, அந்த சாதனையை இழக்கும் தருவாயில் நிலையில் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர்; யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்றுச் சாதனை

2024ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.

INDvsNZ 2வது டெஸ்ட்: இந்தியாவின் 23 ஆண்டு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி

புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடந்து வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

INDvsNZ 2வது டெஸ்ட்: முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்

புனேயில் நடந்து வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், ரவிச்சந்திரன் அஸ்வின் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.

முதலமைச்சர் கோப்பை 2024 போட்டி நிறைவு: சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி

தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் சமீபத்தில் சென்னையில் நிறைவு பெற்றது.

தொடரை இழந்தாலும், இரண்டாவது போட்டியில் வலுவான ஜெர்மனியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

ஆடவர் இந்திய ஹாக்கி அணி ஜெர்மனிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் வலுவான மறுபிரவேசம் செய்த போதிலும் பெனால்டி ஷூட்அவுட்டில் தோற்று தொடரை இழந்தது.

INDvsNZ 2வது டெஸ்ட்: அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த வாஷிங்டன் சுந்தர்

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்து வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், வாஷிங்டன் சுந்தர் சாதனை படைத்தார்.

29 வயதில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் ஓய்வு அறிவிப்பு

மகளிர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால், தனது 29 வயதில் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள்; ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை

புனேவில் இன்று (அக்டோபர் 24) தொடங்கியுள்ள நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

23 Oct 2024

சிஎஸ்கே

ஐபிஎல் 2025: அடுத்த வாரம் சிஎஸ்கே அதிகாரிகளை சந்திக்கிறார் எம்எஸ் தோனி; அணியில் தொடர்வாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்கு திரும்புவது குறித்து முடிவு செய்வதற்காக அக்டோபர் 29 அல்லது 30ஆம் தேதி சிஎஸ்கே அணியின் அதிகாரிகளை சந்திப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

காயம் பற்றிய வதந்திகளை நிராகரித்த ஸ்ரேயாஸ் ஐயர்

Cricbuzz இன் அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தனது உடற்தகுதி குறித்த வதந்திகளை மறுத்துள்ளார்.

2026 கிளாஸ்கோ CWG இலிருந்து நீக்கப்பட்ட பிரதான விளையாட்டுக்கள்: என்ன காரணம்?

லண்டன், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளுக்கு ஒரு பெரும் அடியாக, ஹாக்கி, பாட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற முக்கிய விளையாட்டுகள் 2026 ஆம் ஆண்டு பதிப்பில் இருந்து கிளாஸ்கோவால் கைவிடப்பட்டது.

காயம் அடைந்த கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து விலகுகிறார்

அக்டோபர் 24, வியாழன் அன்று தொடங்க உள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் மூத்த பேட்டர் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

முதல்தர கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள்; புதிய சாதனை படைத்த சத்தேஷ்வர் புஜாரா

தற்போது ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி வரும் சத்தேஷ்வர் புஜாரா, சத்தீஸ்கருக்கு எதிரான போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக இரட்டை சதம் அடித்து இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்பும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார்.

ஐபிஎல் 2025 சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா? சஸ்பென்ஸ் வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி எம்எஸ் தோனியின் இறுதி முடிவிற்காக காத்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை: தோற்றாலும் ரூ.3.74 கோடி பரிசுத் தொகை வென்ற இந்தியா; யாருக்கு எவ்வளவு பரிசுத் தொகை?

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி முதல் டி20 உலகக்கோப்பை பட்டத்திற்கான காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் மாற்றம்; வாஷிங்டன் சுந்தர் கூடுதலாக சேர்ப்பு

பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) பெங்களூரில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

INDvsNZ முதல் டெஸ்ட்; 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி; 36 ஆண்டுகால பெருமையை இழந்தது இந்தியா

பெங்களூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

எமெர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் எமெர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (அக்டோபர் 19) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

INDvsNZ முதல் டெஸ்ட்: 36 ஆண்டுகளில் முதல் முறையாக நியூஸிலாந்திடம் தோற்குமா இந்தியா?

பெங்களூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 107 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் சாதனை; கபில்தேவின் ரெக்கார்டை முறியடித்தா ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், பெங்களுருவில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதிகரிக்கும் விபத்துகள்; ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு

அதிகரித்து வரும் ரயில் விபத்துகளுக்கு பதிலடியாக, முக்கியமான பணியிடங்களை நிரப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களை பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

இனி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டும்தான்; ஐபிஎல் 2025 ஜியோ சினிமாவில் கிடையாது; அப்போ இலவசமா பார்க்க முடியாதா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இணைவைதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2025 உட்பட அனைத்து முக்கிய விளையாட்டு நிகழ்வுகளையும் ஜியோ சினிமாவில் இருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு மாற்ற கூட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய நான்காவது இந்தியர்; விராட் கோலி சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஒரு ஆண்டில் 100 சிக்சர்கள் அடித்து இந்தியா சாதனை

பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணி வரலாறு படைத்தது.

INDvsNZ முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்; வீரேந்திர சேவாக்கின் ரெக்கார்டை முறியடித்தார் டிம் சவுத்தி

பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி பேட் மூலம் முத்திரை பதித்தார்.

INDvsNZ முதல் டெஸ்ட்; 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா

பெங்களூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

படிப்பு முக்கியம் பிகிலு; 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வால் நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை

அக்டோபர் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான மகளிர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து

டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் பிவி சிந்து, உலகின் ஏழாவது நிலை வீராங்கனையான சீனாவின் ஹான் யூவுக்கு எதிராக கடுமையாகப் போராடி வெற்றி பெற்றார்.

INDvsNZ முதல் டெஸ்ட்: 136 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை சமன் செய்தது இந்தியா

முதல் நாள் மழையால் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்ட பிறகு, பெங்களூரில் நடந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு சுருண்டது.

சவூதி அரேபியாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு எனத் தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்கள் ஏலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிநாட்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

91 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை; 46 ரன்களுக்கு ஆல் அவுட்; மோசமான சாதனை படைத்த இந்தியா

பெங்களூரில் நடந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மிக மோசமான ஆல் அவுட் ஆகியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பெதானி நியமனம்; இயக்குனராக வேணுகோபால் ராவுல் நியமனம்

டெல்லி கேப்பிடல்ஸ், வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹேமங் பதானி மற்றும் வேணுகோபால் ராவ் ஆகியோரை அணியில் தலைமைப் பொறுப்புகளுக்கு கொண்டு வந்துள்ளது.

குருவை விஞ்சிய சிஷ்யன்; WR செஸ் மாஸ்டர்ஸில் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா

இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா லண்டனில் நடந்த டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸில் தனது வழிகாட்டியான ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை காலிறுதியில் முறியடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

INDvsNZ முதல் டெஸ்ட்: இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்; நியூஸி.க்கு எதிராக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சர்ஃபராஸ் கானை இந்தியா விளையாடும் லெவன் அணியில் சேர்த்துள்ளது.

16 Oct 2024

பிசிசிஐ

WT20 WC வெளியேற்றம்: ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன் பதவியை மறுபரிசீலனை செய்யும் BCCI 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரின் எதிர்காலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுபரீசலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WT20 WC: 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சோகம்: அரையிறுதி தகுதியை இழந்த இந்திய அணி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 ல் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

WT20 WC: இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாக உள்ளது; எப்படி?

அக்டோபர் 13, ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவிடம் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, 2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான இந்தியாவின் நம்பிக்கை உடைந்தது.

முந்தைய
அடுத்தது