மணக்கோலத்தில் 'சைனாமேன்' குல்தீப் யாதவ்! தனது பால்ய கால தோழியை கரம் பிடித்தார்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தனது நீண்ட கால தோழியான வன்ஷிகா சதாவை சனிக்கிழமை (மார்ச் 14) உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள புகழ்பெற்ற வெல்கம் ஹோட்டல் தி சவோயில் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு லக்னோவில் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்ட இந்த ஜோடி, கான்பூரைச் சேர்ந்தவர்கள். வன்ஷிகா எல்ஐசி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். 2026 டி20 உலகக் கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்துவதற்காக, கடந்த நவம்பர் மாதம் நடக்கவிருந்த தனது திருமணத்தைக் குல்தீப் ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்பு
நட்சத்திரங்கள் பங்கேற்பு
இந்தத் திருமண விழாவில் குல்தீப்பின் உலகக் கோப்பை சக வீரர்களான திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் முன்னாள் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா, யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் குல்தீப் மற்றும் வன்ஷிகா பாரம்பரிய உடையில் மின்னினர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், வாணவேடிக்கை முழங்க இருவரும் கைகோர்த்து நடந்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. முன்னதாக, குல்தீப்பின் தந்தை ராம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
So happy you’ve found your forever love. Cheers to a beautiful life, Lil Bro 🫂❤️🧿 pic.twitter.com/m1awluiq8w
— Yuzvendra Chahal (@yuzi_chahal) March 14, 2026