ஷாருக்கானின் 'கிங்' பட முதல் பாடல் வெளியீடு: அர்ஜித் சிங் - எட் ஷீரன் பாடிய மெலோடி ஹிட்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் மற்றும் முன்னணி நட்சத்திர நாயகி தீபிகா படுகோன் மீண்டும் கைகோர்த்துள்ள பிரம்மாண்ட ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான கிங் படத்தின் முதல் பாடல், நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படம், திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்புத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
டிசம்பர் 24 ரிலீஸ்
சித்தார்த் ஆனந்த் இயக்கம்
பதான் படத்தைத் தொடர்ந்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் நடிக்கும் புதிய படம் சுமார் ₹350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தை ரெட் சில்லீஸ் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான து மில் ஜாயே பாடலுக்கு சச்சின் - ஜிகர் இசையமைத்துள்ளனர்.
இப்பாடலை அர்ஜித் சிங்குடன் இணைந்து பிரபல சர்வதேச பாடகர் எட் ஷீரன் பாடியுள்ளது உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Yeh Daur Ishq ka Naseeb Waalon ko milta hai... Jahan Barood ki Khushboo mein Gulab khilta hai...
— T-Series (@TSeries) November 1, 2026
Of Love and other Battles....
This December, #LoveLikeAKing #TuMilJaaye song out now! https://t.co/o3lBt5Cmki#KING in cinemas 24.12.26