Loading...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

ஸ்டார்லிங்க் சேவையைத் தடுக்கும் முன்னணி நிறுவனங்கள்? கொதித்த எலான் மஸ்க்

இந்தியாவில் தனது 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் தொலைத்தொடர்பு சந்தையைக் கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட "ஒலிகோர்க்குகள்" (Oligarchs) தான் இதற்குக் காரணம் என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

07 Oct 2026
• ஏர்டெல்

ஏர்டெல் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அறிமுகம்: இலவச சர்வதேச ரோமிங் மற்றும் அன்லிமிடெட் டேட்டா சலுகைகள்

இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக ₹499 முதல் தொடங்கும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

07 Oct 2026
• தங்க விலை

மீண்டும் அதிகரிக்க துவங்கிய தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உயர்வு: வீட்டுக் கடன் வட்டி மற்றும் EMI அதிகரிக்க வாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முக்கிய ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக அறிவித்துள்ளது.

விவசாயத் துறைக்கு வரி விலக்கு: விதைகளின் சேமிப்பு மற்றும் டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி குறைகிறது

விவசாயத் துறையின் நிதி சுமையைக் குறைக்கும் வகையில், அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விதை சேமிப்பு கிடங்கு வசதிகள் மற்றும் டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

06 Oct 2026
• விமானம்

விமான எரிபொருள் விலை உயர்வு: மத்திய அரசிடம் இந்திய விமான நிறுவனங்கள் அவசர கோரிக்கை

மேற்கு ஆசியப் பகுதியில் தொடரும் போர் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், நிதியுதவி மற்றும் வரி விலக்குகளைத் தொடர கோரி இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு(FIA) மத்திய அரசுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது.

06 Oct 2026
• தங்க விலை

நகை பிரியர்களே, நகை வாங்க சரியான நேரம் இதுதான்; இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

05 Oct 2026
• தங்க விலை

2027-இல் தங்கத்தின் விலை உச்சம் தொடும்! வைரலாகும் பாபா வங்கா கணிப்பு; நிபுணர்கள் சொல்வது என்ன?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், 2027 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயரும் என பாபா வங்காவின் கணிப்புகள் என இணையத்தில் வைரலாகி வருகின்றன.

05 Oct 2026
• இண்டிகோ

விமான பயணிகளுக்கு அதிர்ச்சி! கட்டணங்களை உயர்த்திய இண்டிகோ; அக்டோபர் 6 முதல் புதிய விதிகள்

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ, தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் கட்டணத்தை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யாரோ சொன்னாங்கனு முதலீடு செய்யாதீங்க! பின்ஃப்ளூயன்ஸர்களுக்கு செபி தலைவர் செக்; புராஜெக்ட் ஜாக்ரூக் தொடக்கம்

பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போலி முதலீட்டு வழிகாட்டிகள் (Finfluencers) மற்றும் அநாமதேய ஆலோசனைகளை நம்பி ஏமாற வேண்டாம் என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் தலைவர் துஹின் காந்த பாண்டே எச்சரித்துள்ளார்.

எஃப்டி முதிர்வுத் தொகைக்கு மறுபடியும் வரியா? வருமான வரித்துறைக்கு ஐடிஏடி செக்; முதியவர்களுக்கு நிம்மதி

வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைக் கொண்டு தொடங்கப்பட்ட ஃபிக்சட் டெபாசிட் (எஃப்டி) முதிர்வடையும் போது, அதை மீண்டும் கணக்கில் வராத புதிய டெபாசிட்டாகக் கருதி வருமான வரி விதிக்கக் கூடாது என ஹைதராபாத் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ஐடிஏடி) முக்கிய தீர்ப்பளித்துள்ளது.

ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விலையைக் குறைத்தது சவுதி அரேபியா: 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு

ஆசிய நாடுகளுக்கான தங்களது முதன்மை அரேப் லைட் ரக கச்சா எண்ணெயின் விலையை சவுதி அராம்கோ நிறுவனம் குறைத்துள்ளது.

8 வார சரிவுக்குப் பின் மீண்டும் புத்துயிர் பெற்ற இந்திய பங்குச் சந்தை: வங்கிகளால் புது எழுச்சி

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர்ச்சியாக 8 வாரங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள், திங்கட்கிழமை (அக்டோபர் 5) வர்த்தகத் தொடக்கத்தில் வலுவான மீட்சியைக் கண்டுள்ளன.

05 Oct 2026
• தங்க விலை

வாரத்தின் முதல் நாள் ஆறுதல்! தங்கம் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லாமல் பழைய விலையிலேயே நீடிக்கிறது.

ரிலையன்ஸ்-பிபி நிறுவனங்களுக்குப் பெரும் நிம்மதி! ஆழ்கடல் இயற்கை எரிவாயு உச்ச வரம்பு விலையை உயர்த்தியது மத்திய அரசு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிபி நிறுவனங்களின் கேஜி-டி6 போன்ற ஆழ்கடல் மற்றும் கடினமான இயற்கை எரிவாயு படுகைகளிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவிற்கான உச்ச வரம்பு விலையை மத்திய அரசு அக்டோபர் 1 முதல் $9.89/MMBtu (ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்) ஆக உயர்த்தியுள்ளது.

ஐடிஆர் தாக்கல் செய்ய லேட் ஆயிடுச்சா? எந்த இழப்புகளுக்கு வரிச் சலுகை கிடைக்கும்? முக்கிய விதிகள்

மதிப்பீட்டு ஆண்டு 2026-27 க்கான (AY 2026-27) வருமான வரி அறிக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்ட வரி செலுத்துவோர், பிரிவு 139(4)-ன் கீழ் டிசம்பர் 31, 2026 வரை தாமதமான அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்.

04 Oct 2026
• ஜியோ

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ! ஜியோ பிளாட்பார்ம்ஸ் அக்டோபர் இறுதியில் பங்குச்சந்தையில் நுழைகிறது?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டிஜிட்டல் சேவைகளுக்கான ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம், வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் இந்திய பங்குச் சந்தையில் தனது பங்குகளைப் பட்டியலிடத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

04 Oct 2026
• இந்தியா

பெண்களுக்கு பாதுகாப்பான வேலை சூழல்! இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நிறுவனங்கள் எவை? பட்டியல் வெளியானது

இந்தியாவில் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சமமான வாய்ப்புகளை வழங்கும் பெண்களுக்கான சிறந்த 10 நிறுவனங்கள் 2026 பட்டியலை கிரேட் பிளேஸ் டு வொர்க் இந்தியா அமைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

04 Oct 2026
• ஜிஎஸ்டி

இனி ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் கிடையாதா? அக்டோபர் 7 கூட்டத்தில் மத்திய அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கைது செய்யும் அதிகாரத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

'கிரிப்டோகரன்சியில் எச்சரிக்கை, ஆனால் அந்த டெக்னாலஜி ஓகே!' ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேச்சு

தனியார் கிரிப்டோகரன்சிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொடர்ந்து எச்சரிக்கையான நிலைப்பாட்டையே கொண்டிருக்கும் என்றும், அதேவேளையில் அதன் பின்னால் உள்ள பிளாக்செயின் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் என்றும் ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

43 நாடுகளுக்கு விரிவடைந்த கச்சா எண்ணெய் வர்த்தகம்! சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் அதிரடி வியூகம்

சர்வதேச அளவில் ஏற்படும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி ஆதாரங்களை 27-லிருந்து 43 நாடுகளாக உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு $18.34 பில்லியன் குறைந்தது; ஆர்பிஐ தகவல்

செப்டம்பர் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 18.34 பில்லியன் டாலர் குறைந்து 757.46 பில்லியன் டாலராக சரிவடைந்துள்ளது.

03 Oct 2026
• தங்க விலை

வாரத்தின் கடைசி நாளில் நிம்மதி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது.

02 Oct 2026
• செபி

ரூ.25 லட்சம் இருந்தா போதும்! செபியின் புதிய PMS விதிகளால் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் சூப்பர் வாய்ப்புகள்

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகளுக்கான (PMS) புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

02 Oct 2026
• தங்க விலை

இறங்கிய வேகத்தில் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

ஒரே மாதத்தில் ₹7,300 கோடி ஹேக்! கிரிப்டோ உலகை உலுக்கிய பிட்கெட் மற்றும் லிக்விட் நெட்வொர்க் பாதுகாப்பு மீறல்கள்

கிரிப்டோகரன்சி சந்தையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நிதி இழப்பை சந்தித்துள்ளது.

25 ஆண்டுகளில் இல்லாத தொடர் சரிவு! பங்குச் சந்தையில் வீழ்ச்சி; அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம் என்ன?

இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 1) வர்த்தக தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தன.

01 Oct 2026
• தங்க விலை

தங்கம் விலை மீண்டும் சரிவு; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து சரிந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்துள்ளது.

வணிக எல்பிஜி சிலிண்டர் விலை திடீர் உயர்வு! புதிய விலைப் பட்டியல்

அக்டோபர் மாதம் பிறந்துள்ள நிலையில், வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

30 Sep 2026
• தங்க விலை

கிராமிற்கு ரூ.70 அதிகரித்த தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து சரிந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

29 Sep 2026
• லண்டன்

லண்டனில் நடந்த உலகின் மிக முக்கிய ஏலம்: ரூ.400 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்ற 4 Rolex கடிகாரங்கள்

லண்டனில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஏலத்தில் ரோலக்ஸ் நிறுவனத்தின் நான்கு 'ஆயிஸ்டர் பெர்பெச்சுவல் காஸ்மோகிராஃப் டேடோனா' கடிகாரங்கள் மொத்தம் 49.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ($49.4 Million / சுமார் £37.3 மில்லியன்) விற்பனையாகியுள்ளன.

29 Sep 2026
• தங்க விலை

அதிரடியாக குறையும் தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன?

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து சரிந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, நேற்று மாலை இருந்த விலையிலேயே தொடர்கிறது.

29 Sep 2026
• அமெரிக்கா

அமெரிக்காவில் $15 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்தியாவின் எஸ்ஸார் குழுமம்: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் தயாரிப்புத் துறையை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான 'மெசாபி மெட்டாலிக்ஸ்' நிறுவனம் ஐயோவாவில் $15 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட எஃகு ஆலையை நிறுவவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

என்ஆர்ஐகளிடம் சொத்து வாங்குவது இனி ரொம்ப ஈஸி! அக்டோபர் 1 முதல் புதிய விதிகள் அமல்

வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் (என்ஆர்ஐ) இருந்து வீடோ அல்லது நிலமோ வாங்குவது என்பது வழக்கமான சொத்துப் பரிவர்த்தனையை விட அதிக ஆவணப் பணிகளையும், கூடுதல் சட்ட நடைமுறைகளையும் கொண்டதாகவே இருந்து வந்தது.

வருமான வரி தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்! நவம்பர் 21 வரை கெடு நீட்டிப்பு; யார் கவனத்தில் கொள்ளவேண்டும்?

2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையைத் (ஐடிஆர்) தாக்கல் செய்யக் காத்திருந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மிகப்பெரிய நிவாரண செய்தியை வெளியிட்டுள்ளது.

28 Sep 2026
• டாடா

டாடா சன்ஸ் மறுசீரமைப்பு! ஆர்பிஐ விதிகளிலிருந்து தப்பிக்க டாடா அறக்கட்டளை மாஸ் பிளான்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை வைத்துள்ள டாடா அறக்கட்டளை, டாடா குழுமத்தின் அமைப்பில் ஒரு முக்கிய கார்ப்பரேட் மறுசீரமைப்பை முன்மொழிந்துள்ளது.

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ₹1 லட்சம் கோடி கடன் பத்திரங்களை விற்று ஆர்பிஐ சாதனை

இந்திய சந்தையில் உபரியாக உள்ள நிதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நடப்பு நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ₹1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு கடன் பத்திரங்களை நிகர விற்பனை செய்துள்ளது.

28 Sep 2026
• இந்தியா

சுவிட்சர்லாந்து ஜிடிபியையே மிஞ்சிய இந்திய கோடீஸ்வரர்கள்! ₹187.5 லட்சம் கோடி சொத்து; ஹுருன் அறிக்கையில் தகவல்

சமீபத்தில் வெளியிடப்பட்ட எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2026 அறிக்கையின்படி, இந்தியாவின் முன்னணி 1,810 கோடீஸ்வரர்களின் கூட்டு சொத்து மதிப்பு ₹187.5 லட்சம் கோடியை ($1.96 டிரில்லியன்) எட்டியுள்ளது.

UPI கட்டண பாலிசிக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அக்டோபர் 15 முதல் புதிய MDR விதிகள்

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வணிகர் தள்ளுபடி வீதம் (MDR) கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

28 Sep 2026
• இந்தியா

இந்தியா - ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: தமிழகத்தில் குவியும் ஐரோப்பிய முதலீடுகள்

இந்தியாவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) 2027-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் தங்களது உற்பத்தி ஆலைகள் மற்றும் சேவைத் துறைகளை விரிவுபடுத்தத் தமிழ்நாட்டை முதன்மை இலக்காகத் தேர்ந்தெடுத்து வருகின்றன.

வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்து ரூ.6 லட்சம் கோடி நஷ்டம்! முதலீட்டாளர்களுக்கு பேரதிர்ச்சி

இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) வர்த்தகத் தொடக்கத்திலேயே கடும் சரிவை சந்தித்தன.

வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயர்வு: அக்டோபர் 1 முதல் ஏசி, டிவி, வாஷிங் மெஷின் விலை அதிகரிக்கிறது

வருகின்ற அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஏசி, LED டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை 5% முதல் 8% வரை உயர்த்த நுகர்வோர் மின்சாதனத் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

28 Sep 2026
• தங்க விலை

நகை வாங்க இதுதான் சரியான நேரம்! தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரியும் தங்கம் விலை

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து சரிந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று மீண்டும் குறைந்துள்ளது.

28 Sep 2026
• வங்கி

3 நாள் வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: இன்று வழக்கம்போல் இயங்கும் வங்கிகள்

இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவிருந்த நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியர் சங்கங்கள் ஒத்திவைத்துள்ளன.

28 நாட்கள் இல்லை, இனி மாதம் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்: TRAI போட்ட புது விதி

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI), தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13-வது திருத்தம்) விதிகள் 2026-ஐ வெளியிட்டுள்ளது.

27 Sep 2026
• நிதி

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்: LPG, UPI மற்றும் வங்கி விதிகளில் திருத்தம்

2026 அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.

சந்தை வீழ்ச்சியைக் கண்டு பயப்படவேண்டாம்! பங்குச் சந்தையில் நஷ்டத்தைத் தவிர்க்கும் எளிய SIP முதலீட்டு ரகசியங்கள்

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அதிக ஆபத்து நிறைந்தது என்ற பயத்தால் பெரும்பாலானோர் தங்களது பணத்தை வங்கிகளில் மட்டுமே சேமிக்கின்றனர்.

26 Sep 2026
• கடன்

குழப்பமின்றி தேர்வு செய்யுங்கள்: உங்கள் தேவைக்கேற்ற சிறந்த இந்திய அடமானக் கடன்கள்

இந்தியா போன்ற பரந்துபட்ட நிதிச் சந்தையில் அடமானக் கடன்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது சற்றே சிக்கலானதாகத் தோன்றலாம்.

26 Sep 2026
• தங்க விலை

வாரத்தின் இறுதியில் மீண்டும் தங்கம் விலை சரிவு; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

25 Sep 2026
• முதலீடு

PPF மற்றும் FD: ஃப்ரீலான்சர்களுக்கு எது சிறந்தது?

இந்தியாவில் உள்ள இரண்டு பிரபலமான முதலீட்டுத் திட்டங்கள் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FDs) ஆகும். இவை இரண்டும் வெவ்வேறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ப, தனித்துவமான பலன்களைத் தருகின்றன.

இந்திய அந்நியச் செலாவணி இருப்பு $14.89 பில்லியன் சரிவு: ரிசர்வ் வங்கி தகவல்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கைப்படி, செப்டம்பர் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 14.881 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்து, ஒட்டுமொத்தமாக 765.901 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

25 Sep 2026
• வங்கி

3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்! எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங்கள் முழுமையாக ரத்து

வங்கி ஊழியர் சங்கங்கள் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை நாடு தழுவிய அளவில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.