டொனால்ட் டிரம்ப்: செய்தி

'அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்': டொனால்ட் டிரம்ப் பேச்சு 

வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

15 Mar 2024

சீனா

சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA

டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CIA) ஒரு இரகசிய நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளித்தார்.

அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன் 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சூப்பர் டூஸ்டே வெற்றியைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார்.

அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வு செய்யப்பட வாய்ப்பு

குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன.

அதிபர் தேர்தலில் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், கேபிடல் கிளர்ச்சி சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் கீழ், கூட்டாட்சி பதவிக்கான வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதிலிருந்து மாநிலங்களைத் தடுத்துள்ளது.

கேபிடல் கலகம்: இல்லினாய்ஸ் முதன்மை வாக்குப்பதிவில் இருந்து டிரம்ப் தகுதி நீக்கம்

ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிட்டலில் நடந்த கிளர்ச்சியில் டொனால்ட் டிரம்பின் பங்கு காரணமாக இல்லினாய்ஸின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி முதன்மை வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் பங்கெடுப்பதை இல்லினாய்ஸ் மாநில நீதிபதி புதன்கிழமை தடை செய்து உத்தரவிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூ ஹாம்ப்ஷயர் பிரைமரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் விவேக் ராமசாமி விலகல்; டொனால்ட் டிரம்பை ஆதரிப்பதாக அறிவிப்பு 

இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி, அயோவா குடியரசுக் கட்சிக் கூட்டத்தில் தோல்வியை சந்தித்ததை அடுத்து, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் முதல் போட்டியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி

திங்களன்று நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் வாக்கெடுப்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அயோவாவின் காக்கஸ்ஸில் வெற்றி பெற்றார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் இரண்டாவது தொகுப்பு வெளியீடு

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அமெரிக்க செனட்டர் ஜார்ஜ் மிட்செல் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதரும் நியூ மெக்சிகோ கவர்னருமான பில் ரிச்சர்ட்சன் உட்பட, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 19 புதிய ஆவணங்களில் பல பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதிப்பு

ஜனவரி 2021ல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறி, மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதித்துள்ளது.

"அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்"- புலம்பெயர்ந்தோர் குறித்து ட்ரம்ப் பேச்சு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நியூ ஹாம்ப்ஷயர் பேரணியில் புலம்பெயர்ந்தோர், "அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்" என பேசினார்.

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானதாக அவரது நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 100.

அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவரிடம் கூறிய ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவருக்கு கூறியதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) கைது செய்யப்பட்டார்.

காவல்துறையில் சரணடைய உள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு போடப்பட்டுள்ள நிலையில், அவர் வியாழக்கிழமை அட்லாண்டாவில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்": அதிபர் தேர்தல் விவாதங்களைத் தவிர்க்கும் டிரம்ப்

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் நடைபெற இருக்கும் குடியரசுக் கட்சியின் முதல் அதிபர் தேர்தல் விவாதத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளிகளுக்கு எதிராக திங்கள்கிழமை இரவு(உள்ளூர் நேரப்படி) கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு 

2020ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்ததை மாற்றியமைக்க முயன்றது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மீது செவ்வாயன்று நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டன.

ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்  

ரகசிய ஆவணங்கள் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று(ஜூன் 13) விடுவிக்கப்பட்டார்.

ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப் 

ரகசிய ஆவணங்கள் வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜூன் 13ஆம் தேதி 1900 GMT மணிக்கு மியாமியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். (இந்திய நேரம்: இன்று நள்ளிரவு 12:30 மணி)

09 Jun 2023

உலகம்

ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ரகசிய ஆவணங்களை கையாண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.