LOADING...
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பாகுபாடு காட்டப்படுவதாக நமீபியா புகார்
இந்தியாவுக்கு ICC பாகுபாடு காட்டப்படுவதாக நமீபியா புகார்

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பாகுபாடு காட்டப்படுவதாக நமீபியா புகார்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 12, 2026
11:27 am

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலக கோப்பை தொடரில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியாவை நமீபியா எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் (Gerhard Erasmus) போட்டி அமைப்பாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய எராஸ்மஸ், "இந்தியாவுக்கு இரண்டு முறை இரவு நேர பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு ஒருமுறை கூட மின்விளக்குகளின் கீழ் பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதன் மூலம் இந்தியாவுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

நமீபியா

நமீபியாவின் சவால்

நமீபியா நாட்டில் போதிய மின்விளக்கு வசதி கொண்ட மைதானங்கள் இல்லாததால், அந்த நாட்டு வீரர்களுக்கு பனிப்பொழிவு மற்றும் இரவு நேர வெளிச்சத்தில் விளையாடிய அனுபவம் மிகக் குறைவு. "எங்களிடம் ஐஎல்டி20 (ILT20) போன்ற தொடர்களில் விளையாடிய ஒரு சில வீரர்களை தவிர மற்றவர்களுக்கு இது புதிய சூழல். ஆனாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்; நமீபியாவுக்கே உரிய போராட்ட குணத்துடன் விளையாடுவோம்" என அவர் உறுதியளித்தார். தனது முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த நமீபியாவுக்கு, இன்றைய போட்டி வாழ்வா-சாவா போராட்டமாகும். மறுபுறம், தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முனைப்பு காட்டி வருகிறது.

Advertisement