இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
கோவா தீ விபத்து: லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது; நாடு கடத்தும் பணி ஆரம்பம் என தகவல்
கோவாவில் 25 உயிர்களைப் பலிகொண்ட இரவு விடுதி தீ விபத்துச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான குற்றவாளிகளான கௌரவ் மற்றும் சௌரப் லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொட்டல உணவுகளில் வெஜ்- நான் வெஜ் குறியீடு கட்டாயம் இருக்கவேண்டுமென தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
தமிழகத்தில் பொட்டலமிடப்பட்டு (packaged) விற்கப்படும் உணவுப் பொருட்களில், அது சைவ உணவா (Vegetarian) அல்லது அசைவ உணவா (Non-Vegetarian) என்பதை குறிக்கும் குறியீடு கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
கோவா இரவு விடுதி உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்களின் பாஸ்போர்ட் சஸ்பெண்ட்; அதன் அர்த்தம்?
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு கோவாவில் உள்ள 'Birch by Romeo Lane' என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் வரை குளிர் நீடிக்கும் என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்
தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என கணித்துள்ளார் Tamilnadu weatherman பிரதீப் ஜான்.
தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க மோடி, ஷா, ராகுல் காந்தி சந்திப்பு
அடுத்த தலைமை தகவல் ஆணையரை (CIC) நியமிப்பது குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதன்கிழமை கூடினர்.
இந்தியாவில் மிகவும் மன அழுத்தமுள்ள நகரம் எது தெரியுமா?
சமீபத்திய உலகளாவிய ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள ஒரு மெட்ரோ நகரம், உலகின் மிகவும் மன அழுத்தமுள்ள நகரங்களின் பட்டியலில் டாப் 10-ல் இடம்பிடித்துள்ளது.
இண்டிகோ சர்ச்சை எதிரொலி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தினசரி சேவைகளில் 100 விமானங்களை அதிகரித்துள்ளது
தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கடுமையான இடையூறுகளை சந்தித்து வருகிறது, புதன்கிழமை 70க்கும் மேற்பட்ட புதிய ரத்துகள் செய்யப்பட்டன.
தீபாவளிக்கு UNESCO அங்கீகாரம்: அருவமான கலாசாரப் பட்டியலில் இணைந்தது
தீப ஒளி திருவிழாவான தீபாவளி, யுனெஸ்கோவின் 'மனிதகுலத்தின் அருவமான கலாசார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ பட்டியலில்' (Representative List of the Intangible Cultural Heritage of Humanity) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
மூதறிஞர் ராஜாஜிக்கு பிரதமர் மோடி அஞ்சலி: அரிய ஆவணங்களை பகிர்ந்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த அரசியல் தலைவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
லட்டு சர்ச்சை ஓய்ந்ததும் திருப்பதி தேவஸ்தானத்தில் வெடித்தது 'பட்டு சால்வை ஊழல்'
உலக புகழ் பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), பல ஆண்டுகளாக பட்டு சால்வை விநியோகத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
இண்டிகோ விமான சேவை 10% குறைப்பு: மத்திய அரசு அதிரடி உத்தரவு
தொடர்ச்சியான விமான சேவை ரத்து மற்றும் பயணிகளுக்கான குழப்பங்கள் காரணமாக, இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகளை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
'CJI முதல் CCTV வரை': SIR விவாதத்தின் போது ராகுல் காந்தியின் 3 கேள்விகள்
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்த மக்களவை விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மூன்று கேள்விகளையும் நான்கு கோரிக்கைகளையும் எழுப்பினார்.
1980-81 வாக்காளர் பட்டியல் தொடர்பாக சோனியா காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
பார் அண்ட் பெஞ்ச் அறிக்கையின்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்திய குடிமகளாக மாறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், டெல்லி நீதிமன்றம், சோனியா காந்தி மற்றும் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
"பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே சட்டங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்": அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
இண்டிகோ விமான சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ள இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
72 நாட்களுக்கு பின்னர் மக்களை சந்தித்த விஜய்: புதுச்சேரியில் பேசியது என்ன?
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சுமார் 72 நாட்களுக்கு பிறகு மீண்டும் அரசியல் கூட்டத்தில் இன்று விஜய் கலந்துகொண்டார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது எப்படி?
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் தி.மு.க. இடையே ஏற்பட்ட விவகாரம் போன்ற சூழல்களில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்குவதற்கான அரசியலமைப்பு சட்ட நடைமுறை குறித்து இந்திய சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது.
இண்டிகோவின் குளிர்கால விமான வழித்தடங்களை குறைக்க மத்திய அமைச்சரவை முடிவு
இண்டிகோவின் குளிர்கால விமான அட்டவணையை குறைத்து, அதன் இடங்களை மற்ற விமான நிறுவனங்களுக்கிடையில் மறுபகிர்வு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 'SIR' விவாதம் இன்று தொடக்கம்: என்ன எதிர்பார்க்கலாம்?
நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் 'SIR' (Special Intensive Revision - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்) நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் தொடங்குகிறது.
சபரிமலையில் விரைவில் 2.7 கி.மீ. ரோப் கார் சேவை: 2026 மண்டல சீசனுக்குள் துவங்க இலக்கு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களின் வசதிக்காகவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்காகவும் அமைக்கப்படவுள்ள ரோப் கார் திட்டத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்; இன்டர்போல் உதவியை நாடும் கோவா போலீஸ்
கோவாவில் உள்ள 'Birch by Romeo Lane' என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர்.
Work From Home ஃபேஸ்புக் விளம்பரத்தால் ₹31 லட்சம் இழந்த கர்நாடக பெண்
கர்நாடக மாநிலம் உடுப்பி, உத்யாவராவைச் சேர்ந்த 55 வயதுப் பெண் ஒருவர், ஃபேஸ்புக் தளத்தில் காணப்பட்ட 'வீட்டிலிருந்து வேலை' (Work From Home) விளம்பரத்தை நம்பி ₹31 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.
சீனாவுக்குப் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை: காரணம் என்ன?
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைத் தொடர்ந்து, சீனாவுக்குப் பயணம் செய்ய அல்லது சீன விமான நிலையங்கள் வழியாகச் செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
'வந்தே மாதரம்' தேசிய கீதமாக இருக்க நேரு ஏன் எதிர்த்தார்? ஆவணங்கள் மூலம் வெளியான காரணம்
'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உண்மையைத் வெளிச்சத்திற்கு கொண்டுவர இருப்பதாக பாஜக கூறியுள்ளது.
'உச்ச நீதிமன்ற தலையீடு தற்போது அவசியமில்லை': இண்டிகோ சேவைகள் மீதான PIL விசாரணையை நிராகரித்த SC
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட சமீபத்திய இடையூறுகள் தொடர்பான பொது நல வழக்கு (PIL) மீதான அவசர விசாரணையை இந்திய தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த் திங்கள்கிழமை நிராகரித்தார்.
'ஆழ்ந்த அதிர்ச்சி...': தீ விபத்துக்குப் பிறகு தலைமறைவான கோவா கிளப் உரிமையாளர் முதல்முறையாக மௌனம் கலைத்தார்
கோவாவில் உள்ள Birch by Romeo Lane என்ற இரவு விடுதியின் உரிமையாளர் சௌரப் லுத்ரா, 25 பேர் கொல்லப்பட்ட பேரழிவு தீ விபத்துக்கு பிறகு தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
இண்டிகோ சிக்கல்: விமான போக்குவரத்து துறையில் கூடுதல் நிறுவனங்களுக்கான அழைப்பு விடுத்த மத்திய அரசு
இண்டிகோ விமான சேவையில் சமீபத்தில் ஏற்பட்ட பெருமளவிலான விமான ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு TVK கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது!
கரூர் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு பிறகு, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சியின் முதல் மாபெரும் அரசியல் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை; முறைகேடுகளைத் தடுக்க UIDAI புதிய விதிகள்
வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத் சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ எனப் பெயர் மாற்றம்
தெலுங்கானா மாநில அரசு, ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தைக் கொண்டுள்ள சாலைக்கு, அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'வந்தே மாதரம்' பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தேசியப் பாடலான "வந்தே மாதரம்"-மின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நீண்ட விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இண்டிகோ நெருக்கடி: விமான கட்டணத்தை கட்டுப்படுத்த ஏர் இந்தியா புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு, விமான கட்டணங்கள் திடீரென உயர்ந்துள்ள நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் நிதி சுமையை குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் புதிய பயண கட்டணங்களை அமல்படுத்த தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் 7வது நாளாக விமான சேவை பாதிப்பு: சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து
நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை தொடர்ந்து 7வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு: ரயில் சேவைகளில் தாமதம்
மும்பை மெட்ரோவின் வழித்தடங்கள் 2A மற்றும் 7 ஆகியவற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட தற்காலிகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மின்சார பயனர்களுக்கு நற்செய்தி; மின்கட்டணத்தைக் குறைக்க ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் மின் விநியோகத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நுகர்வோருக்கான மின்கட்டணத்தைக் குறைக்கவும், மின் செயல்திறனை மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறை: வாக்காளர் பட்டியலில் தவறான விவரம் அளித்த குடும்பத்தின் மீது உ.பி.யில் வழக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) படிவங்களில் தவறான விவரங்களை அளித்ததாக ஒரு குடும்பத்தின் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.