LOADING...
ஹரீஷ் ராணா வழக்கு: இந்தியாவில் முதல் முறையாக கருணை கொலைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்
இந்தியாவில் முதல் முறையாக கருணை கொலைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்

ஹரீஷ் ராணா வழக்கு: இந்தியாவில் முதல் முறையாக கருணை கொலைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 16, 2026
09:43 am

செய்தி முன்னோட்டம்

கடந்த 13 ஆண்டுகளாக உணர்வற்ற நிலையில் உயிருக்கு போராடி வந்த ஹரீஷ் ராணாவின் செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் உணவு குழாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக அவர் காசியாபாத்திலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த ஹரீஷ் ராணா, 2013-ஆம் ஆண்டு தங்கியிருந்த விடுதியின் 4-வது மாடியிலிருந்து விழுந்து பலத்த காயமடைந்தார். அன்று முதல் 13 ஆண்டுகளாக அவர் சுயநினைவின்றி கோமா நிலையிலேயே இருந்தார். அவரது தந்தை அசோக் ராணா மற்றும் குடும்பத்தினர் இத்தனை ஆண்டுகளாக அவரை மிகுந்த அர்ப்பணிப்புடன் கவனித்து வந்தனர்.

தீர்ப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. இந்தியாவில் செயற்கை சுவாசக் கருவிகளுடன் சேர்த்து, உணவு மற்றும் நீர் வழங்கும் குழாய்களையும் அகற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கிய முதல் வழக்கு இதுவாகும். "அவர் கண்ணியமான முறையில் மரணத்தைத் தழுவட்டும்" என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பிரியாவிடை

குடும்பத்தினரின் உருக்கமான பிரியாவிடை

ஹரீஷ் ராணாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக, அவரது இல்லத்தில் பிரம்மா குமாரிகள் அமைப்பைச் சேர்ந்த சகோதரி லவ்லி திதி மற்றும் குடும்பத்தினர் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். "எல்லோரையும் மன்னித்துவிடு, எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள், இது நீ புறப்பட வேண்டிய நேரம்" என்று அவரது சகோதரி கண்ணீர் மல்கக் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. "இந்தத் தீர்ப்பு எங்கள் வலியைத் தீர்க்காது, ஆனால் எங்களைப் போன்ற இக்கட்டான நிலையில் உள்ள மற்ற குடும்பங்களுக்கு இது ஒரு நல்வழிகாட்டியாக அமையும்" என்று ஹரீஷின் தந்தை அசோக் ராணா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement