சினிமா: செய்தி
விஜய் மற்றும் சூர்யா நடித்த கிளாசிக் திரைப்படம் ஃப்ரெண்ட்ஸ் நவம்பர் 21 அன்று மறுவெளியீடு
நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம், வரும் நவம்பர் மாதம் 21 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விஷாலின் புதிய அவதாரம்; மகுடம் திரைப்படத்தை இயக்குவதை உறுதி செய்தார்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஷால் இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவு; தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புது அப்டேட்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் பராசக்தி.
சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு; ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தயாராகும் கருப்பு முதல் பாடல் வெளியீடு
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா மற்றும் கூட்டணியில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல், தீபாவளியை முன்னிட்டு திங்கட்கிழமை (அக்டோபர் 20) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த டயலாக்கா? ஜீவாவின் 'தம்பி தலைவர் தலைமையில்' டீசர் வசனத்தால் சர்ச்சை
நடிகர் ஜீவா நடித்துள்ள புதிய திரைப்படமான 'தம்பி தலைவர் தலைமையில்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள அதே வேளையில், அதில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குட் பேட் அக்லியால் லாபமா நஷ்டமா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்; இளையராஜா விவகாரம் தொடர்பாகவும் கருத்து
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் தொடர்பான வசூல் நிலவரங்கள் மற்றும் இளையராஜாவின் பாடல்கள் உபயோகிக்கப்பட்ட விவகாரம் குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்? சண்டிகர் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிவாகியதாக தகவல்
பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகையான திரிஷா, விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
8 மணிநேரம் ஷிப்டு: திரையுலகில் நிலவும் பாரபட்சத்தை கடுமையாக சாடும் தீபிகா படுகோன்
நாக் அஷ்வின் இயக்கி வரும் 'கல்கி 2898 கி.பி 2' மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் 'ஸ்பிரிட்' ஆகிய படங்களில் இருந்து தான் விலகியது தொடர்பான சர்ச்சைகளுக்கு நடிகை தீபிகா படுகோன் இறுதியாக பதிலளித்துள்ளார்.
பெங்களூரில் இந்தியாவின் முதல் 'Dine-in cinema' தொடக்கம்: PVR INOX புதிய முயற்சி
இந்தியாவில் சினிமா அனுபவத்திற்கு புதிய திருப்புமுனை தரும் விதமாக, PVR INOX நிறுவனம் புதன்கிழமை பெங்களூரின் M5 ECity மாலில் நாட்டின் முதல் 'Dine-in cinema' வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் திடீர் நீக்கம்; காரணம் இதுதானா?
இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி, பாகுபலி திரைப்படங்களின் இரண்டு பாகங்களும் இணைக்கப்பட்ட பாகுபலி: தி எபிக் (Baahubali: The Epic) திரைப்படத்தை அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியிடத் தயாராகி வருகிறார்.
பிப்ரவரியில் திருமணம்? விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகத் தகவல்
பிரபல நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்குச் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.
அடுத்தடுத்து தாக்குதலால் பீதி; இந்திய திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதாக கனடா திரையரங்கங்கள் அறிவிப்பு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஆக்வில்லில் அமைந்துள்ள ஒரு திரையரங்கம், கடந்த ஒரு வாரத்தில் இரண்டு தனித்தனி வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, பல இந்திய திரைப்படங்களின் திரையிடல்களை ரத்து செய்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் விரைவில் டும் டும் டும்!
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியும், நடிகருமான அல்லு சிரிஷ், தனது காதலி நயனிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் எதிரொலி; காந்தாரா: அத்தியாயம் 1 சென்னை விளம்பர நிகழ்வு ரத்து
நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கரூர் பேரணியில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் உயிரிழப்பு காரணமாக, காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் படக்குழுவினர் சென்னையில் நடத்தவிருந்த விளம்பர நிகழ்வை ரத்து செய்துள்ளனர்.
கார் பந்தயத்திற்காக குடும்பத்திற்கு செலவிடும் நேரத்தை தியாகம் செய்தேன்; நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சி
தமிழ் சினிமா நடிகர் அஜித்குமார், தான் கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்றபோது, தனது தனிப்பட்ட ஆர்வத்திற்காகக் குடும்பத்துடன் செலவிடும் முக்கியமான நேரத்தைத் தியாகம் செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் முதல் பாடல் 'என்னை ஆளும் சிவனே' வெளியானது
இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகும் காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் முதல் பாடல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
சார்பட்டா 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குனர் பா ரஞ்சித் தகவல்
இயக்குனர் பா ரஞ்சித், தான் எழுதி முடித்த சார்பட்டா 2 படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து உற்சாகமாகப் பேசினார்.
லாலேட்டன் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு
இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது 2023 மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் 2 நாளில் நடக்கவிருந்த சுபநிகழ்ச்சி, அதற்குள் வந்திறங்கிய பேரிடி
மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி *'கலக்கப்போவது யாரு'* மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.
நான் தான் சிஎம்; புதிய படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பார்த்திபன்
தேசிய விருது பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், தனது அடுத்த படமான "நான் தான் சிஎம்" என்ற அரசியல் திரைப்படத்தை அறிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் KH237 படத்தில் இணைந்தார் தேசிய விருது பெற்ற சியாம் புஷ்கரன்! முழு விபரம்
நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படமான KH237 திரைப்படத்திற்கு, தேசிய விருது பெற்ற பிரபல எழுத்தாளர் சியாம் புஷ்கரன் கதை எழுதுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயின் ஜனநாயகனுக்கு நேரடி போட்டி; நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மறைந்த அபிநய சரஸ்வதி சரோஜா தேவிக்கு மாநில அரசின் உயரிய விருது அறிவிப்பு
கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது, மறைந்த புகழ்பெற்ற நடிகர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகை பி. சரோஜா தேவி ஆகியோருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட உள்ளது.
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் - உலக நாயகன் காம்போ! உறுதி செய்தார் நடிகர் கமல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவிருப்பதை, நடிகர் கமல்ஹாசன் சைமா விருதுகள் 2025 விழாவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
விமானத்தில் தலையில் மல்லிகைப் பூ சூடியதற்காக ₹1 லட்சத்துக்கும் மேல் அபராதம் செலுத்திய நடிகை
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர், மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை எடுத்துச் சென்றதற்காக ₹1 லட்சத்துக்கும் அதிகமான அபராதம் செலுத்தினார்.
பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் காலமானார்
தமிழ் சினிமா மற்றும் ஆன்மிகத் துறையில் தனது பாடல்களால் முத்திரை பதித்த மூத்த கவிஞர் பூவை செங்குட்டுவன் (90), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) காலமானார்.
பதிப்புரிமை மீறல்; குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பிறந்தநாள் ஸ்பெஷல்; வெற்றிமாறன் இயக்கத்தில் STR 49 படத்தின் முதல் பார்வை வெளியீடு
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்த வட சென்னை திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என கருதப்படும் STR 49 படத்தின் முதல் பார்வை வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அன்று வெளியிடப்பட்டது.
கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது; ரிலீஸ் அப்டேட் கொடுத்த படக்குழு
நடிகர் கார்த்தி, சூது கவ்வும் படப்புகழ் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வரும் வா வாத்தியார் திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெயிலர் 2 படத்தின் இறுதி வடிவம் எப்படி இருக்கும்? இயக்குனர் நெல்சன் கொடுத்த அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சிம்பு - வெற்றிமாறன் இணையும் படம் உறுதி; அடுத்த 15 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி உறுதியாகியுள்ளது.
ரவி அரசு - விஷால் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு மகுடம் என தலைப்பு
நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ரவி அரசு கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு மகுடம் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
கூலி திரைப்படம் குறித்து வெளியாகும் அந்த வதந்தியை நம்ப வேண்டாம்; ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எச்சரிக்கை
மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் (Malik Streams) என்ற நிறுவனம், நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, "கூலி வாட்ச் & வின் கான்டஸ்ட்" என்ற பெயரில் ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
அவர்கள் AMMAவில் மீண்டும் இணையனும்; மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வான ஸ்வேதா மேனன் அதிரடி
நடிகை ஸ்வேதா மேனன் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இட்லி கடை படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள ஆர்.பார்த்திபன்; அவரே வெளியிட்ட தகவல்
மூத்த நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.பார்த்திபன், நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏகே64 படம் இப்படித்தான் இருக்கும்; இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த மாஸ் அப்டேட்
நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தின் கதைக்களம் குறித்த ஆரம்பகால தகவல்களை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ளார்.
ஆகஸ்ட் 22 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்; தலைவன் தலைவி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் ஆகஸ்ட் 22, 2025 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
படத்தின் லாபத்தில் பங்கு; தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கத் தயாராகி வரும் நடிகர் சூரி?
கருடன் மற்றும் மாமன் போன்ற படங்களில் சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு, பிரபல தமிழ் நடிகர் சூரி, திரைப்படத் துறையில் அடுத்த கட்டமாக தயாரிப்பாளராகவும் களமிறங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி-நித்யா மேனனின் தலைவன் தலைவி ஓடிடியில் எப்போது ரிலீஸ்? வெளியான புது தகவல்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பெற்றுள்ளது.
நடிகர் மதன் பாப் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம்
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல், உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலமான நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் உள்ள பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கூலி படத்தில் மோனிகா பாடல் வைத்தது எதற்கு? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
ரஜினிகாந்தின் வரவிருக்கும் படமான கூலியில் இடம் பெறும் மோனிகா பாடல் ஆன்லைனில் வைரலாகி வருகிறது, குறிப்பாக நடிகர் சௌபின் ஷாஹிரின் துடிப்பான நடனம் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேவா கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி பட டிரெய்லர் வெளியானது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கூலி வர்றான் சொல்லிக்கோ... இன்று மாலை 7 மணிக்கு கூலி டிரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு
ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு; காரணம் என்ன?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தயாராகி உள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) அதிகாரப்பூர்வமாக 'ஏ' சான்றிதழைப் பெற்றுள்ளது.
71வது தேசிய திரைப்பட விருதுகள்: பார்க்கிங் திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிப்பு; வாத்தி இசையமைப்பாளருக்கும் விருது
2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்பட்டுள்ளன.
போதிய திரையரங்குகள் கிடைக்காததால் ஜிவி பிரகாஷின் பிளாக்மெயில் திரைப்பட வெளியீடு ஒத்திவைப்பு
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பிளாக்மெயில் வெளியீடு அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இறக்கும் தருவாயில் ரூ.72 கோடி சொத்தை சஞ்சய் தத்திற்கு உயில் எழுதி வைத்த ரசிகை
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில், தனக்கு ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்தை உயில் எழுதி வைத்துவிட்டுச் சென்ற ஒரு தீவிர நோய்வாய்ப்பட்ட ரசிகையின் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தினார்.
ஹனிமூன் இன் ஷில்லாங்: ராஜா ரகுவன்ஷி கொலையை திரைப்படமாக எடுப்பதாக இயக்குனர் எஸ்.பி.நிம்பாவத் அறிவிப்பு
இந்தூரைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியின் பரபரப்பான கொலை, 'ஹனிமூன் இன் ஷில்லாங்' என்ற தலைப்பில் ஒரு திரைப்படமாகத் தழுவி எடுக்கப்பட உள்ளது.
ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படம் தலைவன் தலைவி, தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜயகாந்த் பிறந்தநாளில் கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு
மறைந்த விஜயகாந்த் நடித்த புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான கேப்டன் பிரபாகரன், அவரது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 22 அன்று பிரமாண்டமாக டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
தனுஷ் பிறந்தநாளில் இட்லி கடையின் முதல் சிங்கிள் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவிப்பு
நடிகர் தனுஷ் தனது வரவிருக்கும் திரைப்படமான இட்லி கடை மூலம் இயக்குநராக மீண்டும் வர உள்ளார்.
வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து அகற்ற நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, பேட் கேர்ள் படத்தின் டீசரை யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.
இந்திய பாக்ஸ் ஆபீஸில் ₹100 கோடி வசூலித்து ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் படம் சாதனை
குறிப்பிடத்தக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையாக, ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் இந்தியாவில் ₹100 கோடி வசூல் செய்து, 2025 ஆம் ஆண்டில் நாட்டில் இரண்டாவது அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமாக மாறியுள்ளது.
திரைப்பட உலகுக்கு பெரும் இழப்பு: 'அபிநய சரஸ்வதி' பி. சரோஜா தேவி மறைந்தார்
இன்று இந்திய சினிமா, அதன் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான 'பத்மபூஷண்' பி. சரோஜா தேவி மறைவால் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளது.
நடிகை வனிதா படத்திற்கு சிக்கல்; மிசஸ் & மிஸ்டர் படத்தில் பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமாரின் புதிதாக வெளியான மிசஸ் & மிஸ்டர் படத்திற்கு எதிராக பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முதல் படம் வெளியாகும் முன்பே எட்டு படங்களில் கையெழுத்திட்ட சாய் அபயங்கர்!
இன்னும் ஒரு படம் கூட திரைக்கு வராத நிலையில், ஏற்கனவே 8 திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஒரு இளம் இசையமைப்பாளர்.
₹92 கோடிக்கு சென்னையில் சொத்துக்கள், ஆடம்பர கார்கள்: கமல்ஹாசனின் சொத்து விவரங்கள் தெரியுமா?
புகழ்பெற்ற நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இந்தியாவின் ஆரம்பகால பான்-இந்தியா நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் இப்போது ராஜ்யசபா MP!
ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் அல்லது எப்1 மாதிரியான ஹாலிவுட் படங்களில் நடிக்க நடிகர் அஜித் ஆர்வம்
தமிழ் சினிமா நடிகர் அஜித் குமார் ஹாலிவுட் படங்களில், குறிப்பாக ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் போன்ற படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
நடிகர் தர்சனின் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
நடிகர் தர்ஷனின் வரவிருக்கும் திரைப்படம் ஹவுஸ் மேட்ஸ் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் கௌவரத்தைப் பெறும் முதல் இந்திய நடிகை ஆனார் தீபிகா படுகோன்
இந்திய சினிமாவின் ஒரு வரலாற்று தருணத்தில், 2026 ஆம் ஆண்டில் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் கௌரவத்தைப் பெற்றவர்களில் தீபிகா படுகோனும் இடம் பெற்றுள்ளார்.
சென்னை சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பெயர் சூட்ட மாநகராட்சி ஒப்புதல்
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவருக்குப் பொருத்தமான அஞ்சலி செலுத்தும் வகையில், மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்ந்த தெருவை எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது.
ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன்; டிராகன் 100 நாள் விழாவில் உணர்ச்சிகரமாக பேசிய பிரதீப் ரங்கநாதன்
லவ் டுடே என்ற பிளாக்பஸ்டர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர்-இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தனது சமீபத்திய படமான டிராகன் திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்ததன் மூலம் மற்றொரு மைல்கல்லைக் கொண்டாடினார்.
சிங்கப்பூர் துணைத் தூதரக தலைவருடன் நடிகர் விஜய் சந்திப்பு; பின்னணி என்ன?
தமிழ் சினிமா நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜயை சென்னையில் உள்ள இந்தியாவிற்கான சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் தலைவர் சிஜி போங் சந்தித்தார்.
AK64: நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில்... சூசகமாக வெளியிட்ட மேனேஜர் சுரேஷ் சந்திரா
ரசிகர்களிடைய உற்சாகத்தைத் தூண்டும் விதமாக, நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் தனது சமூக ஊடக பக்கங்களின் பயோவைப் புதுப்பித்து, AK 64 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
'ஜன நாயகன்' படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் தனது வரவிருக்கும் படமான 'ஜன நாயகனுக்காக' ₹275 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க கேரளா விரையும் 5 தனிப்படை போலீசார்
போதைப்பொருள் வழக்கில் தற்போது கைதாகி சிறையில் உள்ள நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் கைதிற்கு காரணமான தயாரிப்பாளர் அளித்த தகவலின் பேரிலும், அடுத்ததாக வளையத்தில் சிக்கியிருப்பவர் நடிகர் கிருஷ்ணா.
சிங்கத்தின் முதல் கர்ஜனை; வெளியான 15 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளை பெற்ற ஜனநாயகன் வீடியோ
நடிகர் விஜயின் வரவிருக்கும் படமான ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டனர்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்ரியாட் படத்தில் மம்மூட்டி-மோகன்லால் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்
மலையாள சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் மாலிக் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தயாராக உள்ள மல்டி ஸ்டார் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்; ஜனநாயகனின் முதல் கர்ஜனை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகனின் முதல் கர்ஜனை (The First Roar) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
யாருக்குதான் பிரச்சினை இல்ல? குபேரா பட விழாவில் ஓபனாக பேசிய நடிகர் தனுஷ்
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய பான் இந்தியா திரைப்படமான குபேரா படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட் ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெற்றது.
நடிகர் தனுஷின் குபேரா படத்தின் டிரெய்லர் வெளியானது
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் டிரெய்லர் ஹைதராபாத்தின் ஜே.ஆர்.சி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட்டில் வெளியிடப்பட்டது.
காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய படக்குழுவினர்
கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் நடிகர்-இயக்குனர் ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது படக்குழுவினர் மயிரிழையில் ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பினர்.
பிரமாண்ட வெற்றி பெற்ற மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக நடிகர் உன்னி முகுந்தன் அறிவிப்பு
மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தனது மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் திட்டமிடப்பட்டிருந்ததை, அசல் படத்தைச் சுற்றியுள்ள கடுமையான விமர்சனங்கள் காரணமாக ரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
குபேரா படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் டிரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு
பிரபல திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கிய, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான குபேரா, ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.