நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 33 வருடங்கள் நிறைவு; வெளியான #33YearsOfVIJAYism வீடியோ
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தின் 33-வது ஆண்டு நிறைவுறும் நிலையில், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக The route நிறுவனம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. தற்போது அது வைரலாகி வருகிறது. இந்த 33 ஆண்டு கால திரைப்பயணத்தினை விஜய் 'ஜனநாயகன்' திரைப்படத்துடன் நிறைவு செய்வார் என கூறப்படுகிறது. அதனால் அவரின் ரசிகர்கள் சோகத்துடனும், அதே சமயம் வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டத்துடனும் அவரை வழியனுப்பத் தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இப்படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#33YearsOfVIJAYism 🔥
— TheRoute (@TheRoute) December 4, 2025
▶️ https://t.co/dQg9y4vplg
He came, He saw, He conquered… all our hearts ♥️#Thalapathy @actorvijay sir 🧨 pic.twitter.com/igNZmST3W9
விவரங்கள்
33 ஆண்டு கால திரைப்பயணம்
டிசம்பர் 4, 1992-இல் வெளியான 'நாளைய தீர்ப்பு' மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய், 33 ஆண்டுகள் கழித்து தனது திரைப் பயணத்தை நிறைவு செய்கிறார். இது அவருடைய அரசியல் மற்றும் பொதுப் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. எச். வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படமே விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 'தளபதி திருவிழா' என்ற பெயரில் மலேசியாவின் கோலாலம்பூரில் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இது ஒரு கின்னஸ் சாதனை முயற்சியாக இருக்கும் எனத் தெரிகிறது.