LOADING...
போலீஸ் பிடியில் இளைஞர் உயிரிழப்பு! மானாமதுரை கைதி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு
மானாமதுரை விசாரணை கைதி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு

போலீஸ் பிடியில் இளைஞர் உயிரிழப்பு! மானாமதுரை கைதி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 09, 2026
10:06 am

செய்தி முன்னோட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் டெலிசன் (26) உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 5 ஆம் தேதி இரவு ஜெயக்குமார் மற்றும் அழகர்சாமி என்பவர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில், கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் குணா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது ஆகாஷ் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழப்பு

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காயமடைந்த ஆகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகாஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் எனக்கூறி, இரண்டு நாட்களாகச் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

சிபிசிஐடி

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

உறவினர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஆகாஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, உண்மைத் தன்மையைக் கண்டறிய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால், காவல்துறையின் விசாரணை முறை மற்றும் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து விரிவான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement