LOADING...

02 Dec 2025


சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' அறிவிப்பு; காற்றழுத்த தாழ்வு எப்போது கரையை கடக்கும்?

'டிட்வா' புயலின் எச்சம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

8வது ஊதியக் குழு: அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் மெகா போராட்டம்; பொதுக்கூட்டங்களுக்கு தடை 

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

நகை வாங்குபவர்கள் கவனத்திற்கு; குறைந்தது தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம் இதோ

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 2) மீண்டும் குறைந்துள்ளது.

'மனித வெடிகுண்டு' மிரட்டல்: குவைத் - ஹைதராபாத் இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது

குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் 'மனித வெடிகுண்டு' இருப்பதாக அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் இன்று மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.

மொபைல்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம்: மத்திய அரசின் புதிய உத்தரவு

தொலைத்தொடர்பு துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களில் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயம் என மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

'டிட்வா' புயலின் தாக்கத்தால், சென்னையில் கடந்த முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

01 Dec 2025


இனி அனைத்து மொபைல்களிலும் இந்த ஆப் கட்டாயம்; மத்திய அரசு அதிரடி உத்தரவு

இந்தியாவில் சைபர் பாதுகாப்பு மற்றும் ஐஎம்இஐ (IMEI) திருட்டு போன்ற மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், புதிதாக விற்பனைக்கு வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாதி (Sanchar Saathi) என்ற அரசு செயலியை முன் கூட்டியே நிறுவுமாறு (Pre-install) மொபைல் உற்பத்தியாளர்களுக்குத் தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் கைது மோசடி: நாடு முழுவதும் விசாரிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் முழு அதிகாரம்

இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வரும் டிஜிட்டல் கைது மோசடி வழக்குகளைக் கையாள்வதற்கு உடனடியாக தேசிய அளவில் கவனம் தேவை என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

சரிவை நோக்கி செல்லும் இந்திய ரூபாய்: டிசம்பர் இறுதிக்குள் $1க்கு ₹90 ஆகுமா? நிபுணர்கள் கணிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. திங்கட்கிழமை (டிசம்பர் 1) வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 89.83 என்ற புதிய குறைந்தபட்ச அளவைத் தொட்டது.

சென்னை, திருவள்ளூருக்கு இன்று ரெட் அலர்ட்: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான டித்வா புயல் வலுவிழந்த போதிலும், அதன் தாக்கம் காரணமாகச் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம்

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தினசரி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி விளையாட்டு நிகழ்வுகளை மொபைல் போன்களில் பார்க்கிறார்கள்.

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தைக் குறைக்க பழைய லேண்ட்லைன் வடிவில் போன்; அறிமுகமான 3 நாட்களில் ₹1 கோடி வருமானம்

சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால் அதிகரித்துவரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர், பழைய கால லேண்ட்லைன் தொலைபேசி போன்ற வடிவமைப்பைக் கொண்ட ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளார்.

மனைவியைக் கொன்று, சடலத்துடன் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன்; கோவையில் பகீர்

தமிழ்நாட்டில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவமாக, கோவையில் பிரிந்து வாழ்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவன், அவரது சடலத்துடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இன்று முதல் அமலுக்கு வரும் நிதி சார்ந்த மாற்றங்கள்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

டிசம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் முக்கிய நிதி விதி மாற்றங்கள், பொதுமக்களின் அன்றாடச் செலவுகள், கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன.

இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்தார் நடிகை சமந்தா; இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியீடு

பிரபல நடிகையான சமந்தா ரூத் பிரபு, இயக்குநர் ராஜ் நிடிமோருவை திங்கட்கிழமை (டிசம்பர் 1) காலையில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வைத்து எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

புடின் வருகை: ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க இந்தியா திட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவது குறித்து இந்தியா விவாதிக்கத் திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025: எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை (டிசம்பர் 1), இரு அவைகளிலும் உறுப்பினர்கள் எழுப்பிய அமளி காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒத்திவைக்கப்பட்டன.

அனைத்துக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உயர்கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்குமாறு உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியர்களால் அமெரிக்கா அதிக பலன் பெற்றுள்ளது: எச்1பி விசா குறித்து எலான் மஸ்க் கருத்து

அமெரிக்காவில் எச்1பி விசா திட்டம் மற்றும் குடியேற்றம் குறித்துத் தொடர்ந்து விவாதங்கள் நிலவி வரும் சூழலில், உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், திறமையான இந்தியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய அளவில் பயனடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இனி வாகனப் பதிவுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை; இன்று முதல் அமலாகிறது புதிய விதி

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (டிசம்பர் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மாதத்தின் முதல்நாளே இப்படியா! நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (டிசம்பர் 1) மீண்டும் அதிகரித்துள்ளது.

உலக எய்ட்ஸ் நாள் 2025: இந்தியாவில் எச்ஐவி தடுப்பில் பிரபலமாகி வரும் PrEP தடுப்பூசி; முழு விபரம்

உலக எய்ட்ஸ் நாள் திங்கட்கிழமை (டிசம்பர் 1) அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் எச்ஐவி தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட உள்ளாரா? அவரே சொன்ன பதில்

ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்ததைத் தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அவர் மீண்டும் திரும்புவாரா என்ற ஊகங்களுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.

INDvsSA முதல் ODI: கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா; 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் சதம் (135 ரன்கள்) இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற உதவியது.

மகிழ்ச்சியான அறிவிப்பு: வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு

மாதாந்திர விலை திருத்தத்தின் ஒரு பகுதியாக, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

30 Nov 2025


உலக சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா: ஒருநாள் போட்டிகளில் அஃப்ரிடியின் சிக்சர் சாதனை முறியடிப்பு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடியின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனைய முறியடித்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

கிரெடிட் கார்டு மோசடியில் பாதிக்கப்பட்டால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவரும் நிலையில், கிரெடிட் கார்டு மோசடிகளும் பெருகி வருகின்றன.

2080க்குள் இந்தியாவின் மக்கள் தொகை 190 கோடியை நெருங்கி நிலைபெறும்: ஆய்வில் தகவல்

இந்தியாவில் மேம்பட்ட கல்வி, பெண் கல்வியறிவு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

1,435 குடிமக்களின் 475 மில்லியன் திர்ஹாம் கடனை ரத்து செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசு, தனது தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக, நாட்டில் உள்ள 1,435 குடிமக்களின் 475 மில்லியன் எமிரேட்ஸ் திர்ஹாம் (AED) மதிப்புள்ள கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருக்கா? நிபுணர்கள் சொல்லும் மாரடைப்பு எச்சரிக்கை அறிகுறிகள்

நவீன வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட நீண்ட பயணங்கள், சீரற்ற தூக்கம் மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தம் காரணமாக, மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளை மக்கள் பெரும்பாலும் சோர்வு அல்லது அசிடிட்டி என்று புறக்கணித்து விடுகின்றனர்.

டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டுறவில் புதிய சகாப்தம்; ஓசூர் ஆலையில் புதிய BMW F 450 GS உற்பத்தி ஆரம்பம்

டிவிஎஸ் மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டராட் (BMW Motorrad) இடையேயான பத்தாண்டுகள் பழமையான உலகளாவிய கூட்டுறவில், இதுவரை 2,00,000 வாகனங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய மைல்கல்லை எட்டியுள்ளன.

பிக் பாஸ் தமிழ் 9: வெளியேற்றப்பட்ட போட்டியாளர் ஆதிரை ரீ என்ட்ரியால் வீட்டில் பரபரப்பு

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், வெளியேற்றப்பட்ட போட்டியாளரான ஆதிரை மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சாதனை நாயகன் விராட் கோலி: 52வது சதம் அடித்து சச்சினின் உலக சாதனையை முறியடித்தார்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 52வது ஒருநாள் சதத்தை அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

வேகம் குறைந்தது; டித்வா புயலின் தற்போதைய நிலை என்ன? வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலக எய்ட்ஸ் நாள் 2025: புதிய தொற்று இல்லாத தமிழ்நாடு உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'புதிய எச்ஐவி தொற்று இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை அடையத் தமிழக மக்களுக்குச் செய்தி வெளியிட்டுள்ளார்.

வாடகை ஒப்பந்த விதிகள் 2025: கட்டாய ஆன்லைன் பதிவு, வைப்புத் தொகைக்கு வரம்பு; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு விடும் செயல்முறையை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையுடனும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் மாற்றும் வகையில் மத்திய அரசு புதிய வாடகை விதிகள் 2025ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

SIR திருத்தப் பணிக்கான கால அவகாசம் 7 நாட்கள் நீட்டிப்பு; டிசம்பர் 16இல் வரைவுப் பட்டியல் வெளியீடு

இந்தியத் தேர்தல் ஆணையம், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கான (SIR) கால அட்டவணையை 7 நாட்கள் நீட்டித்துள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலையேற தடை

திருவண்ணாமலையில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்கள் அண்ணாமலையார் மலை மீது ஏறிச் சென்று தீபத்தைக் காண மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 1) தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இனி ராஜ் பவன் கிடையாது; மக்கள் பவன் என ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம்

மத்திய உள்துறை அமைச்சகம் ராஜ் பவன் என்று இருந்த ஆளுநர் மாளிகைகளின் பெயரை மக்கள் பவன் (லோக் பவன்) என மாற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது.

இனி வாட்ஸ்அப் பயன்படுத்த இது கட்டாயம்; அமலுக்கு வரும் மத்திய அரசின் புதிய விதி

வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற பிரபலமான செய்திப் பரிமாற்ற செயலிகளைப் (Messaging Apps) பயன்படுத்த, இனிமேல் செயலில் உள்ள சிம் கார்டு (Active SIM Card) கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் விளையாடுவதற்காக 14 ஆண்டுகளில் முதல்முறையாக ஐபிஎல்லில் இருந்து விலகினார் ஃபாஃப் டு பிளெசிஸ்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஃபாஃப் டு பிளெசிஸ், 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து விளையாடி வந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் இருந்து இந்த ஆண்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

எந்தப் பயிற்சியும் இன்றிச் செயல்படும் ரோபோ ஆசிரியரை உருவாக்கி அரசு பள்ளி மாணவர் சாதனை

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஆதித்யா, எவ்விதமான ரோபாட்டிக்ஸ் பயிற்சியும் பெறாமல், முழுமையாகச் செயல்படக்கூடிய சோபியா (Sophia) என்ற ரோபோ ஆசிரியரை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

SIR பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் திருத்துதல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான (BLO Supervisors) ஊதியத்தை இரு மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது.

டிட்வா புயல் கோரத் தாண்டவம்: டெல்டாவில் 1.35 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின

டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் பெய்த தொடர் மழையால் சுமார் 1.35 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.