LOADING...
செயற்கைகோள் இணைப்பு வசதி கொண்ட ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்
ஓ-பாய் ஸ்மார்ட்வாட்ச்

செயற்கைகோள் இணைப்பு வசதி கொண்ட ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

எழுதியவர் Prasanna
Mar 13, 2026
01:01 pm

செய்தி முன்னோட்டம்

இணைய வசதி இல்லாத உலகின் எந்தவொரு மூலையிலும் சிக்கிக்கொண்டாலும், உங்களைக் காப்பாற்ற வரும் ஒரு புதிய தொழில்நுட்பத் தயாரிப்புதான் 'ஓ-பாய்' (O-Boy) ஸ்மார்ட்வாட்ச். பியூச்சர்வேவ் (Futurewave) நிறுவனம் வடிவமைத்துள்ள ஸ்மார்ட் கைக்கடிகாரம் செயற்கைக்கோள் இணைப்பு வசதியைக் கொண்டது. சாகசப் பயணங்களை விரும்புபவர்கள் மற்றும் மலையேறுபவர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த 'ஓ-பாய்' கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஸ்மார்ட்வாட்ச்கள் செல்போன் சிக்னலைச் சார்ந்தே இயங்கும். ஆனால், இந்த கடிகாரம் நேரடியாக செயற்கைக்கோளுடன் இணையும் வசதி கொண்டுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச்

சிறப்பம்சங்கள்:

இந்த கடிகாரத்தில் மூன்று முக்கிய அவசரக்கால பொத்தான்கள் உள்ளன. GetMe: நீங்கள் இருக்கும் இடத்தின் துல்லியமான ஜிபிஎஸ் (GPS) தகவலை உங்கள் நெருக்கமானவர்களுக்கு அனுப்பும். Rescue: உங்களுக்கு மருத்துவ உதவி அல்லது மீட்புப் பணி தேவைப்படும்போது, அருகிலுள்ள மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கும். Check-in: "நான் பாதுகாப்பாக இருக்கிறேன்" என்ற செய்தியை முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட எண்களுக்கு அனுப்பும். சிக்னல் கிடைக்காத அடர்ந்த காடுகள் அல்லது கடல் பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் பயணிகளுக்கு, இந்த 'ஓ-பாய்' கடிகாரம் ஒரு டிஜிட்டல் காப்பீடாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்நுட்பமும் பாதுகாப்பும் இணைந்த ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக இது பார்க்கப்படுகிறது.

Advertisement