Loading...
அரசுக் கொள்முதல்களில் 30 சதவீதத்திற்கும் குறைவாக விலை கோரும் டெண்டர்களுக்கு கட்டாய ஆய்வு: நிதி அமைச்சகம் உத்தரவு
அரசுக் கொள்முதல்களில் 30 சதவீதத்திற்கும் குறைவாக விலை கோரும் டெண்டர்களுக்கு கட்டாய ஆய்வு

அரசுக் கொள்முதல்களில் 30 சதவீதத்திற்கும் குறைவாக விலை கோரும் டெண்டர்களுக்கு கட்டாய ஆய்வு: நிதி அமைச்சகம் உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2026
11:30 am

செய்தி முன்னோட்டம்

அரசுத் திட்டங்கள் மற்றும் பொருட்கள் கொள்முதலின் தரத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு நிறுவனங்கள் வெளியிடும் டெண்டர்களில் மதிப்பீட்டு செலவை விட 30 சதவீதத்திற்கும் குறைவாக விலை குறிப்பிடும் ஏலங்கள் அசாதாரணமான குறைந்த ஏலங்களாகக் கருதப்படும். இத்தகைய ஏலங்களை அரசு நிறுவனங்கள் கட்டாயமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அலுவலகக் குறிப்பாணையில் தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது.

எழுத்துப்பூர்வ விளக்கம்

குறைந்த விலையில் பணியை முடிக்கும் திறன் குறித்து எழுத்துப்பூர்வ விளக்கம் கோரல்

மதிப்பீட்டு செலவை விட 30 சதவீதத்திற்கும் குறைவான விலையில் ஒரு நிறுவனம் ஏலம் கோரும்போது, அந்த விலையில் தரமான சேவையையோ அல்லது பொருட்களையோ வழங்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

எனவே அத்தகைய ஏலதாரர்களிடம் டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளின் வரம்பிற்கு ஏற்ப விரிவான விலை பகுப்பாய்வையும் எழுத்துப்பூர்வ விளக்கத்தையும் கொள்முதல் நிறுவனங்கள் கோர வேண்டும்.

இதன் மூலம் ஏலதாரரின் நிதி மற்றும் தொழில்நுட்பத் திறன் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.

தானாகவே நிராகரிப்பு இல்லை

திருப்தி இல்லாவிட்டால் அடுத்த ஏலதாரருக்கு வாய்ப்பு

குறிப்பிட்ட 30 சதவீத வரம்பிற்கு கீழ் விலை குறிப்பிட்ட ஒரே காரணத்திற்காக எந்தவொரு ஏலத்தையும் தானாகவே நிராகரிக்கக் கூடாது என நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மாறாக ஏலதாரர் சமர்ப்பிக்கும் விலை பகுப்பாய்வு மற்றும் விளக்கங்களை ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்.

ஏலதாரர் தனது பணித்திறனைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறினால் மட்டுமே அந்த ஏலத்தை நிராகரித்துவிட்டு, நியாயமான விலையைக் குறிப்பிட்டுள்ள அடுத்த உயர்ந்த ஏலதாரரைப் பரிசீலிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சீரான நடைமுறை

திட்டங்களின் தரத்தை உறுதி செய்யவும் சீரான நடைமுறையைக் கொண்டு வரவும் நடவடிக்கை

இதற்கு முன்பு அரசு கொள்முதல் கையேடுகளில் குறைந்த ஏலங்களைக் கண்டறிய நிலையான எண் வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாமல், அதிகாரிகளின் விருப்பத்திற்கே விடப்பட்டிருந்தது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள 30 சதவீத வரம்பு அரசு டெண்டர்களில் அதிக வெளிப்படைத்தன்மையையும் சீரான நடைமுறையையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரோக்கியமான விலை போட்டியைத் தடுக்காமல், அதே சமயம் தரமற்ற பணிகள் மற்றும் திட்ட தாமதங்களைத் தடுக்க இந்தப் புதிய விதிமுறை பெரிதும் உதவும்.

ADVERTISEMENT