Loading...
தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 14, 2026
11:25 am

செய்தி முன்னோட்டம்

இந்த வார தொடக்கத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை, தற்போது 4 நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை (நவம்பர் 14), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹80 குறைந்து ₹12,615 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹640 குறைந்து ₹1,00,920 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹87 குறைந்து ₹13,762 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹696 குறைந்து ₹1,10,096 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது.

அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹60 குறைந்து ₹10,330 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹480 குறைந்து ₹82,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹195.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹1,95,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT