கூகுள் சர்ச் இனி வேற லெவல்; கடினமான கேள்விகளுக்கும் நொடியில் விடையளிக்கும் புதிய Gemini 4 Hydrogen ஏஐ
செய்தி முன்னோட்டம்
கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி சேவையில் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. கடினமான மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க ஜெமினி 4 ஹைட்ரஜன் (Gemini 4 Hydrogen) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல் இணைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஜெமினி 3.8 ஃபிளாஷ் மாடலை விட 2.5 மடங்கு அதிவேகமாக செயல்படும் திறன் கொண்டது. பல படிநிலைகளைக் கொண்ட பணிகளைத் தானாகவே முடிக்கும் வகையில் இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புரிந்துகொள்ளும் திறன்
எழுத்துப்பிழைகள் கொண்ட நீளமான கேள்விகளையும் புரிந்துகொள்ளும் திறன்
பயனர்கள் இனி தங்களது சந்தேகங்களை தனித்தனியாக பிரித்துத் தேட வேண்டிய அவசியம் இல்லை.
மனதில் தோன்றும் நீளமான கேள்விகளை எழுத்துப்பிழைகளுடன் தட்டச்சு செய்தாலும் புதிய ஏஐ அதனைத் துல்லியமாக புரிந்து கொள்ளும்.
இதிலுள்ள நவீன ஃபேன்-அவுட் (Fan-out) தொழில்நுட்பம் ஒரு பெரிய கேள்வியை பல சிறிய துணைக் கேள்விகளாக பிரித்து இணையத்தில் தேடுகிறது.
இதன் மூலம் வழக்கமான தேடல்களில் விடுபடக்கூடிய பயனுள்ள இணையதள இணைப்புகளை பயனர்களால் எளிதில் பெற முடியும்.
காட்சி வடிவம்
அட்டவணைகள் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய காட்சி வடிவப் பதில்கள்
கூகுளின் ஏஐ மோடில் (AI Mode) வெளியாகும் பதில்கள் இனி மிகவும் தெளிவாகவும் கவர்ச்சிகரமாகவும் காட்சியளிக்கும்.
சிக்கலான தகவல்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள் மற்றும் ஒப்பீட்டு அட்டவணைகள் பதில்களில் இணைக்கப்படும்.
மேலும் பயனர்களின் தேவைக்கேற்ப பிரத்யேகக் கருவிகளும் (Custom Tools) திரையில் உருவாக்கப்படும்.
உலகம் முழுவதும் ஏஐ மோட் ஆதரிக்கும் அனைத்து மொழிகளிலும் இந்த புதிய மேம்பாடு துல்லியமான பதில்களை வழங்கத் தொடங்கியுள்ளது.
மென்பொருள்
மென்பொருள் உருவாக்கம் மற்றும் உலகளாவிய பயன்பாட்டு விவரங்கள்
கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய மாடல் இணைய தேடலுக்கு மட்டுமின்றி கோடிங் எழுதுவது மற்றும் மென்பொருள் சோதனைகளை மேற்கொள்வதற்கும் பெரிதும் உதவுகிறது.
பயனர்களின் தேவைக்கேற்ப குறைந்த, நடுத்தர, அதிக மற்றும் மிக அதிகம் என நான்கு சிந்தனை நிலைகளை இதில் தேர்வு செய்யலாம்.
தற்போது உலகளவில் அனைத்து கூகுள் தேடல் பயனர்களுக்கும் இது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மேலும் ஜெமினி ஏஐ செயலி, ஏஐ ஸ்டுடியோ மற்றும் ஆன்டிகிராவிட்டி தளங்களிலும் இந்த புதிய வசதி கிடைக்கிறது.