Loading...
சென்னையில் 12 இடங்களில் புதிய மினி தாலுகா அலுவலகங்கள்: எந்தெந்த ஏரியா தெரியுமா?
சென்னையில் 12 இடங்களில் புதிய மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

சென்னையில் 12 இடங்களில் புதிய மினி தாலுகா அலுவலகங்கள்: எந்தெந்த ஏரியா தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
05:48 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மாவட்ட வருவாய் அலுவலகதிற்குட்பட்ட 8 வட்டங்களில் ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதிக மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வருவாய்த்துறை மற்றும் நிலம் தொடர்பான சேவைகளை தங்களது இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே எவ்வித சிரமமுமின்றி பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்கள் அனைத்தும் துணை வட்டாட்சியர் தலைமையில் செயல்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 சிறுவட்ட அலுவலகங்கள்

சென்னையில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமையவுள்ள இடங்கள்

2026-27-ஆம் நிதியாண்டிற்கான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, சென்னையின் 8 வட்டங்களுக்கு உட்பட்ட கீழ்க்கண்ட 12 பகுதிகளில் புதிய சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன:

பெரம்பூர் வட்டம்: கொடுங்கையூர், எருக்கஞ்சேரி

மதுரவாயல் வட்டம்: போரூர்

அம்பத்தூர் வட்டம்: முகப்பேர், கொரட்டூர்

மாம்பலம் வட்டம்: சாலிகிராமம்

சோழிங்கநல்லூர் வட்டம்: நீலாங்கரை, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர்

வேளச்சேரி வட்டம்: திருவான்மியூர் - பெசன்ட் நகர்

மயிலாப்பூர் வட்டம்: திருவல்லிக்கேணி

ஆலந்தூர் வட்டம்: மணப்பாக்கம்

முக்கியப் பயன்கள்

பொதுமக்களுக்கு கிடைக்கும் முக்கியப் பயன்கள்

தமிழக அரசு சேவைகளை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கி வரும் நிலையில், பொதுமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் இணையவழியில் விண்ணப்பித்துப் பெறும் வகையில் 26 வகையான முக்கியச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதிதாக அமையவுள்ள இந்த 12 சிறுவட்ட அலுவலகங்கள் மூலம், சென்னை புறநகர் மற்றும் மையப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் அலைச்சல் குறைவதுடன், சான்றிதழ்கள் மற்றும் நில ஆவணங்கள் வழங்கும் பணிகள் மேலும் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT