LOADING...

விஜய்: செய்தி

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான 'Sigma' படத்தின் அப்டேட்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படமான 'சிக்மா' (Sigma)-வின் போஸ்டர் (First-Look Poster) இன்று நவம்பர் 10ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனநாயகன் படத்தின் 'தளபதி கச்சேரி' பாடல், இந்த படத்திலிருந்து அப்படியே காப்பி அடிக்கப்பட்டதா?

நடிகர் விஜய்யின் கடைசி படமாகக் கருதப்படும் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தளபதியின் கச்சேரி ஆரம்பம்; ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விஜயின் கடைசித் திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

'எனது கருத்தை விஜய்க்கு எதிராகத் திசைதிருப்ப வேண்டாம்': கரூர் சம்பவம் குறித்து அஜித்குமார் அறிக்கை

கரூர் தமிழக வெற்றிக் கழக (தவெக) பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து தான் கூறிய கருத்தை, தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராகத் திசை திருப்ப வேண்டாம் என்று நடிகர் அஜித்குமார் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா வலைதளத்தில் ஆடியோ அடங்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் நவம்பர் 8 அன்று வெளியாகிறது; படக்குழு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் எனக்கூறப்படும் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் கடைசி திரைப்படம் எனக்கூறப்படும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

05 Nov 2025
தவெக

"முழு அதிகாரமும் விஜய்க்கே!" - த.வெ.க. பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

03 Nov 2025
கரூர்

TVK கரூர் நெரிசல் சம்பவம்: 306 பேருக்கு CBI 'சம்மன்'

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற TVK தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

02 Nov 2025
தவெக

கரூர் சம்பவத்தில் கற்ற பாடம்; தவெக தொண்டரணிக்கு ஓய்வு பெற்ற ஐஜி தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு

கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது.

தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: TVK விஜய் சவால் அறிக்கை

தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில்ஆட்சியாளர்களை மாற்றுவது உறுதி என்று சவால் விடுத்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களை இன்று மகாபலிபுரத்தில் சந்திக்கிறார் TVK தலைவர் விஜய்

கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் (TVK) பொதுக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று (அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.

25 Oct 2025
தவெக

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மகாபலிபுரத்தில் வைத்து விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்

சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சோகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அன்று சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் மற்றும் சூர்யா நடித்த கிளாசிக் திரைப்படம் ஃப்ரெண்ட்ஸ் நவம்பர் 21 அன்று மறுவெளியீடு

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம், வரும் நவம்பர் மாதம் 21 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

TVK கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தாக தகவல்

கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

10 Oct 2025
கரூர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம்

கரூரில் நடந்த தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) இன்று விசாரித்துள்ளது.

08 Oct 2025
கரூர்

கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க அனுமதி கோரிய விஜய்

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சோக நிகழ்வுக்குப் பிறகு, தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்க தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் (DGP) அனுமதி கோரியுள்ளார்.

07 Oct 2025
கரூர்

"நான் உங்களுடன் இருக்கிறேன், இருப்பேன்": கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசும் TVK விஜய்

நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், கரூரில் நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலமாக பேசினார்.

கரூர் விபத்தால் பின்னடைவு: தவெக உள்கட்டமைப்பை மாற்றியமைக்க விஜய் தீவிரம்?

கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக)மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

05 Oct 2025
வாகனம்

விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்கு, வாகனத்தைப் பறிமுதல் செய்யத் திட்டம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

03 Oct 2025
தவெக

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்து கொண்ட அரசியல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

01 Oct 2025
கரூர்

Karur Stampede எதிரொலி: அடுத்த இரண்டு வாரங்களுக்கான TVK விஜய் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது 

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தவெக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

"விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது": கரூர் விபத்து குறித்து செந்தில் பாலாஜி

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு, நடிகர் விஜய்யின் வருகை நேரம் மற்றும் அவரது கட்சி சார்பில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறைபாடுகளே காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

30 Sep 2025
தவெக

"உண்மை விரைவில் வெளி வரும்: கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் வெளியிட்ட முதல் வீடியோ

கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததைத்தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம்(தவெக) தலைவர் விஜய் தனது முதல் காணொளி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

30 Sep 2025
தவெக

TVK கரூர் பொதுக்கூட்டம்: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனு

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரப் பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக, தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

29 Sep 2025
கரூர்

TVK Stampede கரூர் துயர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மரண மொத்த எண்ணிக்கையை 41 ஆக உயர்த்தியுள்ளது.

28 Sep 2025
தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி; நாளை தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு செய்யப்படுவாதாக அறிவிப்பு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சோக நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தமிழ்நாடு முழுவதும் முழு கடை அடைப்பு கடைபிடிக்கப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

28 Sep 2025
தவெக

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 31 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தை ஒட்டி, கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டோருக்கான நிதியுதவியை அறிவித்துள்ளார்.

28 Sep 2025
சென்னை

கரூர் சோகத்தைத் தொடர்ந்து சென்னையில் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சோகச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

28 Sep 2025
தவெக

தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இதுதான்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 39 பேர் உயிரிழந்த மற்றும் பலர் காயமடைந்த சோகச் சம்பவம் குறித்துத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) செய்தியாளர் சந்திப்பில் மிகுந்த கவலை தெரிவித்தார்.

27 Sep 2025
தவெக

TVK Stampede: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 38 பேர் பலியானதற்கு யார் காரணம்? என்ன நடந்தது? ஒரு அலசல்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார்.

TVK Stampede: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை; நிவாரணம் அறிவிப்பு, விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு

தமிழக அரசியல் வரலாற்றில் துயரச் சம்பவமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

27 Sep 2025
தவெக

கரூர் தவெக கூட்ட நெரிசலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தமிழக அரசியல் வரலாற்றில் துயரச் சம்பவமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

விமான நிலையம் முதல் மணல் கொள்ளை வரை: கரூரில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜியின் கோட்டையாகக் கருதப்படும் கரூரில், தனது தேர்தல் பரப்புரையின் போது ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

27 Sep 2025
தவெக

தவெக ஆட்சியில் தண்டனை நிச்சயம்; கிட்னி திருட்டு குறித்து தவெக தலைவர் விஜய் ஆவேசம்

நாமக்கல்லில் பொதுமக்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான நடிகர் விஜய், சிறுநீரகத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசினார்.

வீக்கெண்டில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்? நாகையில் விளக்கிய தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் விஜய், தனது அரசியல் சுற்றுப்பயணத்தை ஏன் சனிக்கிழமை மட்டும் மேற்கொள்கிறார் என்பது குறித்து விளக்கமளித்தார்.

13 Sep 2025
தவெக

சொன்னீங்களே செஞ்சீங்களா? திருச்சியில் திமுக மீது தவெக தலைவர் விஜய் சரமாரி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், வரும் தேர்தலை ஜனநாயகப் போர் என்று குறிப்பிட்டு, தனது பிரசாரப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார்.

செப்டம்பர் 13 முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் நடிகர் விஜய்: 14 சனிக்கிழமைகள், 1 ஞாயிறு மட்டுமே பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) தலைவர் விஜய், தனது தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் 13 முதல் தொடங்க உள்ளார்.

திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்க உள்ள விஜய்: தவெக தேர்தல் பயணம் செப்டம்பர் 13 முதல்

தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தனது சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் எனக் கட்சி வட்டாரத் தகவல்கள் உறுதி செய்கின்றன.

27 Aug 2025
தவெக

தவெக மாநாட்டில் பவுன்சர்கள் செய்த காரியத்தால் தலைவர் விஜய் உட்பட பலர் மீது போலீசார் வழக்கு

மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று மிகுந்த கோலாகலமாக நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மாநில மாநாட்டில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் ஆர்வம் காரணமாக ஏற்பட்ட குழப்பம் தற்போது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது.

"விஜய் சார் அப்படி நினைச்சிருந்தா..": 'மதராஸி' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சிவகார்த்திகேயன் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள 'மதராஸி' திரைப்படம், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

2026 தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை: மதுரை மாநாட்டில் TVK விஜய் அறிவிப்பு

இன்று, மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்ற தனது கட்சியின்(தமிழக வெற்றி கழகம்) இரண்டாவது மாநில அளவிலான மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றினார்.

21 Aug 2025
தவெக

கட்டுக்கடங்காத கூட்டத்தால் முன்கூட்டியே தொடங்கிய தவெக இரண்டாவது மாநில மாநாடு

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரை, பரபத்தி பகுதியில் உள்ள 506 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

மதுரையில் த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு இன்று: களைகட்டிய பாரபத்தி

தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

18 Aug 2025
தவெக

நீங்கள்லாம் மதுரை மாநாட்டுக்கு வரவேண்டாம்; கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மதுரையில் நடைபெறவிருக்கும் கட்சியின் மாநில அளவிலான மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.