LOADING...
ஜன நாயகன் வெளியீடு தள்ளி போகிறதா? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ஜன நாயகன் இந்த வாரம், ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது

ஜன நாயகன் வெளியீடு தள்ளி போகிறதா? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 05, 2026
06:48 pm

செய்தி முன்னோட்டம்

விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் ஜன நாயகன் இந்த வாரம், ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இப்படத்திற்கு சென்சார் போர்டின் தரச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் PVR உள்ளிட்ட மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் இப்படத்திற்கான முன்பதிவுகளை இன்னும் துவங்கவில்லை. முன்னதாக CBFC அறிவுறுத்திய சில திருத்தங்களை மேற்கொண்டு படம் தணிக்கை குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக படக்குழு U/A தரச்சான்று கேட்டிருப்பதாகவும் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இன்று மாலை வரை தரச்சான்று வழங்கப்படவில்லை. இது அரசியல் பழிவாங்கும் நாடகம் என்றும், '#CBFCDelaysJanaNayagan' இணையத்தில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வெளியீடு

தள்ளிபோகிறதா  'ஜன நாயகன்' வெளியீடு? 

விஜய்யின் 'ஜன நாயகன்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்திருப்பது KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனமே. இந்த இரு படங்களுமே தணிக்கை குழுவின் பரிசீலனையில் உள்ளது என்பதும், இருபடங்களுக்கும் இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதும் கூடுதல் தகவல். ஒருவேளை தணிக்கை சான்றிதழ் கிடைப்படத்தில் தாமதம் ஏற்பட்டால், பட வெளியீடு ஒரு நாள் தள்ளி வைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 'ஜன நாயகன்' படத்தில் விஜய் உடன் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜய்யின் அரசியல் பயணத்திற்கான ஒரு மைலேஜை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் எனவும் கூறப்படுகிறது.

Advertisement