தமிழகம்: செய்தி
நாகாலாந்து ஆளுநரும் முன்னாள் பாஜக தலைவருமான இல.கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார்
முன்னாள் பாஜக தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) மாலை தனது 80 வயதில் காலமானார்.
நடிகை கஸ்தூரி மற்றும் திருநங்கை ஆர்வலர் நமீதா மாரிமுத்து தமிழக பாஜகவில் இணைந்தனர்
நடிகை கஸ்தூரி மற்றும் திருநங்கை ஆர்வலரும், நமீஸ் சவுத் குயின் இந்தியாவின் தலைவருமான நமீதா மாரிமுத்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
சுதந்திர தின 2025: 9 புதிய நலத்திட்டங்களை அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதிய உயர்வு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஒன்பது நலத்திட்டங்களை அறிவித்தார்.
சுதந்திர தினம் 2025: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்
இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் பிரமாண்டமான விழாக்களுடன் கொண்டாடியது. தேசிய தலைநகரில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
தமிழகம் எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்கள்; ஆளுநர் ஆர்.என்.ரவியின் சுதந்திர தின உரை
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் மாநிலம் எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுதலை; சொந்த இடங்களுக்கு செல்ல பேருந்து ஏற்பாடு செய்தது காவல்துறை
சென்னையில் நள்ளிரவு காவல்துறை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு வேளச்சேரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 135 தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு உள்ளிட்ட ஆறு புதிய நலத்திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அவர்களின் உடல்நலம், நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தூய்மைப்பணியாளர் போராட்டம்: ரிப்பன் மாளிகை முன் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது
பணி நிரந்தரம் மற்றும் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே நடைபெற்று வந்த தூய்மைப்பணியாளர் போராட்டம் கடந்த இரவுக்குத் திருப்புமுனை எடுத்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்: 'தாயுமானவர்' திட்டம் இன்று முதல் தொடக்கம்
வயதானோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் சென்று வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை(ஆகஸ்ட் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
தூய்மைப் பணி தனியார்மயமாக்கல் விவகாரம்; சென்னை மாநகராட்சி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
இரண்டு நகர மண்டலங்களில் துப்புரவுப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனது பதிலைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார பேருந்துகள் சேவை அறிமுகம்
தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மேற்கொண்ட முக்கிய முன்னெடுப்பாக, முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஏசி பேருந்துகள் இன்று முதல் (ஆகஸ்ட் 11) முதல் முறையாக அறிமுகமாகின்றன.
சிறுநீரக முறைகேடு; 2 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
தமிழகத்தில் இரு தனியார் மருத்துவமனைகள் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஆகஸ்ட் 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கம்
இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளை அதிகாரப்பூர்வ பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாணவிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு புதிய முயற்சி; அகல்விளக்கு திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
தமிழக அரசு சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அகல் விளக்கு என்ற தலைப்பில் ஒரு புதிய மாநில அளவிலான திட்டத்தை தொடங்க உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(ஆகஸ்ட் 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இனி தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது; இந்த கல்வியாண்டு முதலே அமல்படுத்தப்படுகிறது
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையின்படி, இனி மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை (State Education Policy - SEP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை (SEP) வெளியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம்; முதல்வர் ஸ்டாலிடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் மனு
இரு கம்யூனிஸ்ட் காட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) அன்று ஒரு கூட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
14 ஆண்டுகளில் முதல் முறை; இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து தமிழகம் சாதனை
2024-25 நிதியாண்டில் தமிழகம் குறிப்பிடத்தக்க வகையில் 11.19% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரியில் 'ரெட் அலர்ட்'
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வின்ஃபாஸ்டின் முதல் எலக்ட்ரிக் கார் ஆலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்தியாவில், வியட்நாமிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளர் வின்ஃபாஸ்ட்டின், முதல் இந்திய தொழிற்சாலையை இன்று முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார்.
தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 6.5 லட்சம் வாக்காளர்கள் தொடர்பான ப.சிதம்பரத்தின் கருத்தை நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் 6.5 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் சமீபத்திய கூற்றை இந்திய தேர்தல் ஆணையம் உறுதியாக மறுத்துள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவிப்பு
குறிப்பிடத்தக்க தேசிய அங்கீகாரமாக, உறுப்பு தானம் மற்றும் மாற்று திட்டங்களில் சிறப்பான செயல்திறனுக்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு விருது பெற்றுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (ஆகஸ்ட் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (ஜூலை 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் Google மற்றும் Unity இணைந்து கேம் டெவலப்பர் பயிற்சி வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழக இளைஞர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்கு உலகத் தரமான வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஆகஸ்ட் 2 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (ஜூலை 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ராஜராஜ சோழர் மற்றும் ராஜேந்திர சோழருக்கு பிரமாண்ட சிலைகள் அமைப்பு; பிரதமர் மோடி அறிவிப்பு
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட ராஜேந்திர சோழர் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதார, ராணுவ மற்றும் ஜனநாயக மரபுக்கு சோழ வம்சம் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்புகளுக்காக அதைப் பாராட்டினார்.
'வணக்கம் சோழமண்டலம்': கங்கை கொண்ட சோழபுரத்தில் திருவாசக உரையுடன் உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி
பேரரசர் ராஜேந்திர சோழரின் மரபை நினைவுகூரும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் பிரமாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் சோழ மண்டலம் என தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழர் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான கலாச்சார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.