LOADING...
ஒரே மெசேஜ், ஓடோடி வரும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்: 108 சேவையில் அறிமுகமான வாட்ஸ்அப் வசதி
தமிழகத்தில் வாட்ஸ்அப்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்

ஒரே மெசேஜ், ஓடோடி வரும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்: 108 சேவையில் அறிமுகமான வாட்ஸ்அப் வசதி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 06, 2026
08:23 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அவசர கால மருத்துவ தேவைகளுக்காக செயல்பட்டு வரும் '108' ஆம்புலன்ஸ் சேவையை, இனி வாட்ஸ்அப் மூலமாகவும் எளிதாக பெறலாம். இந்த புதிய வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று தொடங்கி வைத்தார். ஆம்புலன்ஸ் தேவைப்படுபவர்கள் '94450 30725' என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் 'Hi' என டைப் செய்து அனுப்ப வேண்டும். 1. உடனடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் 'Book Ambulance' என்ற லிங்க் வரும். 2. அதைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் Live Location-ஐ கட்டுப்பாட்டு அறைக்கு துல்லியமாக தெரிவிக்க முடியும். 3. உடனடியாக ஆம்புலன்ஸ் எண் மற்றும் ஓட்டுநரின் மொபைல் எண் உங்களுக்கு அனுப்பப்படும்.

சிறப்பம்சங்கள்

புதிய அம்சத்தின் சிறப்பம்சங்கள்

நேரடி கண்காணிப்பு: ஆம்புலன்ஸ் தற்போது எங்கே வந்து கொண்டிருக்கிறது, உங்களை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை உங்கள் மொபைலிலேயே மேப் மூலம் பார்க்கலாம். விரைவான சேவை: போன் அழைப்புகள் மூலம் முகவரியை சொல்லி கொடுப்பதில் ஏற்படும் காலதாமதம் இதன் மூலம் தவிர்க்கப்படும். பரந்து விரிந்த சேவை: தமிழகம் முழுவதும் தற்போது 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. இதில் 303 வாகனங்கள் அதிநவீன உயிர் காக்கும் வசதிகளை கொண்டவை. தமிழகத்தில் தற்போது ஆம்புலன்ஸ் சராசரியாக: மாநகரங்களில்: 6.59 நிமிஷங்கள் கிராமப்புறங்களில்: 11.31 நிமிஷங்கள் மலைப் பிரதேசங்களில்: 13.18 நிமிஷங்கள் என்ற கால அளவில் சென்றடைகிறது. இந்த நேரத்தை மேலும் குறைப்பதே இந்த வாட்ஸ்அப் வசதியின் முக்கிய நோக்கமாகும்.

Advertisement