தமிழக அரசு: செய்தி
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்; அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, அவர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (நவம்பர் 13) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்குத் தமிழக அரசின் ₹50,000 ஊக்கத்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசுப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் எந்தெந்த நாட்களுக்கு பொது விடுமுறை? பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு
தமிழக அரசு, 2026ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.10,000; தமிழக அரசின் புதிய திட்டம்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக, மாநில அரசு அதிரடியாக மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது.
பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: SOP விதிகளை வகுக்கும் தமிழக அரசு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் நடத்திய கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கடுமையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+2 பொதுத் தேர்வு: கணக்குப் பதிவியலுக்கு (Accountancy) கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி
தமிழகத்தில் +2 வகுப்பு (12th Standard) பொதுத் தேர்வில், கணக்குப் பதிவியல் (Accountancy) பாடத் தேர்வின்போது மாணவர்கள் கால்குலேட்டரைப் (Calculator) பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை புதிய பயனாளிகள் பட்டியல் நவம்பர் 30க்குள் இறுதி; உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்குப் புதிதாக விண்ணப்பித்திருக்கும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தாயுமானவர் திட்டம்: நவம்பர் 3 முதல் சென்னை முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்
தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், சென்னை மாநகரத்தில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலின், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் மரியாதை!
தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30, 2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது.
'வேலைக்கு பணம்' மோசடி: ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்!
தமிழகத்தில் புதிதாக 'வேலைக்கு பணம்' மோசடி நடந்திருப்பதாக கூறி, அதுகுறித்து உடனடியாக விசாரிக்குமாறு மாநில காவல் துறைக்கு, அமலாக்கத்துறை (ED) கடிதம் எழுதியுள்ளது.
உங்கள் ஏரியாவில் இன்று (அக்டோபர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(அக்டோபர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு: தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையால் மக்கள் மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதி ஆணவ கொலைகளை தடுக்கத் தனி ஆணையம்: ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் அமைகிறது!
தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த தேவையான சட்ட பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
கனமழை எதிரொலி: பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை!
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரித்து, உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தி விளம்பரங்கள், திரைப்படங்கள், பாடல்களை தடை செய்ய தமிழக அரசு முடிவு?
தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்பு தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் விளம்பரப் பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் இந்தி மொழியைப் பயன்படுத்துவதை தடை செய்யும் மசோதாவை தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.15,000 கோடி Foxconn முதலீடு உண்மையா? தமிழக அமைச்சர் தகவல் vs நிறுவன மறுப்பு!
தைவான் நாட்டை சேர்ந்த மின்னணு உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான், தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உறுதி அளித்ததாகத் தமிழகத் தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்திருந்த நிலையில், பாக்ஸ்கான் தரப்பு இந்த தகவலை மறுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையன்று பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதற்கு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அறிவித்துள்ளது.
"சந்தேகம் இருந்தாலே அரசு நிறுவனங்களில் சோதனை செய்வீர்களா?": TASMAC வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட சோதனை மற்றும் ஆவணங்கள் பறிமுதலுக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது.
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், தனி நபர் ஆணையம் மற்றும் SIT நிலைமை என்ன?
கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம்
கரூரில் நடந்த தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) இன்று விசாரித்துள்ளது.
'சைக்கோ' கொலையாளி தஷ்வந்த் விடுதலை குறித்த குழப்பமும், மக்கள் கொந்தளிப்பும்!- உங்கள் கருத்து என்ன?
தமிழ்நாட்டின் மனசாட்சியை உலுக்கிய ஒரு 'சைக்கோ' குற்றவாளியான தஷ்வந்த் நேற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
பல பிஞ்சு உயிர்களை காவு வாங்கிய Coldrif இருமல் சிரப் தயாரித்த தொழிற்சாலையில் 350-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் அம்பலம்
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 16 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடைய 'கோல்ட்ரிஃப்' (Coldriff) இருமல் சிரப்பை தயாரித்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தில், தமிழக அரசு நடத்திய ஆய்வில் 350-க்கும் மேற்பட்ட கடுமையான விதிமீறல்கள் மற்றும் சுகாதாரமற்ற நடைமுறைகள் அம்பலமாகியுள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(அக்டோபர் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கேளிக்கை பூங்காக்களில் ராட்சத ராட்டினம் இயக்க புதிய அரசாணை: சுற்றுலாத்துறையிடம் கட்டாய அனுமதி
தமிழ்நாட்டில் உள்ள கேளிக்கை பூங்காக்களில் (Amusement Parks) நிரந்தர ராட்சத ராட்டினங்களை (Permanent Giant Wheels) இயக்குவது தொடர்பாக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
RTE சேர்க்கை குழப்பம்: தமிழக அரசு அறிவிப்பால் பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி!
கல்வி உரிமை சட்டம் (RTE) 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பினர் மற்றும் சேர்க்கைக்காக காத்திருந்த பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (அக்டோபர் 6) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பயனாளிகளான 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை) ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Fact Check: அக்டோபர் 3ஆம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல!
முன்னதாக இன்று காலை ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தாக செய்தி வெளியாகி இருந்தது.
தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை: அக்டோபர் 3 வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிப்பு!
ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
TVK Stampede: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 38 பேர் பலியானதற்கு யார் காரணம்? என்ன நடந்தது? ஒரு அலசல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார்.
TVK Stampede: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை; நிவாரணம் அறிவிப்பு, விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு
தமிழக அரசியல் வரலாற்றில் துயரச் சம்பவமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா IAS காலமானார்!
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை செயலாளராகப் பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று(செப்டம்பர் 24) காலமானார்.
3 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: விருது பெறுபவர்கள் பட்டியல்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழக அரசு சார்பில் பல்வேறு கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பொது இடத்தில் சிலை: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள காய்கறி சந்தையின் நுழைவாயிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைப்பதற்கான தீர்மானத்தை வள்ளியூர் பேரூராட்சி நிறைவேற்றியது.
பழனி மற்றும் சபரிமலையில் பரஸ்பரம் நிலங்களை பரிமாறப்போகும் தமிழக, கேரளா அரசுகள்; ஏன்?
சபரிமலை மற்றும் பழனி ஆகிய இரு முக்கிய ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக, நிலங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் முடிவு செய்துள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி உள்ளிட்ட நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கியது தமிழக அரசு
தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ், நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்? கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது மற்றும் ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவது தொடர்பாக, தமிழக கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்க திட்டம்: தமிழக அரசு நடவடிக்கை
மரவள்ளி கிழங்குக்குச் சந்தை நிலைத்தன்மை ஏற்படுத்தும் நோக்கில், ஜவ்வரிசியை ரேஷன் கடைகளில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளுக்கு 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
தமிழக அரசின் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இனி மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும்
கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடுகள் (Monthly Assessments) நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்
தமிழகத்தில் உள்ள 38 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
ஓய்வு பெற்றார் சங்கர் ஜிவால்; தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்
தமிழக காவல்துறையின் தற்போதைய நிர்வாகப் பிரிவு டிஜிபி ஜி.வெங்கட்ராமன், தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக டிஜிபி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் சங்கர் ஜிவால் தீயணைப்பு ஆணைய தலைவராக நியமனம்
தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாகப் பதவி வகித்த சங்கர் ஜிவால், இந்த மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்குத் தமிழக அரசு புதிய பொறுப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்` திட்ட மனுக்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முக்கிய திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் மூட்டையாகக் கட்டப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்: தமிழக அரசு ஆணை வெளியீடு
தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கிய பணிகளில் உள்ள 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய பொறுப்புகளில் நியமனம் செய்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது; டிசம்பரில் முதன்மைத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 28, 2025) வெளியிட்டுள்ளது.
கூமாபட்டி தங்கபாண்டியால் கிடைத்தது விமோச்சனம்; பிளவக்கல் அணை மேம்பாட்டிற்கு ₹10 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி என்ற குக்கிராமம் சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் உலகப் புகழ் பெற்றது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்
மாநிலத்தில் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தற்போது நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு சேவைகள் இனி வாட்ஸ் அப்பில்! ஒரே எண்ணில் 50 சேவைகள்- சென்னை மாநகராட்சியின் சூப்பர் திட்டம்
தமிழக மக்களுக்கு அரசுத் துறைகள் வழங்கும் 50 முக்கிய சேவைகளை வாட்ஸ் அப் வாயிலாக பெறும் புதிய சேவையை சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா இன்று ரிப்பன் மாளிகையில் இந்த சேவையை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை: தமிழக அரசு எச்சரிக்கை
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஆகஸ்ட் 25) திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கும் முயற்சியா? கணக்கெடுப்பிற்கான டெண்டரை அறிவித்த தமிழக அரசு
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு தேடி குடியேறியிருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்குத் தமிழ்நாட்டிலேயே வாக்குரிமை வழங்கும் சாத்தியம் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவம் நேரத்தில், தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு உள்ளிட்ட ஆறு புதிய நலத்திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அவர்களின் உடல்நலம், நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.