தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது: திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திருத்தப்பட்ட புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியாகிறது. இருப்பினும், இந்தப் பட்டியலில் பல்வேறு பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இன்று இந்தப் பட்டியல் மாநிலம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் வெளியிடப்பட உள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் திருத்தங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 14, 2026 (அல்லது சில மாநிலங்களில் பிப்ரவரி 21) அன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது! #SunNews | #SIR | #DraftVoterList | #ElectionCommission pic.twitter.com/k4RftIa2tC
— Sun News (@sunnewstamil) December 19, 2025
தகவல்
பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் விண்ணப்பிக்கலாம்
வரைவுப் பட்டியல் இன்று (டிசம்பர் 19) மாலைக்குள் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in அல்லது தமிழகத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் (CEO Tamil Nadu) பதிவேற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது திருத்தங்கள் இருந்தாலோ, இந்தப் பட்டியல் வெளியான பிறகு உடனடியாக விண்ணப்பிக்கலாம். இன்று மாலைக்குள் மாவட்ட வாரியாகப் பட்டியல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். பொதுமக்கள் voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது 'Voter Helpline' செயலி வாயிலாகத் தங்களின் பெயர்களைச் சரிபார்த்து, ஆன்லைனிலேயே திருத்தங்களை மேற்கொள்ளலாம்.