LOADING...
தங்க நகை வாங்க திட்டமா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி!
தங்க விலை, செவ்வாய்கிழமை (பிப்ரவரி 10) குறைந்துள்ளது

தங்க நகை வாங்க திட்டமா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 10, 2026
10:26 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (பிப்ரவரி 10) குறைந்துள்ளது. செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 குறைந்து ₹14,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 குறைந்து ₹1,16,640 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹76 குறைந்து ₹15,906 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹608 குறைந்து ₹1,27,248 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் குறைந்துள்ளது

18 காரட் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹10 அதிகரித்து ₹12,530 ஆகவும், ஒரு சவரன் ₹80 அதிகரித்து ₹100,240 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் செவ்வாய்கிழமை குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹290.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,90,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement