அமெரிக்கா - வங்கதேசம் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்; 19 சதவீதமாக குறைந்தது இறக்குமதி வரி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையே திங்களன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, வங்கதேசத்திலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரி 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வங்கதேசத்தின் முதுகெலும்பாக திகழும் ஜவுளி துறைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் இது குறித்துப் பேசுகையில், "அமெரிக்காவின் பருத்தி மற்றும் செயற்கை இழை கொண்டு தயாரிக்கப்படும் சில குறிப்பிட்ட வங்கதேச ஜவுளிப் பொருட்களுக்கு 'பூஜ்ஜிய வரி' (Zero Tariff) அடிப்படையில் அமெரிக்க சந்தையில் நுழைய வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றார்.
சலுகைகள்
அமெரிக்காவிற்கு வங்கதேசம் அளிக்கும் சலுகைகள்
ன்னதாக அமெரிக்கா 37 சதவீத வரியை முன்மொழிந்த நிலையில், ஒன்பது மாத கால பேச்சுவார்த்தைக்கு பிறகு இது 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் விவசாய மற்றும் தொழில்துறை பொருட்களுக்கு வங்கதேசம் தனது சந்தையைத் திறந்துவிட்டுள்ளது. அமெரிக்காவின் சோயாபிரி, பால் பொருட்கள், மாட்டிறைச்சி மற்றும் பழங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வாகன புகை உமிழ்வு மற்றும் பாதுகாப்பு விதிகளில் அமெரிக்கத் தரநிலைகளை வங்கதேசம் ஏற்கும். விமான போக்குவரத்துத் துறையில், 'பிமான் வங்கதேச ஏர்லைன்ஸ்' நிறுவனம் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 14 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.