Loading...
பெண்களுக்கான அரசியல் இடம் சலுகை அல்ல, உரிமை: சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்
மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்

பெண்களுக்கான அரசியல் இடம் சலுகை அல்ல, உரிமை: சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2026
10:20 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான மற்றும் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று முன்மொழிந்தார். ஏற்கனவே நீட் தேர்வு ரத்து, மாநில நிதிப் பகிர்வு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

33% இடஒதுக்கீடு

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வலியுறுத்தல்

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், "பெண்களுக்கான அரசியல் அதிகாரம் என்பது வெறும் சலுகை அல்ல; அது அவர்களின் ஜனநாயக உரிமை. உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பெண்கள் இன்று மக்கள் பிரதிநிதிகளாக உயர்ந்துள்ளனர்" என்று சுட்டிக்காட்டினார்.

தவெக அரசில் நான்கு பெண் அமைச்சர்கள் பதவி வகிப்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முன்னோடி மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்பதை மையமாகக் கொண்டு இந்தத் தீர்மானம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT