Loading...
விஷ்ணு விஷால் - அருண்ராஜா காமராஜ் திரைப்படம் கைவிடப்பட்டது: பட்ஜெட் பிரச்சனை குறித்து நடிகர் விளக்கம்
விஷ்ணு விஷால் - அருண்ராஜா காமராஜ் திரைப்படம் கைவிடப்பட்டது

விஷ்ணு விஷால் - அருண்ராஜா காமராஜ் திரைப்படம் கைவிடப்பட்டது: பட்ஜெட் பிரச்சனை குறித்து நடிகர் விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2026
11:31 am

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கவிருந்த விளையாட்டு அடிப்படையிலான திரைப்படம், பட்ஜெட் பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக கைவிடப்பட்டுள்ளதை விஷ்ணு விஷால் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த திரைப்படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக திட்டமிடப்பட்ட பட்ஜெட்டிற்கும் தயாரிப்பு செலவுகளுக்கும் இடையே பெரும் வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தை மேற்கொண்டு தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

விளக்கம்

ரூ. 4.5 கோடிக்கும் மேல் முதலீடு

தயாரிப்பாளராகவும் இத்திரைப் படத்தில் பணியாற்றிய விஷ்ணு விஷால் இது குறித்துப் பேசுகையில், "தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தின் பட்ஜெட் மிகவும் முக்கியமானது. தயாரிப்பாளராக இதுவரை ரூ. 4.5 கோடிக்கும் அதிகமாக இந்தப் படத்தில் முதலீடு செய்துள்ளேன். படத்தை கைவிடும் முடிவு கடினமானது தான், என்றாலும் ஒரு தயாரிப்பாளராக இதுவே சரியான முடிவு" என்று தெரிவித்துள்ளார்.

நிதி சார்ந்த விஷயங்கள் இதில் அடங்கியுள்ளதால், ஒரு நடைமுறை தெளிவுக்காக தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட உள்ளதாகக் கூறியுள்ள விஷ்ணு விஷால், இது இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு எதிரான புகாரோ அல்லது இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட சண்டையோ அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT