Loading...
மின்சார கார்களை அதிகமாக விற்றால் கார்ப்பரேட்டுகளுக்கு ஜாக்பாட்! CAFE-III விதிகளால் வரப்போகும் மாற்றம் என்ன?
CAFE-III விதிகளால் வரப்போகும் மாற்றம்

மின்சார கார்களை அதிகமாக விற்றால் கார்ப்பரேட்டுகளுக்கு ஜாக்பாட்! CAFE-III விதிகளால் வரப்போகும் மாற்றம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 01, 2026
04:00 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு 2027 ஏப்ரல் 1 முதல் 2032 மார்ச் 31 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கான கார்ப்பரேட் சராசரி எரிபொருள் சிக்கன (CAFE-III) புதிய விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் ஒட்டுமொத்த வாகனங்களின் சராசரி எரிபொருள் நுகர்வை படிப்படியாகக் குறைக்க வேண்டும். 1,229 கிலோ சராசரி எடை கொண்ட வாகனக் கூட்டமைப்பிற்கு, எரிபொருள் நுகர்வு இலக்கு 100 கிலோமீட்டருக்கு 3.996 லிட்டரிலிருந்து (காரபன் உமிழ்வு: 94.8g/km) நிதியாண்டு 2032-க்குள் 3.3273 லிட்டராக (78.9g/km) குறைக்கப்பட வேண்டும்.

செயல்பாட்டு  முறை

மின்சார வாகனங்களுக்கு 3X சூப்பர் கிரெடிட் கணக்கீடு எப்படி வேலை செய்கிறது?

CAFE-III விதிகள் தனித்தனி கார் மாடல்களுக்கு அல்லாமல், ஒரு நிறுவனம் விற்கும் ஒட்டுமொத்த வாகனங்களின் சராசரியைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.

இதில், ஒரு நிறுவனம் விற்கும் ஒவ்வொரு மின்சார வாகனமும் அல்லது ரேஞ்ச் எக்ஸ்டெண்டட் மின்சார வாகனமும், கணக்கீட்டின் போது 3 வாகனங்களாக (3X Multiplier) கருதப்படும்.

உதாரணமாக, 1 எலக்ட்ரிக் காரை விற்பனை செய்வதன் மூலம், பெட்ரோல்/டீசல் வாகனங்களால் ஏற்படும் உமிழ்வுப் பாரத்தை 3 மடங்கு குறைத்து சரிக்கட்ட முடியும்.

சலுகைகள்

பிற எரிபொருள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான சலுகைகள்

மின்சார வாகனங்களுக்கு அதிகபட்சமாக 3X சூப்பர் கிரெடிட் அளிக்கப்படும் நிலையில், பிற தொழில்நுட்பங்களுக்கும் அடுக்கு முறையிலான கிரெடிட்கள் வழங்கப்பட்டுள்ளன:

பிளக்-இன் ஹைபிரிட் (PHEV) & ஃபிளெக்ஸ்-ஃப்யூல் ஸ்ட்ராங் ஹைபிரிட்: 2.5X கிரெடிட்ஸ்

ட்ராங் ஹைபிரிட் (SHEV): 1.6X கிரெடிட்

ஃபிளெக்ஸ்-ஃப்யூல் எத்தனால் (Flex-Fuel): 1.1X கிரெடிட்

E20 & CNG சலுகை: E20 பெட்ரோல் வாகனங்களுக்கு 8% மற்றும் சிஎன்ஜி (CNG) வாகனங்களுக்கு 5% அல்லது CBG கலவை அளவிற்கேற்ப உமிழ்வு விலக்கு (Carbon Neutrality Discount) அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அபராதம்

வர்த்தகக் கிரெடிட் பாஸ்புக் மற்றும் அபராத முறை

புதிய விதிகளின் கீழ் நிறுவனங்களுக்கு பாஸ்புக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவான உமிழ்வைப் பதிவு செய்யும் நிறுவனங்கள் கிரெடிட்களைப் பெறும்.

இலக்கைத் தவறவிடும் நிறுவனங்களுக்கு டெபிட் கணக்கிடப்படும். கூடுதல் கிரெடிட் உள்ள நிறுவனங்களிடமிருந்து மற்ற நிறுவனங்கள் கிரெடிட்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

அல்லது BEE அமைப்பிடம் இருந்து ஒரு கிராம் CO2/km-க்கு ₹2,500 (FY28) முதல் ₹4,500 (FY32) வரை செலுத்தி நேரடியாக வாங்க வேண்டியிருக்கும்.

ADVERTISEMENT