LOADING...

Sekar Chinnappan

Sekar Chinnappan
சமீபத்திய செய்திகள்

குட் பேட் அக்லியால் லாபமா நஷ்டமா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்; இளையராஜா விவகாரம் தொடர்பாகவும் கருத்து

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் தொடர்பான வசூல் நிலவரங்கள் மற்றும் இளையராஜாவின் பாடல்கள் உபயோகிக்கப்பட்ட விவகாரம் குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானுடனான எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதையெல்லாம் நம்பாதீங்க; இளம் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் தொடர்பான கட்டுக்கதைகள்

மார்பகப் புற்றுநோய் என்பது மாதவிடாய் நின்றவர்களுக்கு (மெனோபாஸ்) மட்டுமே வரும் என்ற ஆபத்தான கட்டுக்கதை, இளம் பெண்களிடையே அதிகரித்து வரும் நோயறிதல் விகிதங்களால் தகர்க்கப்பட்டு வருகிறது.

18 Oct 2025
கவாஸாகி

புதிய மேம்பாடுகளுடன் கவாஸாகி 2026 Z900 பைக் இந்தியாவில் அறிமுகம்

கவாஸாகி நிறுவனம் அதன் 2026 Z900 நேக்கட் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் ₹9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.

18 Oct 2025
தீபாவளி

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு: தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையால் மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் வெள்ளி விலைகள் தாறுமாறான வீழ்ச்சி; இன்றைய (அக்டோபர் 18) விலை நிலவரம்

சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை சனிக் கிழமை (அக்டோபர் 17) தாறுமாறான சரிவை சந்தித்துள்ளது.

ராணுவ தாக்குதலில் 3 கிரிக்கெட்டர்கள் உயிரிழப்பு; பாகிஸ்தானில் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து  ஆப்கானிஸ்தான் விலகல்

ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் நடந்த அண்மைய எல்லைத் தாக்குதல்களில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் முத்தரப்புத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அறிமுக போட்டியில் சதமடித்த ஒரே இந்தியர்; சாதனையை சமன் செய்வாரா ஷுப்மன் கில்?

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு புதிய சகாப்தம் அக்டோபர் 19 அன்று தொடங்குகிறது. அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

இந்திய ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதை முழுமையாக நிறுத்துவதாகத் தனக்கு உறுதியளித்ததாக மீண்டும் கூறியுள்ளார்.

மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்த பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவு; அடுத்து என்ன?

வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் இந்திய அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது.

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடக்காது என தகவல்

48 மணி நேரத் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பல மாவட்டங்களைத் தாக்கி புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியில் சேர சீனாவிடம் பாகிஸ்தான் ஆதரவு கோரிக்கை

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், மேற்கத்திய நிதி நிறுவனங்களான ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் கடுமையான நிபந்தனைகளிலிருந்து விலகி, நிதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்த உதவும் நோக்குடன், பிரிக்ஸ் அமைப்பின் நிதிக் கிளையான புதிய வளர்ச்சி வங்கியில் (NDB) உறுப்பினராகச் சேர சீனாவின் ஆதரவை முறைப்படி நாடியுள்ளது.

இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி: வர்த்தகப் பதற்றம் தணியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் இரண்டு வாரங்களில் சந்திப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

17 Oct 2025
குஜராத்

குஜராத் புதிய அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கீடு; ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு கல்வித்துறை ஒதுக்கீடு

குஜராத்தில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையின் 25 மாநில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரத்தை பாஜக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

17 Oct 2025
திரிபுரா

திரிபுராவில் மாடு திருட முயன்ற 3 பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதால் பதற்றம்

கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி திரிபுராவில் நடந்த வன்முறை மோதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. இந்தப் பூசலில் மூன்று பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் நிபந்தனைகள் உண்டு; பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பேச்சு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

17 Oct 2025
உறவுகள்

வைரலாகும் ரிலேஷன்ஷிப் இன்சூரன்ஸ் ஐடியா; பணம் உறவுக்கு கைகொடுக்குமா?

சிச்சுவேஷன்ஷிப்ஸ் மற்றும் கோஸ்டிங் போன்ற அம்சங்கள் நிறைந்த நவீன டேட்டிங் கலாச்சாரத்தின் கணிக்க முடியாத தன்மை, ஒரு புதிய சிந்தனையை எழுப்பியுள்ளது.

மடகாஸ்கரில் ராணுவப் புரட்சிக்குப் பிறகு கர்னல் ராண்ட்ரியானிரினா அதிபராகப் பதவியேற்பு

முன்னாள் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா நாட்டை விட்டுத் தப்பி ஓடிய நிலையில், ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, ராணுவ கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) மடகாஸ்கரின் புதிய அதிபராகப் பதவியேற்றார்.