LOADING...
ஏப்ரல் 1 முதல் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் விலை உயர்வு! புதிய கட்டணம் எவ்வளவு? NHAI அறிவிப்பு
ஏப்ரல் 1 முதல் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் விலை உயர்வு

ஏப்ரல் 1 முதல் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் விலை உயர்வு! புதிய கட்டணம் எவ்வளவு? NHAI அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 15, 2026
12:52 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வோருக்காக அறிமுகப்படுத்திய ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. கடந்த 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ. 3,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது இதில் ரூ. 75 உயர்த்தப்பட்டுள்ளது. பழைய கட்டணம்: ₹3,000 புதிய கட்டணம்: ₹3,075 (ஏப்ரல் 1 முதல்) பயண வரம்பு: இந்த பாஸ் மூலம் ஒரு ஆண்டில் 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்கலாம். இதன் மூலம் ஒரு முறை சுங்கச்சாவடியைக் கடக்கத் தோராயமாக ₹15 மட்டுமே செலவாகும்.

பயன்பாடு

யார் இந்த பாஸைப் பயன்படுத்தலாம்?

இந்த வருடாந்திர பாஸ் வசதி சொந்த உபயோக வாகனங்களுக்கு (கார், வேன் மற்றும் ஜீப்) மட்டுமே பொருந்தும். வணிக ரீதியான வாகனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வராது. அவை வழக்கமான சுங்கக் கட்டண முறையையே பின்பற்ற வேண்டும். இந்தியாவில் தற்போது 98% சுங்கக் கட்டணங்கள் ஃபாஸ்டேக் மூலமே வசூலிக்கப்படுகின்றன. வருடாந்திர பாஸ் பயன்பாட்டில் மாநில வாரியான புள்ளிவிவரங்கள் இதோ: சண்டிகர்: 14% (முதலிடம்) தமிழ்நாடு: 12.3% (இரண்டாமிடம்) டெல்லி: 11.5% (மூன்றாமிடம்) சுமார் 28% கார் உரிமையாளர்கள் தனித்தனி கட்டணம் செலுத்துவதை விட இந்த வருடாந்திர பாஸ் முறையையே விரும்புவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

தெரிந்துகொள்ள வேண்டியவை

முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்த பாஸ் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மாநில அரசு நடத்தும் சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். 200 பயணங்கள் முடிந்தவுடன், ஃபாஸ்டேக் தானாகவே வழக்கமான கட்டண முறைக்கு மாறிவிடும். ஒரு ஆண்டில் 200 பயணங்களை முடிக்கவில்லை என்றால், மீதமுள்ள பயணங்கள் அடுத்த ஆண்டுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

Advertisement