Loading...
டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் முதல்வர் விஜய்: தமிழக வரலாற்றில் புதிய சாதனை; முழு விபரம்
டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு

டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் முதல்வர் விஜய்: தமிழக வரலாற்றில் புதிய சாதனை; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 31, 2026
07:45 pm

செய்தி முன்னோட்டம்

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF 2027) ஆண்டுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்துகொள்ளவுள்ளார். 2027 ஜனவரி 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான அழைப்பை ஏற்று அவர் பங்கேற்க உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதையும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் முதலமைச்சர்

தமிழக வரலாற்றில் முதல்முறையாகக் கலந்துகொள்ளும் முதலமைச்சர்

டாவோஸ் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒருவர் நேரடியாகக் கலந்துகொள்வது மாநில வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும்.

இதற்கு முன் ஆண்டும்தோறும் நடைபெற்ற மாநாடுகளில் தமிழ்நாட்டின் சார்பில் தொழில் துறை அமைச்சர்களான தங்கம் தென்னரசு மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரே பங்கேற்று மாநிலத்தின் தொழில் திறனைப் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு விளக்கி வந்தனர்.

தற்போது முதலமைச்சரே நேரடியாக செல்வதால், உலகளாவிய சிஇஓக்கள் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியில் தமிழ்நாட்டிற்கு புதிய கவனமும் மிகப்பெரிய அளவிலான முதலீடுகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு

மத்திய அரசின் ஆதரவின்மை குறித்து தவெக கடுமையான குற்றச்சாட்டு

மாநிலத்தின் முதலீட்டு விருப்பங்கள் குறித்துப் பேசிய தவெக செய்தித் தொடர்பாளர் எம்.சத்யகுமார், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசும் வெளியுறவு அமைச்சகமும் தமிழ்நாட்டிற்கு போதிய ஆதரவை வழங்குவதில்லை என சாடினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஆந்திரப் பிரதேசத்திற்கு (சந்திரபாபு நாயுடு தலைமை) முன்னுரிமை அளித்து மத்திய அரசு சாதகமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் தமிழக அரசு இதுவரை ₹1 லட்சம் கோடி அளவிலான முதலீட்டு உறுதிகளை பெற்றுள்ளதாகவும், அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT