Loading...
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய ஏஐ விதிகள்: டிராய் வரைவு அறிக்கை வெளியீடு; முழு விபரம்
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய ஏஐ வரைவு விதிகள் வெளியீடு

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய ஏஐ விதிகள்: டிராய் வரைவு அறிக்கை வெளியீடு; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2026
08:25 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) வெளியிட்டது. நெட்வொர்க் மேலாண்மை, டிராஃபிக் ஆப்டிமைசேஷன் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், தரவுப் பாதுகாப்பு மற்றும் அல்காரிதம் பிழைகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் அரசு வெளியிட்ட இந்தியா ஏஐ ஆளுமை கட்டமைப்பின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது.

ஆபத்து

ஆபத்து அடிப்படையிலான வகைப்பாடு

புதிய முன்மொழிவுகளின்படி, டெலிகாம் நிறுவனங்கள் தங்களது இயக்குநர் வாரியத்தின் ஒப்புதலுடன் உள்நாட்டு ஏஐ கொள்கையை உருவாக்க வேண்டும்.

நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து ஏஐ அமைப்புகளும் அவற்றின் ஆபத்துத் தன்மையைப் பொறுத்து உயர், நடுத்தர மற்றும் குறைந்த ஆபத்துடையவை என வகைப்படுத்தப்பட வேண்டும்.

மேலும், மூன்றாம் தரப்பு ஆப் அல்லது மென்பொருட்களைப் பயன்படுத்தினாலும், அவற்றின் மூலம் ஏற்படும் அனைத்து விதமான அசம்பாவிதங்களுக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமே முழு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாதிப்புகள்

பாதிப்புகள் குறித்த அறிக்கை மற்றும் மத்தியத் தரவுத்தளம் அமைத்தல்

ஏஐ அமைப்புகளில் ஏற்படும் சம்பவங்கள் ஆபத்தின் தீவிரத்தைப் பொறுத்து நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படும்.

இதில் அதிதீவிர மற்றும் உயர் பாதிப்பு ஏற்படுத்திய சம்பவங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டிராய் அமைப்பிடம் கட்டாயமாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஏஐ அமைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோரின் புகார்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்த விவரங்கள் அடங்கிய மத்தியத் தரவுத்தளத்தை நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏஐ பாதுகாப்புக் குழு

மனித மேற்பார்வை மற்றும் ஏஐ பாதுகாப்புக் குழு உருவாக்கம்

ஏஐ அமைப்புகளின் பிழைகளைக் குறைக்க அனைத்து செயல்பாடுகளிலும் மனித மேற்பார்வை இருக்க வேண்டும் என டிராய் வலியுறுத்தியுள்ளது.

நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய ஏஐ ஆளுமை மற்றும் பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட வேண்டும்.

இந்த குழு குறைந்தது ஆண்டிற்கு ஒருமுறையாவது ஏஐ அமைப்புகளின் செயல்பாட்டை ஆய்வு செய்து திருத்தங்களை மேற்கொள்ளும்.

வரைவு அறிக்கையின் மீது பங்குதாரர்கள் நவம்பர் 27 வரை தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT