Loading...
மீண்டும் ஹிட்மேன் கையில் கேப்டன்சி; ஹர்திக் பாண்டியா விலகல்? மும்பை இந்தியன்ஸ் அதிரடி முடிவு
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மீண்டும் ரோஹித் ஷர்மா நியமனம் செய்யப்படுவார் என தகவல்

மீண்டும் ஹிட்மேன் கையில் கேப்டன்சி; ஹர்திக் பாண்டியா விலகல்? மும்பை இந்தியன்ஸ் அதிரடி முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2026
08:09 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது கேப்டன்சியில் அதிரடி மாற்றங்களை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவையே மீண்டும் கேப்டனாக நியமிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, அணி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று ரோஹித் ஷர்மா மீண்டும் கேப்டன்சியை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியாவின் பின்னடைவும் வர்த்தக வாய்ப்புகளும்

ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் கடந்த மூன்று சீசன்களில் (2024, 2025, 2026) மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே ஒரு முறை மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

கடந்த சீசனில் 14 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்துப் பின்னடைவைச் சந்தித்தது.

இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவை வேறு அணிக்கு வர்த்தகம் செய்ய மும்பை நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் அவரை வாங்கப் போட்டியிடுகின்றன.

புதிய பயிற்சியாளர் குழு

திலக் வர்மா பரிந்துரை மற்றும் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

ஆரம்பத்தில் கேப்டன் பொறுப்பிற்கு இளம் வீரர் திலக் வர்மாவின் பெயரை ரோஹித் ஷர்மா பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், அணியை சீரமைக்க ரோஹித்தின் அனுபவமே தேவை என நிர்வாகம் அவரை வற்புறுத்திக் சம்மதிக்க வைத்துள்ளது.

புதிய பயிற்சியாளர்கள் நியமனத்தின் போதும் ரோஹித்தின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கீரன் பொல்லார்ட் தலைமைப் பயிற்சியாளராகவும், ராபின் உத்தப்பா பேட்டிங் பயிற்சியாளராகவும், மிட்செல் மெக்லெனகன் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மினி ஏலம்

2027 மினி ஏலம் மற்றும் மும்பை இந்தியன்ஸின் எதிர்காலத் திட்டம்

டிசம்பர் 16 அன்று கோவாவில் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக, நவம்பர் 15-க்குள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஹர்திக் பாண்டியா அணி மாறாத பட்சத்தில், ரோஹித்தின் தலைமையின் கீழ் விளையாட அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரோஹித் ஷர்மாவின் அனுபவம் வாய்ந்த தலைமை மற்றும் புதிய பயிற்சியாளர்கள் குழுவின் வழிகாட்டுதலில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது 6-வது கோப்பையைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரமாகத் தயாராகி வருகிறது.

ADVERTISEMENT