தவெக: செய்தி
"கோட்டையை கைப்பற்றுவோம்": 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த TVKதொண்டர்களுக்கு விஜய் கட்டளை
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், இன்று தனது அரசியல் பயணத்தின் மூன்றாவது ஆண்டில் நுழைகிறது.
"விசில் போடு!": விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (TVK), தனது முதல் தேர்தல் பயணத்திற்கான முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கரூர் விபத்து வழக்கு: டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நடிகர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.
டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகும் விஜய்! கரூர் சம்பவத்தில் அதிரடி திருப்பம்
தமிழக வெற்றிக் கழகத்தின்(TVK) தலைவரும் நடிகருமான விஜய், கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராக உள்ளார்.
திமுக ஒரு 'தீய சக்தி': ஈரோட்டில் தவெக விஜய் அதிரடி முழக்கம்
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச் சாடினார்.
ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு TVK விஜய்க்கு காவல்துறை அனுமதி: 84 கடுமையான நிபந்தனைகள் விதிப்பு
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவருமான விஜய்யின் கட்சி சார்பில், ஈரோட்டில் வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திற்கு, ஈரோடு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
72 நாட்களுக்கு பின்னர் மக்களை சந்தித்த விஜய்: புதுச்சேரியில் பேசியது என்ன?
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சுமார் 72 நாட்களுக்கு பிறகு மீண்டும் அரசியல் கூட்டத்தில் இன்று விஜய் கலந்துகொண்டார்.
புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு TVK கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது!
கரூர் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு பிறகு, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சியின் முதல் மாபெரும் அரசியல் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் செங்கோட்டையன்; முக்கிய பதவியை வழங்கினார் விஜய்
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) வியாழக்கிழமை (நவம்பர் 27) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
சேலத்தில் விஜயின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு; காவல்துறை சொன்ன காரணம் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கட்சி நிர்வாகிகளால் கோரப்பட்ட மூன்று இடங்களுக்கான அனுமதியை சேலம் மாநகரக் காவல்துறை மறுத்துள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்புப் பயணம்: டிச. 4-இல் மீண்டும் தொடக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் நடிகர் விஜய், தன்னுடைய மக்கள் சந்திப்புப் பயணத்தை டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் தொடங்கவுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
'எனது கருத்தை விஜய்க்கு எதிராகத் திசைதிருப்ப வேண்டாம்': கரூர் சம்பவம் குறித்து அஜித்குமார் அறிக்கை
கரூர் தமிழக வெற்றிக் கழக (தவெக) பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து தான் கூறிய கருத்தை, தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராகத் திசை திருப்ப வேண்டாம் என்று நடிகர் அஜித்குமார் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா வலைதளத்தில் ஆடியோ அடங்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: SOP விதிகளை வகுக்கும் தமிழக அரசு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் நடத்திய கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கடுமையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"முழு அதிகாரமும் விஜய்க்கே!" - த.வெ.க. பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
கரூர் சம்பவத்தில் கற்ற பாடம்; தவெக தொண்டரணிக்கு ஓய்வு பெற்ற ஐஜி தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு
கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களை இன்று மகாபலிபுரத்தில் சந்திக்கிறார் TVK தலைவர் விஜய்
கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் (TVK) பொதுக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று (அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மகாபலிபுரத்தில் வைத்து விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்
சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சோகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அன்று சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றி கழகம் அங்கீகரிக்கப்படாத கட்சியா? அப்படியென்றால் என்ன?
கரூரில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, 'தமிழக வெற்றி கழகம்' (TVK) என்ற அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
TVK கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தாக தகவல்
கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், தனி நபர் ஆணையம் மற்றும் SIT நிலைமை என்ன?
கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
கரூரில் நடந்த TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம்
கரூரில் நடந்த தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) இன்று விசாரித்துள்ளது.
"நான் உங்களுடன் இருக்கிறேன், இருப்பேன்": கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசும் TVK விஜய்
நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், கரூரில் நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலமாக பேசினார்.
கரூர் விபத்தால் பின்னடைவு: தவெக உள்கட்டமைப்பை மாற்றியமைக்க விஜய் தீவிரம்?
கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக)மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்ஜாமீன் கோரி தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், நிர்மல் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நேரில் ஆய்வு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நேரில் ஆய்வு மேற்கொண்டது.
கரூர் விபத்தை விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
கரூரில் விஜய் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் செப்டம்பர் 27 ஆம் தேதி மேற்கொண்ட பிரச்சாரங்களின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்து கொண்ட அரசியல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
Karur Stampede எதிரொலி: அடுத்த இரண்டு வாரங்களுக்கான TVK விஜய் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தவெக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
"விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது": கரூர் விபத்து குறித்து செந்தில் பாலாஜி
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு, நடிகர் விஜய்யின் வருகை நேரம் மற்றும் அவரது கட்சி சார்பில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறைபாடுகளே காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
"உண்மை விரைவில் வெளி வரும்: கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் வெளியிட்ட முதல் வீடியோ
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததைத்தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம்(தவெக) தலைவர் விஜய் தனது முதல் காணொளி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
TVK கரூர் பொதுக்கூட்டம்: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனு
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரப் பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக, தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
தவெக பொதுச்செயலாளர் இன்று நள்ளிரவுக்குள் கைது செய்யப்படலாம் என தகவல்
கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் என்.ஆனந்தை திங்கட்கிழமை (செப்டம்பர் 29) நள்ளிரவுக்குள் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல்; NDA பிரதிநிதிகள் குழு அமைப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
TVK பேரணி கரூர் கூட்ட நெரிசல்: நீதிமன்றத்தில் TVK சார்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் என்ன?
கடந்த சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக (தமிழக வெற்றி கழகம்) பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.
கரூர் சம்பவம்: மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கை எடுப்பதில் தாமதம்; சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக தவெக திட்டம்
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
TVK Stampede கரூர் துயர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மரண மொத்த எண்ணிக்கையை 41 ஆக உயர்த்தியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி; நாளை தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு செய்யப்படுவாதாக அறிவிப்பு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சோக நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தமிழ்நாடு முழுவதும் முழு கடை அடைப்பு கடைபிடிக்கப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 31 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தை ஒட்டி, கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டோருக்கான நிதியுதவியை அறிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல்: தவெக நிர்வாகிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் தொடர்பாக, காவல்துறை தற்போது தவெக கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.