'எனது கருத்தை விஜய்க்கு எதிராகத் திசைதிருப்ப வேண்டாம்': கரூர் சம்பவம் குறித்து அஜித்குமார் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
கரூர் தமிழக வெற்றிக் கழக (தவெக) பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து தான் கூறிய கருத்தை, தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராகத் திசை திருப்ப வேண்டாம் என்று நடிகர் அஜித்குமார் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா வலைதளத்தில் ஆடியோ அடங்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கரூர் சம்பவம் பற்றிப் பேசிய நடிகர் அஜித்குமார், "இந்தச் சம்பவத்திற்குத் தனி நபருக்கு மட்டும் பொறுப்பில்லை, இதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. நாம் சரியான அளவில் விதிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
விஜய்
விஜய்க்கு எதிரான கருத்து என சர்ச்சை
அஜித்தின் இந்தக் கருத்து, விஜய் மற்றும் அவரது கட்சிக்கு எதிராகப் பலரால் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித்குமார் வெளியிட்டதாகக் கூறப்படும் சாணக்யா செய்திக் குறிப்பில், "என்னுடைய நல்லெண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை. அதை அஜித்துக்கும், விஜய்க்குமான மோதல், ரசிகர்களுக்குமான மோதல் என மாற்றி விட்டார்கள். நாம் நச்சு கலந்த சமூகமாக மாறி விட்டோம்." என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், கரூர் விபத்தை நீண்ட நாட்களாக நடக்கக் காத்திருந்த விபத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நான் உட்பட அனைவருக்கும் பொதுவான விதிகள் உள்ளன என்று அஜித்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சந்தோஷம்
அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்து
தனது தந்தை இறந்தபோது அவரது உடலை வீடியோ எடுக்க ஊடகங்கள் முயன்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் இறுதியில், "என்னுடைய இந்த பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லது தான் நினைத்திருக்கிறேன். எல்லோருமே அவரவர் குடும்பங்களுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ நான் வாழ்த்துகிறேன்." என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Ajith × Rangaraj Pandey Exclusive | Acting | Car Racing | TVK Vijay | Politics | India | Civic Sense
— சாணக்யா (@ChanakyaaTv) November 6, 2025
Watch--> https://t.co/M9tum8Ggtj #TVKVijay #AjithKumar #AjithKumarRacing #Chanakyaa pic.twitter.com/QMv9YA9LuY