LOADING...
சேலத்தில் விஜயின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு; காவல்துறை சொன்ன காரணம் என்ன?
சேலத்தில் விஜயின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

சேலத்தில் விஜயின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு; காவல்துறை சொன்ன காரணம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 20, 2025
05:28 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கட்சி நிர்வாகிகளால் கோரப்பட்ட மூன்று இடங்களுக்கான அனுமதியை சேலம் மாநகரக் காவல்துறை மறுத்துள்ளது. சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், அல்லது சீலநாயக்கன்பட்டி மைதானம் ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றில் கூட்டம் நடத்த அனுமதி கோரி சேலம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. டிசம்பர் 4ஆம் தேதிக்கு அனுமதி மறுக்கக் காரணம் குறித்து காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவும், டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமும் வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

மாற்று தேதி

மாற்று தேதிகளில் கூட்டம் 

மேலே குறிப்பிட்ட காரணங்களால், டிசம்பர் 4 ஆம் தேதி தவிர்த்து மற்ற தேதிகளில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்றும், கூட்டத்தின் எண்ணிக்கையைத் தெரிவித்தால் அதற்கேற்பப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை பதிலளித்துள்ளது. தொடர்ந்து மக்கள் மத்தியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் தவெக தலைவர் விஜயின் அடுத்த கட்டப் பிரச்சாரத் திட்டம் குறித்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாற்றுத் தேதியில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post