LOADING...
தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி
தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2025
03:12 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் செப்டம்பர் 27 ஆம் தேதி மேற்கொண்ட பிரச்சாரங்களின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உட்பட நான்கு நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சிபிஐ விசாரணை கோரிய பொதுநல மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அதே நாளில் நாமக்கல்லில் நடந்த பிரச்சாரத்தின்போது, திரையரங்கம் அருகேயுள்ள மருத்துவமனை மீது தவெகவினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

காவல்துறை வழக்குப்பதிவு

இது தொடர்பாக, தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் மாவட்டக் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில், சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, சதீஷ்குமார் தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அரசியல் காரணங்களுக்காகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டது. ஆனால், காவல்துறை சார்பில் வாதாடியபோது, நாமக்கல்லில் நடந்த தாக்குதலால் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொதுச் சொத்து சேதம் அடைந்துள்ளதாக புகைப்பட ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சதீஷ்குமார் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக மேலும் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.