LOADING...
"நான் மட்டும் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்டிருப்பார்": 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ட்ரம்ப்
பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்படுவதிலிருந்து தான்தான் காப்பாற்றியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

"நான் மட்டும் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்டிருப்பார்": 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ட்ரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
09:57 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையை ஆற்றிய டொனால்ட் ட்ரம்ப், கடந்த 10 மாதங்களில் தான் 8 சர்வதேச போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பாக, கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த அவரது கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இந்தியாவின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கொல்லப்படுவதிலிருந்து தான்தான் காப்பாற்றியதாக ட்ரம்ப் முதன்முறையாக தெரிவித்துள்ளார். "என்னுடைய ஈடுபாடு மட்டும் இல்லையென்றால் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என்று 35 மில்லியன் மக்கள் கூறினர்" என்று ட்ரம்ப் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

போர்கள்

டிரம்ப்பால் 'தடுத்த நிறுத்தப்பட்ட' 8 போர்கள்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அணுஆயுதப் போர் அச்சுறுத்தல் மட்டுமின்றி, பின்வரும் மோதல்களையும் தான் தீர்த்து வைத்ததாக அவர் பட்டியலிட்டுள்ளார்: இஸ்ரேல் - ஹமாஸ் இஸ்ரேல் - ஈரான் எகிப்து - எத்தியோப்பியா செர்பியா - கொசோவோ ருவாண்டா - காங்கோ குடியரசு ஆர்மீனியா - அஜர்பைஜான் கம்போடியா - தாய்லாந்து நான்கு நாட்கள் நீடித்த அந்தப் போரில் ட்ரம்ப் அமைதி தூதராக செயல்பட்டதாக கூறுவதை இந்தியா ஏற்கனவே பலமுறை மறுத்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டபோது,"போர் நடந்தபோது ட்ரம்ப் அமெரிக்காவில் இருந்தார்" என்று நையாண்டியாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லை என்பதில் புது டெல்லி உறுதியாக உள்ளது.

Advertisement