LOADING...
தொடர்ந்து அதிகரிக்கிறது தங்கம் விலை; தங்கம் வாங்க இது உகந்த நேரமா?
தொடர்ந்து அதிகரிக்கிறது தங்கம் விலை

தொடர்ந்து அதிகரிக்கிறது தங்கம் விலை; தங்கம் வாங்க இது உகந்த நேரமா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
10:48 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, இன்றும் புதன்கிழமை (பிப்ரவரி 25) அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹40 அதிகரித்து ₹14,930 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹320 அதிகரித்து ₹1,19,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹44 அதிகரித்து ₹16,288 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹352 அதிகரித்து ₹1,30,304 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹35 அதிகரித்து ₹12,765 ஆகவும், ஒரு சவரன் ₹280 அதிகரித்து ₹1,02,120 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹295.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,95,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement