தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் செங்கோட்டையன்; முக்கிய பதவியை வழங்கினார் விஜய்
செய்தி முன்னோட்டம்
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) வியாழக்கிழமை (நவம்பர் 27) அதிகாரப்பூர்வமாக இணைந்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை தனது எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனுடன், அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். கூடுதலாக, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஹசானா உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.
பொறுப்பு
செங்கோட்டையனுக்குப் புதிய பொறுப்பு
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனுக்கு, ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பை விஜய் வழங்கியுள்ளார். மேலும், கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த நிர்வாகியின் இணைவு, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. கட்சியில் இணைந்த செங்கோட்டையன் மற்றும் மற்ற நிர்வாகிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING || த.வெ.க- வில் இணைந்தார் செங்கோட்டையன் | pic.twitter.com/xvlSzLOuAI
— Polimer News (@polimernews) November 27, 2025