LOADING...
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், தனி நபர் ஆணையம் மற்றும் SIT நிலைமை என்ன?
உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், தனி நபர் ஆணையம் மற்றும் SIT நிலைமை என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2025
05:49 pm

செய்தி முன்னோட்டம்

கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், முன்னதாக தமிழக அரசு அறிவித்த தனி நபர் ஆணையம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த SIT ஆகியோரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் இவ்விரண்டையும் நிறுத்துவதாக அணையிட்டுள்ளது. மேலும், இரு விசாரணை அமைப்புகளும் FIR காப்பி, சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்ட வழக்கு சம்மந்தப்பட்ட அனைத்தையும் CBI குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் CBI விசாரணை குழுவிற்கு உரிய தளவாட உதவி மற்றும் ஒத்துழைப்பு தருமாறு மாநில அரசையும் பணித்துள்ளது.

உத்தரவு

விசாரணையை கண்கணிக்க SIT 

மேலும் விசாரணையை கண்காணிக்க சிறப்பு விசாரணைக் குழு - ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் - சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை இது கண்காணிக்கும் எனவும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த குழுவில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பார்கள். உச்ச நீதிமன்றம், சிபிஐ தனது விசாரணையின் மாதாந்திர அறிக்கைகளை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.