Loading...

ஈரான்: செய்தி

பிளைதுபாய் விமான விபத்து சதி: ஈரானுக்குத் தொடர்பா? டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் சென்ற பிளைதுபாய் FZ1073 விமானத்தை காக்பிட்டில் வைத்து ஓமன் நாட்டை சேர்ந்த சக விமானி கீழே சாய்த்து விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

29 Sep 2026
• அமெரிக்கா

7 மாதப் போருக்கு முற்றுப்புள்ளி? மீண்டும் தொடங்கும் அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஏழு மாதங்களாக தொடர்ந்து வரும் தீவிரப் போரை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளும் மத்தியஸ்தர்கள் வாயிலாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

28 Sep 2026
• பிரிட்டன்

பிரிட்டன் RAF விமான தளம் அருகே வெடிகுண்டு தாக்குதல் சதி: ஈரானுக்கு தொடர்பா?

பிரிட்டனில் அமெரிக்காவின் அதிநவீன நீண்டதூர போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள RAF ஃபேர்ஃபோர்ட் விமானப்படை தளத்தின் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில், ஈரானின் பின்னணி குறித்து பயங்கரவாத எதிர்ப்பு போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

28 Sep 2026
• அமெரிக்கா

அமெரிக்கா உடன் போருக்கும் தூதரக பேச்சுவார்த்தைக்கும் ஈரான் தயார்: வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு

அமெரிக்காவுடனான போர் மீண்டும் தீவிரமடைந்தால் அதை எதிர்கொள்ள ஈரான் முழுமையாகத் தயாராக உள்ளது, அதேவேளையில் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளையும் அடைக்கவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

'கடைசி மூச்சு வரை போராடுவோம்': பேச்சுவார்த்தைக்கு ஒத்துவராத டிரம்ப்பிற்கு ஈரானிய அதிபர் பதிலடி

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் முன்வைத்த 7 நாட்கள் கொண்ட அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தார் டிரம்ப்! அமெரிக்கத் தேர்தலுக்குப் பின் மீண்டும் ஈரான் மீது குண்டுவீச்சு?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் 7 நாள் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

25 Sep 2026
• அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் தணியுமா? ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் விதித்த 7 நாட்கள் கெடு

அமெரிக்காவுடனான மோதல்களை முடிவுக்கு கொண்டு வரவும், சர்வதேச கடல் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் ஈரான் 7 நாட்கள் கொண்ட புதிய நிபந்தனைத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

25 Sep 2026
• அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமா? ஹார்முஸ் நீரிணை மற்றும் பொருளாதாரத் தடை நீக்கம் குறித்து நியூயார்க்கில் ரகசிய பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் தீவிர இரகசிய ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

25 Sep 2026
• ஐநா சபை

ஐ.நா-வில் பெரும் பரபரப்பு: நெதன்யாகு பேசத் தொடங்கியதும் கதவைத் திறந்து வெளிநடப்பு செய்த தலைவர்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரை ஆற்றத் தொடங்கியபோது, பல நாடுகளை சேர்ந்த ராஜதந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

25 Sep 2026
• அமெரிக்கா

'மனிதக் கட்டுப்பாட்டில் AI இருக்க வேண்டும்': டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வைத்த முக்கிய கோரிக்கை

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே உயர்மட்ட இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.

டிரம்பிற்குப் பதிலடி கொடுக்க பாலையா நடித்த தெலுங்குப் பட காட்சியை பயன்படுத்திய ஈரான்; எக்ஸ் தளத்தில் வைரல்

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை முற்றிலும் அழிக்கப்போவதாகவும் அல்லது மீள முடியாத அளவிற்கு அவர்களை நரகத்திற்குள் தள்ளப்போவதாகவும் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

24 Sep 2026
• ஐநா சபை

'கடைசி மூச்சு வரை போராடுவோம்!' ஐநா சபையில் புகைப்படங்களைக் காட்டி முழங்கிய ஈரான் அதிபர்; அமெரிக்க பிரதிநிதிகள் வெளிநடப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தேவையில்லாமல் போரை திணித்துள்ளதாக கடும் குற்றம்சாட்டினார்.

23 Sep 2026
• அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையா? ஐ.நா சபை கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச் சபைக் கூட்டத்தில்(UNGA) இரு நாடுகளின் உயர் அதிகாரிகளிடையே 3 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

22 Sep 2026
• விமானம்

ஈரான் விமானங்களுக்கு சர்வதேச தடை: அமெரிக்காவின் கெடுவால் உலகம் முழுவதும் இயக்கம் முடங்கும் அபாயம்

ஈரானின் அனைத்து விமான நிறுவனங்களின் சேவைகளையும் உலகம் முழுவதும் புதன்கிழமை (செப்டம்பர் 23) முதல் முழுமையாக முடக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஊடகப் புறக்கணிப்பால் அமெரிக்காவில் அதிர்ச்சி; மைக் இல்லாமல் பேசிய டொனால்ட் டிரம்ப்

CNN, MS NOW மற்றும் Politico ஆகியவற்றுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முதன்மை தொலைக்காட்சி அமைப்புகள் டிரம்பின் நிகழ்வுகளை புறக்கணித்துள்ளன.

21 Sep 2026
• அமெரிக்கா

'அமெரிக்கா மீது தாக்குதல் இல்லை, ஆனால்...': டிரம்பிற்கு ஹவுதி கொடுத்த வாக்குறுதி

செங்கடல் பகுதியில் பயணம் செய்யும் அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திடம் உறுதியளித்துள்ளனர்.

21 Sep 2026
• அமெரிக்கா

'ஒட்டுமொத்த நாட்டையும் அழித்துவிடுவேன்...': டிரம்பின் பகிரங்க எச்சரிக்கையும், ஈரானின் 7 நிபந்தனைகளும்

ஈரானுடனான மோதல் போக்கில் அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், விரைவில் மிகப்பெரிய சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

20 Sep 2026
• அமெரிக்கா

7 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் அல்லது போருக்குத் தயாராகவும்! கட்டார் வழியாக அமெரிக்காவிற்கு ஈரான் அனுப்பிய தூது

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கத்தார் நாட்டின் தூதர்கள் வழியாக ஈரான் 7 முக்கிய நிபந்தனைகளை அனுப்பியுள்ளது.

18 Sep 2026
• ஐநா சபை

ஐநாவில் ஈரான் மீதான தடைகள் கண்காணிப்பு: அமெரிக்க தீர்மானத்தை வீட்டோ செய்த ரஷ்யா, சீனா

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள ஐநா தடைகள் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் நிபுணர்கள் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துள்ளன.

16 Sep 2026
• ரஷ்யா

இந்தியாவிற்கு 100% வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம்? ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் புதிய சர்ச்சை

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது 100% வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நடைமுறை சார்ந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

14 Sep 2026
• அமெரிக்கா

ஈரானில் பாராசூட் இன்றி விழுந்த அமெரிக்க அதிகாரி மீண்டது எப்படி? அதிர்ச்சி வாக்குமூலம்

ஈரான் வான்வெளியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் எஃப்-15ஈ (F-15E) போர் விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதில், எதிரி நாட்டின் மலைப்பகுதியில் பாராசூட் சேதமடைந்து விழுந்த அமெரிக்க விமானப் படை அதிகாரி, 50 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி பின்னணியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

புடின் ஒருபுறம், ஈரானின் பெசெஷ்கியான் மறுபுறம்! சிவப்புக் கம்பளத்தில் கை கோர்த்து நடந்த பிரதமர் மோடி

புதுடெல்லியில் நடைபெற்று வரும் 2026 பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோருடன் சிவப்புக் கம்பளத்தில் கை கோர்த்து நடந்து வந்த புகைப்படம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 Sep 2026
• டெல்லி

டெல்லி BRICS மாநாடு: பிரத்யேக விஐபி கார்களைத் தவிர்த்து ஒரே பேருந்தில் பயணிக்கும் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள்

டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டை முன்னிட்டு, டெல்லி மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுவதை தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.

அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பின் ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும்: டொனால்ட் ட்ரம்ப் கருத்து

ஈரானுடனான ராணுவ மோதல் ஏழாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு இப்போர் "உடனடியாக முடிவுக்கு வரும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $100 வரை உயர்வு: பின்னணியும் காரணங்களும்

சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $100-ஐ நெருங்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

09 Sep 2026
• ஓமான்

5 எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய ஈரான்

செவ்வாயன்று ஓமான் வளைகுடாவிலும் ஈரானின் கார்க் தீவுக்கு அருகிலும் அமெரிக்கா ஐந்து எண்ணெய் கப்பல்களை தாக்கியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் Dive-LD என்று அழைக்கப்படும் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா நீருக்கடியில் செல்லும் வாகனத்தை ஈரான் கடற்படை கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

09 Sep 2026
• போர்

அமெரிக்க போர்க்கப்பலை குறிவைத்த ஈரான்; பதிலடி தாக்குதலில் 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் அழிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படை போர்க்கப்பலை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது.

08 Sep 2026
• பிரிக்ஸ்

புதுடெல்லியில் உலக தலைவர்கள் பங்கேற்கும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகள்

இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ்(BRICS) உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

08 Sep 2026
• பிரிக்ஸ்

'அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி...': இந்தியாவைப் புகழ்ந்து தள்ளிய ஈரான்

புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்தியாவுடனான உறவை "மிகவும் நன்று" எனக் குறிப்பிட்டிருக்கும் ஈரான், இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மைக்குத் தான் "மிகப்பெரிய முக்கியத்துவம்" அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய 'தடை செய்யப்பட்ட மண்டலம்': ஈரானின் முடிவும், பெட்ரோல் விலை உயர்வும்

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே புதிய 'தடை செய்யப்பட்ட மண்டலம்' அமைக்கப்படும் என ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் அறிவித்துள்ளார்.

06 Sep 2026
• கடற்படை

மீண்டும் வெடித்தது கடல் போர்! அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரானிய ஏவுகணை வீச்சு; அமெரிக்கா பதிலடி எச்சரிக்கை

அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் தாக்குதல் போர்க்கப்பல் ஆகியவற்றைக் குறிவைத்து ஈரானியப் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) விண்வெளிப் பிரிவு பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது! பிக்ஏக்ஸ் மலையைத் தாக்க அமெரிக்கா திட்டம்; டிரம்ப் புதிய எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் பிக்ஏக்ஸ் நிலத்தடி அணு ஆயுத மையத்தை அமெரிக்க ராணுவம் மிக விரைவில் தாக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

03 Sep 2026
• அமெரிக்கா

7 மாதங்களுக்குப் பின் திடீர் திருப்பம்: ஈரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் ரகசியத் திட்டம்

ஈரானுடனான ராணுவ மோதல் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மூத்த அதிகாரிகளுடன் ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹார்முஸ் நீரிணையில் அக்னிப் பரீட்சை: 40 வணிக கப்பல்களை பாதுகாப்பாக கடத்திய அமெரிக்கப் படை

ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதாரத் தடை: இந்தியாவிற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை

SCO உச்சிமாநாட்டின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்துப் பேசிய சில நாட்களில், ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

02 Sep 2026
• திருமணம்

ஈரானில் திருமண விழாவில் விழுந்த அமெரிக்க ஏவுகணை பாகங்கள்: சிறுவன் உட்பட 4 பேர் பரிதாப பலி

தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள கூஹெஸ்டாக் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு குடியிருப்பு வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்து தாக்கியதில், சிறுவன் ஒருவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

01 Sep 2026
• அமெரிக்கா

ஈரானுக்கு எதிராக அணுஆயுதமா? பத்திரிகையாளர் கேள்வியால் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் 6-வது மாதமாக நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலும் நிராகரித்துள்ளார்.

ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் அதிரடி சந்திப்பு! எஸ்சிஓ மாநாட்டில் ஈரான் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பேஷெஷ்கியான் இடையே திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்: ஜோர்டானில் பதற்றம்

ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லாராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) திங்கள்கிழமை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்! இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தலைவர் முஜ்தபா காமேனி பரபரப்பு கடிதம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், ஈரானின் உச்ச மதத் தலைவர் முஜ்தபா காமேனி பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு முக்கிய எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பியுள்ளார்.

28 Aug 2026
• அமெரிக்கா

ஹார்முஸ் ஜலசந்தியில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றம்: அமெரிக்க சென்ட்காம் தளபதி அறிவிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிலவி வரும் சூழலில், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையினரால் (IRGC) வைக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடிகளை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக அகற்றியுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி வருவாய் பகிர்வில் ஈரான் ஓமனுடன் ஒப்பந்தம்! அமெரிக்கா ஒப்புதல் அளிக்குமா?

சர்வதேசக் கடல்வழி எண்ணெய் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் கட்டண வருவாயைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஈரானும் ஓமனும் ஓர் உடன்பாட்டிற்கு வந்துள்ளன.