LOADING...
ஈரானை குறிவைக்கும் ட்ரம்ப்; இந்த வாரமே போர் தொடங்கக்கூடும் என பிரிட்டனுக்கு பறந்த எச்சரிக்கை
தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக தகவல்

ஈரானை குறிவைக்கும் ட்ரம்ப்; இந்த வாரமே போர் தொடங்கக்கூடும் என பிரிட்டனுக்கு பறந்த எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 19, 2026
08:40 am

செய்தி முன்னோட்டம்

ஈரானின் அணுசக்தி மையங்கள் நிலத்தடியில் பதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் மீது இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை என CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் விமானப்படை மற்றும் கடற்படை தளவாடங்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கை, கடந்த ஆண்டு நடைபெற்ற 12 நாள் மோதலை விட பெரிய அளவில் பல வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்

ட்ரம்ப்பின் ஆலோசனை மற்றும் UK-விற்கு பறந்த எச்சரிக்கை

தாக்குதல் குறித்து ட்ரம்ப் தனது ஆலோசகர்கள் மற்றும் கூட்டாளி நாடுகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். "அவர் இது குறித்து ஆழமாகச் சிந்தித்து வருகிறார்" என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி போரை தொடங்கக் கூடாது என அமெரிக்க பிரதிநிதிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். தாக்குதல் திட்டங்களுக்கு முக்கியத் தளமாக விளங்கும் 'டியாகோ கார்சியா' ராணுவத் தளத்தின் இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்கக் கூடாது என பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரை ட்ரம்ப் எச்சரித்துள்ளார். "ஈரான் போன்ற ஆபத்தான நாடுகளை ஒழிக்க இந்தத் தளம் மிக அவசியம். ஒருவேளை ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால் அது பிரிட்டனையும் பாதிக்கும்" என அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

பேச்சுவார்த்தை

உயர்மட்ட ராஜதந்திர பேச்சுவார்த்தைகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ வரும் பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் சென்று பிரதமர் நெதன்யாகுவை சந்திக்க உள்ளார். ஈரானின் பேச்சுவார்த்தை நிலைப்பாடு குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதுவரை ட்ரம்ப் ராணுவ நடவடிக்கையைத் தள்ளி வைப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Advertisement