
அமெரிக்கா அதிபர் டிரம்ப்-ஐ அவரது வீட்டிலேயே வைத்து கொல்ல சதி திட்டமா? ஈரான் மூத்த அதிகாரி எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் உள்ள அவரது ஓய்வு இல்லத்தில் (மார்-அ-லாகோ) கூட பாதுகாப்பாக இல்லை என ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகரான ஜவாத் லாரிஜானி, ஈரானிய அரசு ஊடகத்தில் பேசும்போது, "மார்-அ-லாகோவில் இனிமேல் sunbath செய்வது டிரம்புக்கு சாத்தியமில்லை. அவர் சூரிய ஒளியில் படுத்திருக்கும்போது, ஒரு சிறிய ட்ரோன் அவரை தாக்கலாம் - இது மிகவும் எளிது," என்றார்.
நிதி திரட்டும் முயற்சி
ஆன்லைனில் நிதி திரட்டும் முயற்சி
இந்த அபாயகரமான அறிக்கையின் பின்னணியில், "அஹ்தே கோன்" (உறுதியின் காலம்) எனப்படும் ஒரு ஆன்லைன் நிதி திரட்டும் முயற்சியும் உள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 8 நிலவரப்படி, இதில் $27 மில்லியனுக்கு மேல் திரட்டப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் நோக்கம் - "கடவுளின் எதிரிகள் மற்றும் கமேனியின் உயிருக்கு அச்சுறுத்தும் எவரையும் நீதிக்கு கொண்டுவர" பரிசுத்தொகையை வழங்குவது என்று தளத்தின் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதில்
"அது ஒரு அச்சுறுத்தல்தான்" என டிரம்ப் பதில்
ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப், இந்தப் பேச்சு அச்சுறுத்தலாக கருதப்படுகிறதா என்ற கேள்விக்கு, "ஆமாம், அது ஒரு அச்சுறுத்தல்தான். ஆனால் அது உண்மையிலேயே அச்சுறுத்தலா என்பது தெரியவில்லை - ஒருவேளை அப்படியாயிருக்கும்," என பதிலளித்தார். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழி தாக்குதல்களும், ஈரானின் பழிவாங்கும் எச்சரிக்கைகளும் தெற்காசியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், டிரம்ப் மீண்டும் ஈரானுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க விருப்பம் காட்டியுள்ளதையும், ஆனால் ஈரானிய தலைவர்கள் இதை உறுதிப்படுத்தவில்லை என்பதையும் இந்நிலையில் குறிப்பிடத்தக்கது. முந்தைய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) சார்பாக டிரம்புக்கு எதிரான சதித்திட்டங்கள் சாத்தியமுள்ளதாக அமெரிக்கா நீண்ட காலமாக சந்தேகித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.