LOADING...
வானில் நான்கு நிலவுகளா? ரஷ்யாவில் தெரிந்த அதிசயக் காட்சி; இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மை என்ன?
ரஷ்ய வானில் தோன்றிய 4 நிலவுகள்

வானில் நான்கு நிலவுகளா? ரஷ்யாவில் தெரிந்த அதிசயக் காட்சி; இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மை என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 02, 2026
10:59 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று (பிப்ரவரி 1, 2026) இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் தோன்றுவது போன்ற ஒரு கண்கவர் காட்சி அரங்கேறியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வியப்படைந்ததோடு, இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். விண்வெளியில் ஒரே ஒரு நிலவு மட்டுமே இருக்கும் நிலையில், நான்கு நிலவுகள் தெரிந்தது ஒரு மாயத்தோற்றம் (Optical Illusion) ஆகும்.

பாரசெலீன்

பாரசெலீன் (Paraselene) என்றால் என்ன?

இந்த அதிசய நிகழ்வை அறிவியல் ரீதியாக 'பாரசெலீன்' (Paraselene) அல்லது 'மூன் டாக்' (Moon Dog) என்று அழைக்கிறார்கள். இது ஒரு வானியல் நிகழ்வு அல்ல, மாறாக வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளியியல் மாற்றமாகும். பூமியின் வளிமண்டலத்தில் மிக உயரத்தில் உள்ள மேகங்களில் (Cirrus clouds) அறுகோண வடிவத்திலான சிறிய பனிப் படிகங்கள் இருக்கும். நிலவொளி இந்த பனிப் படிகங்கள் வழியாக ஊடுருவிச் செல்லும்போது, அந்தப் படிகங்கள் ஒரு சிறிய 'பிரிசம்' (Prism) போலச் செயல்பட்டு ஒளியை வளைக்கின்றன. இவ்வாறு வளையும் ஒளியினால், உண்மையான நிலவிற்கு இருபுறமும் பிரகாசமான ஒளிப்புள்ளிகள் தோன்றுகின்றன. இது பார்ப்பதற்கு வானில் பல நிலவுகள் இருப்பது போன்ற மாயையை உருவாக்குகிறது.

சிறப்பம்சங்கள்

இந்த நிகழ்வின் சிறப்பம்சங்கள்

நாசா மற்றும் வானியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பாரசெலீன் நிகழ்வு சில தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த 'போலி நிலவுகள்' (Mock Moons) பொதுவாக உண்மையான நிலவிலிருந்து சுமார் 22 டிகிரி கோணத்தில் அமையும். இவை எப்போதும் நிலவு இருக்கும் அதே உயரத்தில் கிடைமட்டமாகத் தோன்றும். பனிப் படிகங்களின் அளவைப் பொறுத்து இவை செங்குத்தாக நீண்டு 'ஒளித் தூண்கள்' (Light Pillars) போலவும் காட்சியளிக்கலாம். சில நேரங்களில் இந்த ஒளிப்புள்ளிகள் மெல்லிய நிறங்களுடன் (நிலவிற்கு அருகில் சிவப்பு நிறமாகவும், வெளிப்புறத்தில் நீலம் அல்லது ஆரஞ்சு நிறமாகவும்) காணப்படலாம்.

Advertisement

பனிப்பிரதேசம்

பனிப்பிரதேசங்களில் ஏன் அதிகம் நிகழ்கிறது?

இத்தகைய நிகழ்வுகள் ரஷ்யா போன்ற கடும் குளிர் நிலவும் பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தற்போது நிலவும் கடுமையான உறைபனி மற்றும் வளிமண்டல குளிர்ச்சி காரணமாக, மேகங்களில் பனிப் படிகங்கள் அதிகமாக உருவானதே இந்த நான்கு நிலவுகள் தோன்றக் காரணமாக அமைந்தது. நிலவு அடிவானத்திற்கு மிக அருகில் இருக்கும்போது, வளிமண்டல ஒளிச்சிதறல் குறைவாக இருப்பதால் இந்த காட்சியை மிகவும் தெளிவாகக் காண முடியும்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement