Loading...
தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2026
11:07 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, புதன்கிழமை (ஆகஸ்ட் 12), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 அதிகரித்து ₹14,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 அதிகரித்து ₹1,13,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹54 அதிகரித்து ₹15,491 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹432 அதிகரித்து ₹1,23,928 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹50 அதிகரித்து ₹11,980 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 அதிகரித்து ₹95,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையில் மாற்றமின்றி தொடர்கிறது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹260 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,60,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT